Premium WordPress Themes

Saturday, 7 May 2011

பில்லேடனின் 5 புதிய வீடியோ; வெளியிட்ட அமெரிக்கா!(காணொளி இணைப்பு)

அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்ட ஒசாமா பில்லேடனின் 5 புதிய வீடியோ பதிவுகளை அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்ரகன் வெளியிட்டுள்ளது.. 

அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள 5 வீடியோவும் ஒசாமா இருந்த வீட்டில் பதிவானவை. 

வீடியோ பதிவு மூலம் ஒசாமா அபோதாபாத்தில் இருந்தது உறுதியாகி உள்ளது. 

 

தொலைக்காட்சியில் ஒசாமா செய்தி பார்ப்பது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது. 



ஒரு வீடியோவில் ஒசாமா பின்லேடன், தன்னைப் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்ப்பது போல் பதிவாகி உள்ளது. 



இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நிர்வாணமாய் ஒரு கலைநயம் (காணொளி இணைப்பு)


ரசனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாசமான  கலைநயத்தினை வெளிப்படுத்துகிறார் ஒரு பெண்மணி.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா அபாட் (mariya abad) என்னும் பெண்மனி தனது வெற்றுடலில் அதிகளவான ஒளிரும் வைரங்களால் ஆனா ஒவியத்தனை வரைந்து உலக சாதனை படைந்துள்ளார்.

பாரிஸ்தமிழ் வழங்கும் விநோதன செய்திகளின் வித்தியாசமான ஓர் கானொளி. அதாவது ஒரு தனி உடலில் அதிகளவான 30361 ஒளிரும் வைரங்களை பயன்படுத்தி ஓர் கிராமத்தில் சூரிய உதய காட்சியினை  ஓவியமாக வரைந்து  கின்னஸ் சாதனையாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மேற்கொண்டிருந்த சாதனையை முறியடிக்க மூன்று உதவியாளரின் உதவியுடனே இவ் புதிய சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு சாதனைக்கும் பின்னால் பல சோதனைகள் இருக்கும். 30631 வைர கற்களை உடம்பில் ஒட்டும் வரை மிகவும் பொறுமை காப்பது என்பது மிகவும் கடினமானது.  இப்பெண்மணியின் வெற்றி ரகசியமாக பொறுமையே இருந்துள்ளது.
அழகிய கிராமத்தின் சூரிய உதயத்தை நீங்களும் பார்த்து ரசிக்க... காணொளியை பாருங்கள்..

திருமலையில் தலை துண்டிக்கப்பட நிலையில் புலியின் உடலம் மீட்பு!

திருக்கோணமலை ஏ-15 வீதியின் 4ஆவது மை கல் பகுதியில் இன்று காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்டுப் புலி ஒன்று இன்று பிரதேச வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காட்டுப் புலியின் உடலை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவான மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து காடுப்புலியினை பார்த்துச் சென்றனர்.