Premium WordPress Themes

Tuesday, 26 April 2011

யாழில் பார்வை இழந்த இளம் பாடகன்!

உலகை காணும் பாக்கியத்தை  இழந்திருந்தாலும் உலகமே ஒரு கணம் திரும்பிப்பார்க்கக்கூடிய அளவுக்கு ஆண்டவன் குரல்வளத்தை கொடுத்துள்ளான் ஜெகதீசன் எனும்  27 வயதுடைய பார்வை இழந்த இளைஞனுக்கு. 

இவ்விளைஞன்  பிறந்து சில மாதங்களிலேயே இரண்டு கண்களின் பார்வைகளையும் இழந்துவிட்டான்.

யாழ். மீசாலையை சொந்த இடமாகக் கொண்ட  இவர் யாழ். சுன்னாகத்திலுள்ள விழிப்புலனற்றோரை பராமரிக்கும்வாழ்வகம் எனும் இல்லத்தில் 10 வயதில் வந்து சேர்ந்தார். 

அங்கிருந்தே க. பொ. த சாதாரண வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்தார். கல்வியில் பிரகாசிக்க விட்டாலும் பாடசாலைப் பருவத்திலேயே தன் குரல் வளத்தால் பல பரீசில்களையும் ஏன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதுடன் குரல் வளத்தால் இரசிகர்களையும் மகிழ்விப்பார்.

 



பார்வையை இழந்த போதிலும் குரல் வளத்தைக் கொண்டிருந்தும் ஜெகதீசினின் எதிர்காலம் தொடர்பாக எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை என்றே கூறலாம். 

ஜெகதீசன் கல்வியைவிட்டு பதினொரு வருடங்களாகின்றன ஆனால் அவனின் குரல் வளத்துக்கு ஏற்ற தளத்தை உருவாக்கி அவனின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதுவரை எந்த செயற்பாடும் செய்யப்படவில்லை.

 

எம்மவர் வெறுமனே ஜெகதீசனின் பாடலை இரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். எனவே இந்த இளைஞனின் குரல் வளத்துக்கேற்றால்போல் அவனின் எதிர்காலமும் சுபிட்சமாய் அமைய இவ்விளைஞனுக்குரிய களத்தை அமைத்துக்கொடுக்கவேண்டியது எமது கடமையாகும்.



உலகம்  போற்றும் சிறந்த பாடகராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம் என்று கூறும் ஜெகதீசனின்
அனுபவத்தையும், பாடல்களையும் அவரின் குரலிலேயே  கேட்போம்..

0 comments:

Post a Comment