Premium WordPress Themes

Saturday, 30 April 2011

தமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்! கதறும் பெண் காவலர்கள்

ஒரு காலத்தில் லண்டனின் ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸுக்கு நிகராக பேசப்பட்ட தமிழ்நாடு பொலிஸ் தற்போது செக்ஸ் பொலிஸாக மாறிக் கொண்டிருக்கிறது... 

பொலிஸ் நிலையங்களில் மேலதிகாரிகளாலும் சக ஆண் பொலிஸ்காரர்களினாலும் இழைக்கப்படும் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் துணிச்சலுடன் நீதிமன்றம் வரை வந்துவிட்டார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் நகரப் பகுதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸான வள்ளி... 

தமிழக காவல் துறையில் பெண்கள் எவ்வளவு கீழ்மைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை பெண் காவலர் வள்ளி சொல்லும் அதிர்ச்சியான விடயங்கள் அப்படியே உங்களுக்காக, 


முன்னாடி எல்லாம் பொலிஸ் ஆடையை அணிந்ததும் எவ்வளவு பெருமையாக இருந்தது.. ஆனால் இப்போ ஏன்டா இந்த வேலைக்கு வந்தேன் என்று தினமும் மனதுக்குள் அழுகிறேன்... 

அதிகாரிகளின் காம லீலைகளுக்கு நான் உடன்படாததால் வேலை நேரத்தைக் கூட்டியே முறித்து எடுத்து விடுவார்கள்.. 

போன முறை எனக்கு பீரியட்ஸ் ரைம்.. இருந்தும் ஆறு மணி நேரம் தொடர்ந்து என்னை நிற்க வைத்தார்கள்.. எவ்வளவு நரக வேதனை தெரியுமா.. 



அது போதாதென்று மறுநாள் காலை 2 நிமிடங்கள் லேட்டாக வந்ததற்கு மைதானத்தில் பத்து ரவுண்டு ஓட விட்டு தண்டனை கொடுத்தாங்க.. 

என்னோடு வேலை செய்யும் அக்கா ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்த அக்கா மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருந்த நேரம் ஒரு நாள் அவங்களுக்கு காய்ச்சல் அதால லீவு கேட்டாங்க.. 

அப்பொழுது உடம்பு சூடா இருக்குதான்னு நான் செக் பன்னுகிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.. அவங்க மேல கண்ட இடத்தில கையை வைத்து துணை இல்லாமல் இருந்தா உடம்பு சூடாத் தான் இருக்கும்.. 

நீ மட்டும் சரின்னு சொல்லு சூட்டைத் தணிச்சிரலாம் என்று ரொம்ப கொச்சையாகப் பேசினார். அந்த அக்கா லீவே வேண்டாம் என்று தப்பி ஓடி வந்து விட்டாங்க.. 

ஒரு ஊருக்கு புதுசாக இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் அவரோடு இரவு 2 பெண் பொலிஸ் ஆவது தங்க வேண்டும். ஒருவர் உடல் தேவைக்கு மற்றையவர் உணவுத் தேவைக்கு அதாவது சமைத்துப் பரிமாற... 

வரும் இன்ஸ்பெக்டர் 50 வயதுகளைக் கடந்தாலும் அவர்கள் அழைப்பது 25, 30 வயதுக்கு உட்பட்ட வாளிப்பான பெண் காவலர்களைத் தான்... 

இந்த உபசரிப்புக்கள் தமிழ்நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படித்தான் ஒருநாள் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒழுங்கு படுத்தும் பணிக்காக 4 பெண் பொலிஸ் காவலர்களை அழைத்துக் கொண்டு போனார் ஒரு இன்ஸ்பெக்டர். 

அங்கே திடீரென 2 பெண் பொலிஸ் காவலர்களையும் இன்ஸ்பெக்டரையும் காணவில்லை.. திருவிழா முடிந்ததும் மற்ற காவலர்களுடன் அவரது வீட்டுக்குப் போய் பார்த்த போது ஒரு பெண் காவலர் சமையல் செய்து கொண்டிருந்தார். 

லேசாகத் திறந்திருந்த இன்னொரு அறையில் இன்னொரு பெண் காவலர்களிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்தார் காம வெறி பிடித்த அந்த இன்ஸ்பெக்டர். 

இப்படியாக தமிழ்நாடு பொலிஸின் காம லீலைகள் உச்சத்தைத் தொடுகின்றன.. 

தமிழக பெண் காவலர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் காவல் நிலையத்துக்கு வரும் பெண்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்... 

இது மட்டுமல்ல லஞ்சம் ஊழலும் இங்கு தலை விரித்தாடுகிறது.. 

பொலிஸ் பதிவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் கறந்து அவர்களை ஓட்டாண்டியாக தெருவில் அலைய விடுகிறது இந்தக் கேவலம் கெட்ட காவல் துறை.. 

பெண்களை இப்படி கேவலமாக போகப்பொருளாக நினைத்து வல்லுறவு புரியும் காமப் பிசாசுகளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட வேண்டும்.. 

அவ்வளவு இறுக்கமாக சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.. 

இப்போது இவ்வளவு தகவல்களையும் வெளியில் கொண்டு வந்த வள்ளியின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது .. 

இன்னமும் கூட அவரால் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.. தண்டிக்கப்படவில்லை.. குறைந்தது பொலிஸ் சேவையிலிருந்தாவது இடை நிறுத்தப்படவில்லை.. 

இப்படி இருக்கிறது தமிழகத்தின் நீதி நிர்வாகம்.. தமிழகத்தின் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியே உத்தியோகபூர்வமாக 3 பெண்களை வைத்திருக்கும் போது. பொலிஸின் காம வெறியாட்டத்தை எப்படிச் சமாளிப்பது... 

தமிழீழத்திலும் ஒரு காவல் துறை இருந்தது.. 

உறுதியாகச் சொல்வேன் உலகிலேயே அவர்களுக்கு நிகர் எவருமில்லை.. 



அவர்களைக் கண்டால் காலில் விழுந்து கும்பிடலாம்.. 

அப்படி இருக்கும் அவர்களின் மனிதநேயப் பண்புகளும் செயற்பாடுகளும்.. 

அவர்களிடம் லஞ்சமோ ஊழலோ இப்படியான காம வெறியாட்டமோ கிடையாது.. ஒரு பெண் நள்ளிரவிலும் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீதிகளில் வலம் வர முடிந்தது.. 

தமிழீழ காவல் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டார்கள்.. 

அப்படியான தமிழீழ காவல் துறையைப் பார்த்தாவது திருந்த வேணும் இந்த தரம் கெட்ட தமிழக காவல் துறை... 

தமிழக காவல் துறையின் தரம் கெட்ட காமப் பிசாசு அதிகாரிகள் களை எடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றால் ஒழிய ஒரு நாளும் முடிவுக்கு வரப் போவதில்லை இவர்களின் காம வெறியாட்டம்..

செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை: இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை

அறிவியல் வளர்ச்சியின் பயனாக செல்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்தால் அதனை உணர்த்தும் வகையில் ஒளிரும் தன்மையுடைய உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.

இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.

தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.

பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு. 

சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி.


புதையலொன்றில் இருந்து கிடைத்த ஐந்தரைக் கிலோ எடைகொண்ட தங்கத்திலான கிரீடம் மற்றும் தங்க மாம்பழம்(பட இணைப்பு))


புதையலொன்றில் இருந்து கிடைத்த  ஐந்தரைக் கிலோ எடைகொண்ட தங்கத்திலான கிரீடம் மற்றும் தங்க மாம்பழம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறையின் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தனியிலையைக் கொண்ட காம்புடனான தங்க மாம்பழம் என்பன உள்ளடங்கிய பிரஸ்தாப தங்கப் புதையல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயினும் அவை சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்டதா அல்லது தங்க முலாம் பூசப்பட்டதா  என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தங்கக் கிரீடமானது ஒரு கிலோகிராமும் நானூற்றி எண்பது கிராம்களும் எடைகொண்டுள்ளது. தங்க மாம்பழம் மூன்றரைக் கிலோகிராம் அளவிலான எடைகொண்டது. தற்போது அவையிரண்டும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


கார்த்திக்கு இன்று நிச்சயதார்த்தம் முடிந்தது! ஜுலை 3 ஆம் திகதி திருமணம்

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும், பருத்திவீரன் படத்தின் நாயகனுமான கார்த்தி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடி கிராமம் குமாரசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மகள் வீட்டில் நடைபெற்றது. 

இதில் மணமகனின் தந்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர். 



இதையடுத்து மணமகள் ரஞ்சனியின் சகோதரர் ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மணமகன் கார்த்தி மற்றும் உறவினர்களை வரவேற்றனர். பின்னர் அங்குள்ள வினாயகர் கோவிலில் நடிகர் சிவகுமார், சூர்யா ஆகியோர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 

அதைத் தொடர்ந்து மணமகள் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மணமகள் ரஞ்சனியின் தந்தை சின்னசாமி, மனைவி ஜோதி ஆகியோர் மீனாட்சி சிவகுமார் குடும்பத்தினருக்கு பூங் கொத்து கொடுத்து வர வேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். 

சிவ குமாரின் உறவினர்கள் தேங்காய் பழம் மற்றும் பூ நிறைந்த தட்டுகளை எடுத்து சென்றனர். பின்னர் இந்து முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

மணமகள் ரஞ்சனிக்கு கார்த்தியின் சகோதாரி பிருந்தா உள்பட உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வாதம் செய்தனர். 

மணப்பெண் ரஞ்சனிக்கு கார்த்தி குடும்பத்தினர் நெக்லஸ் அணிவித்தனர். அதன்பின்னர் மணமகள் ரஞ்சனியும், நடிகர் கார்த்தியும் அருகருகே அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் அனை வருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இதில் சிவகுமார் குடும்பத்தினர் மற்றும் மணமகளின் உறவினர்கள் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். 

திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது. 

மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகை ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டனர். ஆனால் அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்

தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்!

இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. 

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. 

ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தியாவுக்கு காட்டி இந்தியாவை தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து ஏமாற்றி தனது விடயத்தை சாதிக்க முற்படுவதாக அறிய முடிகிறது. 

இதற்கு துணை போவது போன்ற கருத்துகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். 



நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் உலகம் எங்கும் நடந்த பேச்சுகள் தடைபட்ட நிலையில் நோர்வே அரசின் அனுசரனையுடன் விட்ட இடத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்த்துடன் இந்தியாவில் அல்லது வேறு ஒரு நாட்டில் பேச்சுகள் நடப்பதே வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயமாகும். 

அதைவிடுத்து தமிழருடன் அதிகாரங்களைப் பகிர அரசு கொள்கையளவில் இணக்கம் எனவும் அதிகாரங்களின் பட்டியல் பற்றி அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சு எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை குழப்பும் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது சிறந்தது.

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது எனவும் எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன என வெளியான செய்திகளால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். 

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். 

இது இந்தியாவின் இலங்கை அரசுக்கு எதிரான காய் நகர்த்தல்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் நாசகார வேலையா என சிந்திக்க தோன்றுகின்றது 



தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசு நடாத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாக முக்கியமாக வெளிநாடொன்றின் மத்தியஸ்தத்துடன் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் பேச்சுக்கள் நகர வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது...

ஆனால் அன்று சொன்னது ஒன்று இன்று செய்வது இன்னொன்று.. 

அண்மையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான அணியினர் கூட்டமைப்பையும், தமிழ்மக்களையும் சேர்த்து மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பதற்கான வெள்ளோட்டத்தை மிகவும் இரகசியமான முறையில் சிங்கப்பூரில் போய் நடத்தி விட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளியாகி உலகமெங்கும் மஹிந்த அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கக் வேண்டும் என்று இலங்கை அரசுக்கெதிரான கோஷங்கள் வலுத்து வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய கேவலமான செயல் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

போர் முடிந்து 2 1/2 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை காலமும் அதிகாரப் பகிர்வு விடயத்தையே கையில் எடுக்காத அரசு இப்போது எடுத்துப் பேசுவதன் மர்மத்தை இவர்கள் அறிய மாட்டார்களா? 

மஹிந்த அரசின் சாதுரியமான காய் நகர்த்தல்களுக்குள் தெரிந்தோ தெரியாமலோ மாட்டுப்பட்டு உள்ளார்கள் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்பவர்கள்... 



சாதாரண தமிழனுக்கு தெரிந்த அரசியல் இராஜதந்திரம் கூட இவர்களுக்குத் தெரியாதா என்ன? 

வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக இலங்கை அரசு கூண்டோடு சர்வதேசம் முன்பு ஏற்றப்படப் போகும் இந்த நேரத்தில் கூட்டமைப்பின் இச்செயல் மஹிந்த அரசை போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு துருப்புச் சீட்டாக அமைந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் மட்டும் தான் தேசியம் வாழ்ந்து கொண்டிருக்கிறது... அதன் செயலில் அறவே இல்லை.. 

உலகத் தமிழர்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.. 

நல்ல விலைக்கு வந்தால் விலைபேசி ஒட்டு மொத்தமாக உங்களையும் விற்றுவிடுவார்கள்.. 

இந்தக் கண்கொத்திப் பாம்புகளிடம் கவனமாக இருங்கள்...

புதிய போர்க்குற்ற ஆதாரம் அம்பலம்! புலிகளின் பொருளாதார முக்கியஸ்தர் கொடூர கொலை (பட இணைப்பு)

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைய கொடூரமாக படுகொலை செய்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இன்னுமொரு ஆதாரமும் வெளிவந்துள்ளது. 

கேணல் ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கடந்த புதன்கிழமை வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றிய திலக் என அழைக்கப்படும் சிவலிங்கம் சுகுணன் என்பவரையும் இராணுவம் படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. 



இந்தப் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது. இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். 

பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். 



திலக், தான் சாதாரண உடையில் சரணடையப்போவதாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். சரணடைந்த திலக்கை இராணுவத்தினர் கொடூரமாக அடித்து படுகொலை செய்துள்ளனர். 

இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார். 



யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையிலேயே பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியதுடன் இதன் பணிப்பாளராந திலக் பிரான்ஸ்,ஜோ்மனி, நோர்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Friday, 29 April 2011

இன்ரனெட் கபே செல்லும் ஜோடிகளே கவனம் உங்கள் காமலீலைகள் வெளியாகும்!!(பட இணைப்பு)

இன்ரனெட் சேவை வழங்கும் கடைகளுக்குச் செல்லும் இளம் ஜோடிகளின் தவறான நடவடிக்கைகளை வீடியோ படமெடுத்து வெளியிடும் சம்பவம் அண்மையில் யாழ் நகரில் அதிகரித்திருக்கிறது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள சில இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களான இளம் காதலர்கள் செய்யும் காம லீலைகளை தங்கள் அதி நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமல் தங்கள் கணினியில் வீடியோப் படம் பிடிக்கின்றனர்.

அந்த வகையில் அண்மைய நாட்களில் யாழ் பல்கலை காதல் ஜோடி எனும் பெயரில் வீடியோக்கள் சில முறைகேடான இணையத்தளங்களில் வெளிவந்தது.

இது தொடர்பாக எமக்குத் தெரியவருவது, 

இன்ரனெட் சேவை வழங்கும் இந்தக் இன்ரனெட் கபேயினர் தங்கள் கடையில் அதிநவீன வசதிகள் கொண்ட கணினித் தொகுதியை சிறிய மூடிய அறைகளாகப் பிரிக்கப்பட்டதாக உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்த அறைகளுக்குள் உள்ள கணினியுடன் வெப் கமரா பொருத்தப்பட்டு ஸ்கைப் வசதியும் ஏற்படுத்தப்பட்டு அந்தக் கணினியின் ஸ்கைப் கணக்கு தங்கள் பிரதான கணினியுடன் தொடர்பேற்படுத்தப்பட்டு அதனை பணிப்பட்டியில் (TaskBar) தெரியாதவாறு மறைத்துக் காணப்படும்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரத்தியேக வகுப்பிற்குப் போகும் இளம் காதல் ஜோடிகள் வகுப்பு செல்லாமல் தங்கள் மானத்தைப் போக்க பெற்றோரின் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு கூடிவிடுகின்றனர்.

இதனால் அந்தக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடை உரிமையாளர்கள் தங்கள் காட்டும் கணினி அறைகளிலேயே இந்தக் காதல் ஜோடிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



அங்கே தயார் நிலையி்ல் கணினியும் இணையக் கமராவும் காணப்படுகின்றது என்பது தெரியாமல், கணினியை ஆராயாமல் அறைக்குள் சென்றவுடனேயே தங்கள் காம லீலைகளை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகின்றனர்.

இதனை பிரதான கணினியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கடை உரிமையாளர் தனக்குத் தேவையான காட்சிகளை வீடியோவாகவும், போட்டோவாகவும் சேமித்து வைத்து பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்று எமது மண்ணின் கலாசாரச் சீரழிவுக்கு இந்த இணையமும், இன்ரனெட் கபேகளும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன.

அந்த வகையில் இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்களே! நீங்கள் இந்தச் கலாச்சார சீரழிவுக்கு உடந்தையாக இராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது.

உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களது தனிப்பட்ட இரகசியங்களை பாதுகாக்க வேண்டிய கடப்படு உங்களுக்கு உள்ளது. அதேநேரம் அவர்களை மூடிய அறைக்குள் விடும்போது அவர்கள் தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

மூடிய அறையில்லாமல், திறந்த வெளியில் ஓரளவு மூடியதாக கணினியை வைக்கலாம். இதனால் இவ்வாறான கலாசாரச் சிரழிவுகள் வராமல் தடுக்கலாம்.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் மீது மர்ம ஆயுத குழு ஒன்று தாக்குதல் (காணொளி, பட இணைப்பு)

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடாந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். 

இரு தினங்களுக்கு முன்னர் இவர் மீது பிஸ்ரல்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆயுத குழு ஒன்று கடுமையாக தாக்குதல் நடாத்தி இருந்தது. 

இதனை தொடர்ந்து அவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். 
 
தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.. 



தமக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் எவரும் இருந்தது இல்லை என கூறும் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சுரேஸ் பிரேமசந்திரனின் பிரத்தியேக செயலாளராக செயலாற்றுவதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் குடாநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் நோக்குடன் தம்மை ஆயுத தாரிகள் இலக்கு வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார். 



இவர் தாக்குதலுக்குள்ளான போது மக்கள் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர.எல்.எவ் அமைப்பின் தலைவராக இருந்தவர். 



ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் வரதர் குழு எனவும் சுரேஸ் குழுவினர் எனவும் இரண்டாக பிரிந்து சென்றது. பின்னர் சுரேஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்திருந்தனர். 

சுரேஸ் பிரேமசந்திரன் குழுவினர் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் மண்டையன் குழு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது மிகவும் பாராதூரமான வன்முறைகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில் சுரேஸ் பிரேமசந்திரனின் பிரத்தியேக செயலாளர் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாக இடம்பெற்று முடிந்த றோயல் திருமணம்(பட இணைப்பு)

இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் ஆகியோரின் திருமண உத்தியோகபூர்வ வைபவம், வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இனிதே நிறைவேறியது. 

இந்தத் திருமண வைபவம் மற்றும் அதனோடு இணைந்த மணமகன் மணமகள் ஆகியோரின் ஊர்வலம் என்பனவற்றைக் காண்பதற்காக லண்டன் நகர வீதிகளில் இன்று காலை முதலே பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். 

உள்ளுர் நேரப்படி காலை 8.30முதல் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு அதிதிகள் வருகை தர ஆரம்பித்தனர். 



உலக நாடுகள் பலவற்றின் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே லண்டன நகரில் குவிந்திருந்தனர். 



பல ஊடக நிறுவனங்கள் காலை முதலே விவரணங்களுடன் கூடிய நேரடி ஒலி, ஒளிபரப்புக்களை வழங்க ஆரம்பித்துவிட்டன. 



பிரிட்டனின் பிரபல பாடகர் சேர் எல்டன் ஜோன், அரச குடும்ப உறுப்பினர்கள், பல வெளிநாட்டுப் பிரமுகர்கள், மன்னர்கள், உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் தேவாலயத்துக்கு வருகை தந்திருந்தனர். 



சம்பிரதாயபூர்வ முறையில் எத்தியோகப் பூர்வ திருமணச் சடங்கு இடம்பெற்றது.

இளவரசரின் திருமணத்தை நேரடியாக பிரித்தானிய அரச குடும்பத்தினரின் நேரடி வீடியோவில் காண "இங்கே கிளிக் செய்யுங்கள்..."





மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ராணா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. 

படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளில் நடித்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படபிடிப்பு குழுவினர் அவரை உடனடியாக மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர். கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதையறிந்ததும் ரசிகர்கள் இசபெல்லா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா உள்பட அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்!

வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே கிழக்கின் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்! 

போராட்ட காலத்தில் தமிழினத்துக்கு துரோகம் செய்தீர்கள் அதனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமேன்றே திட்டமிட்டு குண்டுகள் வீசி கொலையும் செய்தனர். 

தாயின் முன்பு தனையனும் தங்கையின் முன்பு அக்காவும் அம்மாவின் முன்பு அப்பாவும் கொலை செய்யப்பட்ட கொடுரத்தைக் கண்ட வன்னி மண் அந்த கொடுமைகளை எண்ணி இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணீருக்கே காரணமாவர்களை நீங்கள் காப்பாற்ற நினைப்பது இழந்த எம் உறவுகளுக்கு நீங்கள் மீண்டும் செய்யும் மகா துரோகமே. 

வடகிழக்கு தாயகத்தில் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் எம்மினம் உலகில் எவ்வினமும் சந்திக்காத துன்பங்களை எதிர்கொண்டது. இன்று எத்தனை பெண்கள் விதவைகளாக எத்தனை குழந்தைகள் அநாதைகளாக வாழ்கிறார்கள். 

எமதினத்தின் வருங்காலமே இந்த அரசால் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் அட்டகாசம் இன்றாவது உலகால் உணரப்பட்டு எமதினத்துக்கு ஏதோ விடிவு கிடைக்கும் நிலைமை உருவாகுகையில் அதனை நீங்கள் குழப்பும் வகையில் உங்களின் நலனுக்காக செயற்படுவது நல்லதா? உங்களின் மனட்சாட்சியை தொட்டுக் கேளுங்கள். 

உங்களுக்கு விடுதலைப்புலிகளை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து கொண்டு சிங்கள அரசுக்கு வால் பிடிப்பதுதான் கவலையாக இருக்கிறது. 

அரசாங்கம் செய்த கொடுரங்களை மறுக்கும் வகையிலும் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டதையும் மூடி மறைக்கவும் கொழும்பில் நடக்கவிருக்கும் மே தினக் கூட்டத்துக்கு பொது மக்களை திரட்ட அரசு முயற்சிக்கிறது.

அவர்கள் சிங்கள மக்களை அழைக்கலாம் ஆட்சேபனை இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு மக்களையும் எதிர் பார்ப்பது அரசின் முட்டாள் தனம்.

அதற்கு தாளம் போட்டுக் கொண்டு நீங்கள் இங்கிருக்கும் எதுவுமறியாத அப்பாவி பொதுமக்கள் சிலரை பொய் சொல்லி அழைக்க முற்பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். நீங்கள் என்ன திருகுதாளம் என்றாளும் செய்யுங்கள் ஆனால் ஆண்டவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம். 

நீங்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழலாம். உல்லாசம் செய்யலாம். ஏன் அரசின் காலில் விழலாம். அல்லது அவர்களை பல்லக்கில் சுமக்கலாம். நாங்கள் உங்களை கோபிகக்கவுமில்லை உதவி செய்யுங்கள் என்று உங்களை கேட்கவுமில்லை ஆனால் உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

தெய்வம் நின்று கொல்லும் என்ற காலம் மலை ஏறிவிட்டது தெய்வம் அன்றக்கே கொல்லும் காலம்தான் இது. 

அரசு கொத்துக் கொத்தாய் குண்டு வீசி எம் உறவுகளை கொன்று குவித்தபோது நாங்களும் எத்தனை நாடுகளை கெஞ்சியிருப்போம். அப்போது யாரும் பாரா முகமாய் இருந்த போது குதுகுலமாய் இருந்த மகிந்தர் இன்று அதே குற்றத்தில் இருந்து தப்புவதற்காக அதே நாடுகளின் கால்களில் விழுந்து திரிகிறார். 

அது மட்டுமா எம்மினத்தின் குருதியை குடித்த குற்றத்துக்காக சரத்பொன்சேகா அநாதரவாய் கூண்டில் வாடுகிறார். 

நீங்கள் உங்களின் சொந்த இனத்துக்கு செய்த துரோகத்துக்கும் பாவத்துக்கும் பிரயாசித்தம் பெறவேண்டுமானால் இனியாவது சிந்தித்து செயற்படுங்கள். 

அரசாங்கம் செய்த பாவத்துக்கு அண்டவன் தண்டனை கொடுக்க இருக்கும் காலத்தில் குறுக்கே விழுந்து ஏன் மண்கவ்வப் போகின்றீர்கள்?

இனியும் உங்கள் துரோகத்தனம் தொடர்ந்தால் தமிழினம் தரணியில் இனி மன்னிக்காது. உலகமே கண்ணீர் விட முள்ளிவாய்க்காலில் ஒன்றுமறியாத பொதுமக்களின் உயிர் கொத்துக்கொத்தாய் இழந்ததை நீங்கள் நியாயப்படுத்த முனைவதை நிச்சயம் வரலாறு மன்னிக்காது. 

விலை மதிக்க முடியாத உயிர்களுக்கும் தியாகங்களுக்கும் நிச்சயம் நியாயமான பதில் கிடைக்கும் காலம் நெருங்கிவிட்டது. 

தயவு செய்து எனது இந்த மடலை உங்களின் ஊடகத்தில் பிரசுரிக்கவும்.

நன்றி

யாழ் மைந்தன்.