skip to main |
skip to sidebar

தமிழ்த் தேசிய மனிதநேய செயற்பாட்டாளர் மீது திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் தமிழ் தேசியத்துக்காவும், மற்றும் மனிதநேயத்துக்காவும் பாடுபடும் முக்கிய செயற்பாட்டாளரான திரு தனம் (வயது48) அவர்கள் மீதே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
04.04.20011 அன்று இரவு 11.00 மணியளவில் அவர் தனது வாகனத்தை வீட்டிற்கு முன்னர் நிறுத்திவிட்டுப் பொருட்களை எடுத்துக்கொண்டு நின்றவேளை, ஏற்கனவே பதுங்கி நின்ற இருவர் ஹோக்கி விளையாடும் கட்டை ஒன்றின் மூலம் அவர் பின் தலையில் தாக்கியுள்ளனர்.
தன் நிலை இழந்து தரையில் வீழ்ந்த அவர் மீது சப்பாத்துக் கால்களால் உதைத்தும் உள்ளனர். தனம் அவர்களின் குரல்கேட்ட அவரது பாரியார் வீட்டில் இருந்து வெளியே வர, அவ்விருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்கள் முகத்தை மறைத்து இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள தனம் அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிசார் குறிப்பிட்ட அப் பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் பல தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. மேற்கொண்டு இது திட்டமிட்டப்பட்ட படுகொலை முயற்சி என்ற கோணத்திலேயே பொலிசார் விசாரணைகளைத் தொடரவுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக பிரித்தானியாவில் செயற்பட்டுவரும் மனிதநேய செயற்பாட்டாளர்களை நோக்கி குறிப்பிட்ட ஒரு குழுவினர் அச்சுறுத்தலை விடுத்துவருகின்றனர்.
தமிழ் உணர்வாளர்கள், மனித நேயப் பணியாளர்கள் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்களை விடுத்துவந்த சிலர் தற்போது காட்டுமிராண்டித்தனமாக திட்டமிட்ட தாக்குதல்களையும் நடாத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது நோக்கங்களை செயற்படுத்த இவர்கள் தாக்குதல்களை நடத்திவிட்டு பழியை இலங்கை அரசுமீது போடும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது இலங்கை அரசின் உதவியோடு இதனைச் செய்ய ஆரம்பித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இத் தருணத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் தேசியத்தைச் சிதைக்கவும், செயற்பாட்டாளர்களை முடக்கவும், திரைமறைவில் திட்டமிட்டு இயங்கும் இக் குழுக்கள் மக்கள் மத்தியில் இனம்காணப்படவேண்டும்.
ஜனநாயகத்துக்குப் புறம்பாக செயல்படும் இதுபோன்ற வன்செயல்கள் கண்டனத்துக்கு உரியவையாகும். புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து, செயல்பாட்டாளர்களின் கரங்களை வலுப்படுத்தவேண்டும்! அத்தோடு தேசியத்துக்காகச் செயற்படும் செயற்பாட்டாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்துகள் மக்களால் முன்வைக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதிகளில் காணி உறுதிப்பத்திரம் அற்ற நிலையில் உள்ள சுமார் 170 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அலறிமாளிகையில் வைத்து காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் தங்களுக்குரிய காணியிருந்தும் அதற்குரிய உறுதிகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கு காணியுறுதி வழங்கும் செயற்பாட்டை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்கொண்டு வருகின்றார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணியுறுதி அற்ற நிலையில் உள்ளவர்களுக்கு இனபேதம் இன்றி அனைவருக்கும் உறுதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதன்படி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதிகளில் உள்ள 170 குடும்பங்களுக்கு இந்த உறுதி அலறி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை சுமார் காணியுறுதியற்ற நிலையில் இருந்த 600பேருக்கு இந்த உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், கிழக்கு மாகாணத்தில் காணியுறுதி அற்ற நிலையில் உள்ள சுமார் 10000 பேருக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டி காயப்படுத்தியபோது அதனை தடுக்கச்சென்ற மாமியை மருமகன் வெட்டிப்படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பள்ளிக்குடாவில் இடம்பெற்றுள்ளது. 45 வயதமான யோகராசா கலா என்பவரோ உயிரிழந்துள்ளார்.
மருமகனின் கத்தி வெட்டிற்கு இலக்கான மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மனைவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளினிக்கிற்கு செல்ல முற்பட்ட கர்ப்பிணியான 22 வயதுடைய காந்தரூபன் நதியா என்ற தனது மனைவியை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இதனை கண்ணுற்ற குறித்த பெண்ணின் தாயார் இதனைத் தடுக்க முற்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற பிரஸ்தாப சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மருமகன் மாமியாரை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று பிற்பகல் சாவகச்சேரி பதில் நீதவான் சடலத்தினைச் சென்று பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
இதேவேளை பிரஸ்தாப சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலிருந்து, திரைப்படத் துறையினரின் நகைச்சுவையான கருத்துக்களும் முன் எப்பொழுதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது.
தேர்தல் களத்தில் நிற்கும் ஒருவரிடத்திலிருந்தும் ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் வெளிவரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறும் சட்டசபை தேர்தலென்றாலென்ன, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலுமென்ன ஈழத்தமிழரின் விவகாரம் தமிழகத்தில் முக்கிய இடத்தை பெற்று வந்துள்ளது. மே 2009-இல் முடிந்த நான்காம் கட்ட ஈழப்போருக்கு பின்னர் சில மாதங்கள் ஈழத்தமிழர் விடயம் பெரிதாக தமிழகத்தில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்நிலை இப்பொழுது இல்லாமல் போய்விட்டது.
திமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி ஈழத்தமிழர்கள் சமாதானத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியதுடன் நின்றுவிட்டது. அதிமுகவினால் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.
அகதிகளாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் தமிழகத்தில் வாழ்வதற்கு அதிமுக ஆட்சியைக் கைப்பற்றினால் நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது.
அதிமுகவின் ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. 1991-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை படாதுபாடு படுத்தியது.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூடாது என்று தமிழக மக்களை கேட்டதுடன், சிங்கள அரசு எப்படி அதன் பாதுகாப்புப் படையினரிடம் தமிழர்களை வதைக்க சட்டங்களை ஏவிவிட்டதோ அதைப்போலவேதான் ஜெயலலிதாவும் காவல்துறையினரிடம் அதிகாரங்களை வழங்கி ஈழத்தமிழர்களை வதைத்தார்கள்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றத்தையும் பல காலங்களாகக் காண முடியவில்லை. நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் மட்டும் தமிழக மக்களின் ஏகோபித்த ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தைப் பார்த்து தானும் ஏதோ ஈழத்தமிழர் மீது அதீத பாசம் கொண்டவர் போல சில அறிக்கைகளை வெளியிட்டார்.
விடுதலைப்புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு என்று 1991-ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்தும் கூறிவருகிறார். அத்துடன் பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும், பிரிவினைவாதம் பேசினாலே அதிமுக சும்மா இருக்காது என்று கூறுகிறது அதிமுகவின் தேர்தல் விஞ்ஞபனம்.
ஐக்கிய நாடுகள் சபையே பயங்கரவாதம் என்றால் என்ன என்று அர்த்தம் தெரியாமல் அலையும்போது ஜெயலலிதா போன்றவர்கள் கூறும் அர்த்தங்கள் மக்களை ஏமாற்றவேதான் என்பது உண்மை. எது எப்படியாயினும், தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழரின் விடயத்தில் கடுகளவேனும் அக்கறை கொள்ளவில்லை.
ராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?
அனைவருமே குழம்பிய தண்ணீருக்குள் மீன் பிடிப்பவர்களே. அதிகமான மக்கள் எதை நினைக்கிறார்களோ அவர்களின் வாக்குகளை தமதாக்க வேண்டும் என்கிற மனப்பாங்குடன் களம் இறங்குபவர்களே அரசியல்வாதிகள்.
தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு தீர்வு வந்துவிடுமென்றோ அல்லது திமுக ஆட்சிப்பீடம் மறுபடியும் ஏறினால் ஈழத்தமிழர்கள் அவர்களின் தாயகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்திய மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதென்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே.
திமுக துவங்கிய பின், 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.
அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கலைஞரின் அரசியல் வாழ்வில் மக்களுக்கு செய்ததை விட தனக்கும் தனது குடும்பத்திற்கும் செய்ததே அதிகம். பொதுப் பிரச்சனைகள் என்றால் ஆரப்பாட்டங்கள் செய்வதும், பேருந்துகளை உடைப்பதும், புகையிரதப் போக்குவரத்தை நிறுத்தும் போராட்டங்களை செய்வதும், உண்ணாவிரதமிருப்பதும் மற்றும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களை செய்வதுமாகவேதான் மக்களின் ஆதரவை இன்றுவரை கலைஞர் நிலைநிறுத்தியுள்ளாரே தவிர மக்களுக்கென்று விரல்விட்டு எண்ணக்கூடிய காரியங்களைத் தவிர அனைத்துமே அவர் குடும்பம் சார்ந்ததாகவே இருந்துள்ளது.
முதன் முதலில் 1957-ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1962-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்டு, 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1967-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1971-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்டு, 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1977-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்டு, 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1980-ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட இவா;, 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1989-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1991-ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்டு, 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1996-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2001-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவா;, 4,834 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2006-ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இப்படியாக 11 தடவைகள் போட்டியிட்டு வென்றதுடன், ஐந்து தடவைகள் முதல்வராகவும் இருந்துள்ளார் கலைஞர்.
கலைஞரை எப்படியேனும் வென்றுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி செயற்படும் ஜெயலலிதாவும், சிறீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவரும் மாபெரும் ஊழல்களைச் செய்து மாபெரும் “மகா ஊழல் ராணி” என்கிற பட்டத்தை பெற்றவர்தான். தமிழக மக்கள் இவைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள். ஏதோ சிலவற்றை இலவசமாகக் கொடுப்பதாக வாக்குறுதியளித்துவிட்டாலே போதும் அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்கள் தமிழக மக்கள்.
முதன் முதலாக ஜெயலலிதா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 1989-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில், 2002-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குறித்த இரு பிரதான கட்சிகளையும் தலைமைப்படுத்தும் தலைவர்கள் தொடர்ந்தும் வென்றுகொண்டே வருகிறார்கள். நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதும், மக்களை மென்மேலும் வதைப்பதுமே இவர்களின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. எப்ப மக்கள் தெளிவடைகிறார்களோ அப்போது தமது அரசியலுக்கு ஆப்பு விழுந்துவிடும் என்று கதிகலங்கியோ என்னவோ மக்களை முட்டாள்களாகவேதான் வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள்.
ஆகவே தமிழக மக்களோ அல்லது உலகத்தமிழர்களோ இவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழர்களுக்கு ராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்கிற நிலையே நிலவுகிறது.
காங்கிரஸின் முதல் எதிரி சீமானின் நாம் தமிழர் இயக்கமே.
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைப் பற்றி தாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை என்கின்றனர் தமிழக காங்கிரஸ் தரப்பினர். காங்கிரஸ் ஒதுங்கினாலும், நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் சீமான் ஒதுங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயற்பட்டு தமிழ் இனத்தை சிறிலங்காவில் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம் என கூறி பிரச்சார பணிகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் சீமான்.
தாம் தமிழராய் உருவெடுத்து உள்ளதாகவும், காங்கிரசை கருவறுக்கும் வரை தான் ஓயமாட்டோம் என்கிறார் சீமான். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும் என்று அடித்துச் சொல்கிறார். இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம்.
வைகோவை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும். எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.
அவர் தெரிவித்ததுபோலவே தேர்தல் களப் பிரச்சாரங்களை முடக்கிவிட்டுள்ளார். காங்கிரஸ்காரர்களை களத்திலிருந்து ஓடுமளவு அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்கிறார் சீமான். தமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பாவித்து சீமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முயல்கிறது காங்கிரஸ்.
கொலைக் குற்றச்சாட்டுக்கள் முதல் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் வரை காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எப்படியேனும் சீமானை பயமுறித்தி விடலாமென்று கங்கணம் கட்டிநிற்கிறது காங்கிரஸ். சீமானிடம் அது சாத்தியப்படாது என்கிறார்கள் நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள்.
ஈழத்தமிழர்கள் சீமானிடத்திலிருந்து ஒன்றை மட்டும் கேட்க ஆவலாக உள்ளார்கள். சீமான் ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அதிமுக கூட்டணியினர் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாள்வார்கள் என்று இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது.
ஆகவே, அதிமுக கூட்டணியினர் தமிழீழ தனியரசு நிறுவ உதவியாக இருப்பார்களா அல்லது சிங்கள அரசிற்கு ஈழம் என்கிற சொல்லைக் கேட்டாலே கசப்பதுபோல அதிமுகவும் இருக்குமா? ஈழம் என்கிற வார்த்தையை சொல்வதற்கே கூச்சப்படுபவர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர் அல்லது சிலோன் தமிழர் என்கிற சொற்களையே இன்றுவரை கூறுபவர் ஜெயலலிதா.
இப்படிப்பட்டவரின் தலைமையில் உருவாகும் அரசினால் எப்படி ஈழத்தமிழர் நன்மை அடைவார்கள் என்பதனை சீமான் போன்றவர்கள் விளங்கப்படுத்த வேண்டுமென்பதுவே ஈழத்தமிழரின் அவா.
ஈழத்தமிழரின் விடயத்தில் திமுகவாக இருந்தாலும் சரி அதிமுக என்றாலும் சரி, இவ்விரு பிரதான கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மானத்துடனும் கவுரவத்துடனும் வாழ்வதற்கு சுயநிர்ணய அதிகாரம் கொண்ட தீர்வே ஒரே வழி என்கிற வாதத்தை இன்றுவரை மானசீகத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு காலத்தில் தமிழீழமே தீர்வு என்று கொக்கரித்தவர்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயேதான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆகவே, இவர்களைப் போன்றவர்களை நம்பி எப்படி படகில் பயணித்து பாதுகாப்பாக கரைசேர முடியும் என்பதே கேள்வி.
--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றால் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நிர்வாணமாக ஓடத் தயார் என்று மாடல் அழகி பூனம் பாண்டே அறிவித்தார்.
19 வயதாகும் இவர் இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சிறந்த மாடல் அழகிகள் தேர்வில் முதல் 8 இடங்களில் ஒருவராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூனம் திடீரென நிர்வாணமாக ஓடத் தயார் என்று அறிவித்ததும் ஏராளமான வெளிநாட்டு பத்திரிகைகள் அவரை தொடர்பு கொண்டு, நிர்வாண போஸ் கொடுக்கும்படியும் கோடிக் கணக்கில் பணம் தருவதாகவும் கூறின. ஆனால் அவற்றை ஏற்க பூனம் மறுத்து விட்டார்.
பணம்-புகழ்க்காக நான் நிர்வாணமாக ஓடுவதாக சொல்லவில்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அப்படி கூறினேன் என்றார். இதற்கிடையே பூனமுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தன் முடிவை மாற்றினார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிர்வாணமாக ஓடுவேன் என்றார்.
இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மாடல் அழகி பூனம் மீண்டும் பல்டி அடித்துள்ளார். எல்லார் முன்பும் நிர்வாணமாக நிற்க தயார் என்று நான் சொல்ல வில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்பு மட்டுமே நிர்வாணமாக நிற்கிறேன் என்று தான் கூறினேன் என்கிறார். பூனம் தன் மன மாற்றத்துக்கு புதுவிளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய வீரர்கள் இறுதி போட்டியின் போது சிறப்பாக விளையாடும் ஆர்வத்தை தூண்டவே அவர்கள் முன்பு நான் நிர்வாணமாக நிற்க தயார் என்றேன். விளையாட்டு துறைக்கு மட்டு மல்ல, வேறு எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட நிர்வாண காட்சி உதவும்.
உலக அளவில் இது மருத்துவ ரீதியாக பல்வேறு பல்கலைக் கழகங்களால் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இந்திய வீரர்கள் முன்பு அவர்கள் விரும்பும் இடத்தில், அவர்கள் டிரஸ்சிங் ரூமில் கூட நிர்வாணமாக நிற்க தயார் என்றேன். இது உளவியல் பூர்வமானது. இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாடல் அழகி பூனம் கூறினார்.

இலங்கை அரசு வன்னிப் போரில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாரிய நெருக்கடியை கொடுக்கப் போகிறது என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லிபியாவில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமானப் போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்ற வினாவை எழுப்பக்கூடிய ஒரு ஆண்டாகவே 2011 ஆம் ஆண்டு அமையப்போகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை, தமிழீழம் ஒன்று தான் ஈழத்தமிழர்களுடைய அவலங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கhன ஒரே வழி என்பதை அனைத்துலக ரீதீயில் வலியுறுத்தி வருகிறது. பல நாடுகள் கொள்கை அளவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டமை தொடர்பான விடயங்கள் அனைத்துலக அரங்கில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் நிலை வரும் போது ஈழத்தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான வழி பிறக்கும்.
அதற்கான வேலைத்திட்டங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்படுவது ஆபத்தானது என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பான கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்நெவ்வில் அண்மையில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த கும்பலின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரிசியன் பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது.
இலங்கை தமிழரான 20 வயதுடைய சந்தேகநபர் கடந்த புதன்கிழமை காலை நுவாசி லு கிறாண்ட் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை கோடாரியால் கொத்தியதைப் பலர் பார்த்ததாக சாட்சியமளித்துள்ளனர். இவரை பொலிஸார் நீண்டகாலமாக தேடிவருவதாக சென் சென்டனி பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளும் கைது செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.