Premium WordPress Themes

Saturday, 23 April 2011

மெக்டொனால்ட்டில் இரண்டு சிறுமிகளால் ஒரு சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

மெக்டொனால்ட் உணவகத்தில் சிறுமி ஒருவர், இன்னும் இரண்டு சிறுமிகளால் மோசமாகத் தாக்கப்படும் காட்சி கமராக்களில் பதிவாகியுள்ளது. 

இந்த மோதலைத் தடுப்பதற்கு அங்கிருந்த ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 

ரொஸ்டேல் பல்டிமோர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் தாக்கப்ட்டவர் வெள்ளை இனச் சிறுமி. தாக்கியவர்கள் இருவரும் கறுப்பினத்தவர்கள். 

பல நிமிட நேரம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது ஊழியர்கள் அதை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சிரித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துள்ளனர். 

 

இந்தச் சிறுமி தாக்குதல் நடத்தியவர்களால் தரையில் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் மீண்டும் தலையில் தாக்கப்பட்டுள்ளார். 



தாக்குதலை நடத்தியவர்கள் 14 மற்றும் 18 வயதானவர்கள் என்று தெரியவந்துள்ளது. 



இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை நீடிக்கும்,சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 செ.மீ., காஞ்சீபுரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று இரவு மழை பெய்து ஓய்ந்திருந்த காட்சிகள் காணொளியாக...
 

Friday, 22 April 2011

வன்னியில் தமிழரின் சொத்துகள் அவகரிப்பு(அதிர்ச்சி ரிப்போட்)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததினை தொடர்ந்து வன்னி பெரு நிலபரப்பை கைப்பற்றிய இலங்கை அரசு 4500 மில்லியன் பெறுமதியான தமிழ் மக்களின் நிலையான சொத்துகள் மற்றும் பயன்தரு நிலங்களை அரசுடமையாக்கி உள்ளது. 

இவை புலிகளால் கைவிடபட்டு இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட சொத்துகள். இவற்றில் ஒரு பகுதியை மாத்திரமே நாம் தற்போது இங்கு பகிரங்கபடுத்துகிறோம்.

தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களின் செழிப்பான வளங்கள் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டதிற்கு இன்றும் வன்னி மக்கள் அரசிடம் இருந்து எதனையும் பிரதிபலனாக பெறவில்லை. 

வன்னி மக்களின் கோடிக்கணக்கான சொத்துகளை அரசுடமையாக்கி மக்களை பொருளாதார மற்றும் மனோவியல் ரீதியாக ஒரு நொந்துபோன இனமாக்கி உள்ளது இலங்கை அரசு. 

கொடிய போரினால் பாதிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீண்டு எழ முடியாத இந்நேரத்தில் அரசால் இவை அரசுடமையாக்கபடுவதுதானது மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இவற்றை கண்டும் காணதவர் போல தமது மாத சம்பளத்தை மட்டும் குறியாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து வருகிறது. 

மில்லியன் கணக்கான ரூபாய்களுக்காக  கிளிநொச்சி மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே பல்வேறு பகுதிகளும் புலிகள் பயன்படுத்தியவை என்று கூறிக் கொண்டு இலங்கை அரசு சுவீகரித்தவற்றை பாருங்கள். 

தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவின் புலனாய்வுச் செய்தியாளர்களினால் சேகரிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல்களைக் காணலாம். 


01. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா

இப்பிரதேசத்தில் 991 ஏக்கர் பரப்புடைய நிலம் மர முந்திரிச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டது. 

முன்னர் பற்றைக் காடுகளாகக் காணப்பட்ட அப்பிரதேசத்தில் தற்சமயம் 5 தொடக்கம் 7 மாதங்கள் வயதுடைய மரமுந்திரிகை மரங்கள், பலா மரங்கள், தற்காலிக முகாம்கள் மற்றும் அரை ஏக்கர் நிலப்பரப்பில் நாச்சிக்குடா பொலிஸ் நிலையமும் காணப்படுகிறது. 

இந்த நிலப்பரப்பின் பெறுமதி 500 மில்லியன் ரூபாயாம். குறித்த நிலப்பரப்பை அரச நிறுவனங்கள் அரசுடமையாக்குவதன் மூலம் 500 மில்லியன் பெறுமதியான மரமுந்திரிகை பயிர் செய்கையை வருவாய் ஈட்டக்கூடிய துறையாக பயன்படுத்தலாம் என அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேச வரைபடம் 


அரசுடமையாக்கபட்ட சொத்துகளை பாருங்கள். 








02. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெல்லன்குளம்

இப்பிரதேசத்தில் 520 ஏக்கர் நிலப்பரப்பு மா, பலா, தோடை மற்றும் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளது. 

மா, பலா, தோடை, மர முந்திரி பயிர் செய்கைகள் செய்யப்பட்டு 90 சதவீதம் பழங்கள் காய்த்துள்ளது. ஆயிரம் மில்லியன் ரூபாயாம் இந்நிலப்பரப்பினதும் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர் செய்கைகளின் பெறுமதி. உடனடியாக இலங்கை அரசு இதனை அரசுடமையாக்கி உள்ளது.

அப்பிரதேச வரைபடம்



அரசுடமையாக்கபட்ட சொத்தகளை பாருங்கள். 







03.  கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள அறிவியல் நகர்

இப்பிரதேசத்தின் 375 ஏக்கர் நிலப்பரப்பு முன்னர் பல்கலைக்கழக வளாகத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

இதன் தற்போதைய நிலை: 8 கட்டிடத் தொகுதிகள் மற்றும் 3 களஞ்சியக் கட்டிடங்கள், நீர்ப்பாசன வசதி காணப்படுகிறது.
2 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க நிலப்பரப்பாகக் காணப்படுகின்றது. 

சுமார் 2000 மில்லியன் செலவு செய்யப்பட்டு கட்டபட்டுள்ளது. இந்த தமிழர்களின் சொத்து அரசுடமையாக்கபட்டுள்ளது. 

அரசுடமையாக்கபட்ட சொத்துக்களை பாருங்கள். 





















04.  கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவெளி பிரதேச செயலகம்

இப்பிரதேசத்தில் 142 ஏக்கர் பரப்பு கொண்ட கல்மடு முன்னர் சகல வசதிகளையும் கொண்ட நவீன அரிசி ஆலை. 

ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க நிலப்பரப்பும் முதலீடும் உள்ளது.  இந்த 1000 மில்லியன் பெறுமதியான அரசி ஆலை அரசுடமையாக்கபட்டுள்ளது. 

அரசுடமையாக்கபட்ட சொத்துக்களை பாருங்கள். 










இப்பொழுது பார்த்தீர்களா தமிழர் பகுதிகளை அழித்து மக்களையும் அழித்து பின்னர் அந்தப் பிரதேசத்தை ஏலத்தில் விற்று அதன் மூலம் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாய்களைக் கொண்டு தென்பகுதியை அபிவிருத்தி செய்வதில் குறியாக உள்ளது அரசு. 

தமிழர் தாயகப் பிரதேசம் என்ற ஒன்றை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இயங்கி வரும் அரசு ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற தமிழர் பிரதேசங்கள் துண்டாடியுள்ளது. 

அதே போல் வன்னியிலும் இன்று தனது தமிழர்களின் சொத்தகளை அரசுடமையாக்கும் திட்டத்தை எந்தவித சத்தமும் இன்றி ஆரம்பித்து விட்டது. 

இனியும் தமிழர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசம் காணாமல் போய்விடும் என்பது உறுதி.


இது தொடர்பாக எமக்குக் கிடைத்த ஆவணம்

Thursday, 21 April 2011

அவதார் படத்தை முறியடித்து 3-D செக்ஸ் படம் வசூல் சாதனை !

ஹாங்காங்கில் உலகில் முதன் முறையாக 3-டி செக்ஸ் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டு உள்ளனர். உடலுறவு காட்சிகளும் காமடி காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளன. 

ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகர் ஹிரோ ஹயானா, நடிகை சோரிஹரா, ஹாங்காங் நடிகை வோனிலியூ ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் ஹாங்காங்கில் வெளியிடப்பட்டது. 

முதல்நாளிலேயே ஹாங்காங்கில் ரூ.1 கோடியே 54 லட்சம் வசூலாகி உள்ளது. அவதார் படம் ஒரே நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூல் சாதனை படைத்து இருந்தது. அதை இந்த படம் முறியடித்து விட்டது. 

படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலை கொடுத்துள்ளது. தைவான் நாட்டிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாரத்தில் ரூ.2 1/2 கோடி வசூல் கிடைத்துள்ளது. 

படம் வெளியான தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் அலைமோதுகிறது. சீனாவில் இந்த படத்தை திரையிட தடைவிதித்து விட்டனர். எனவே சீனாவில் இருந்து ஏராளமானோர் ஹாங்காங்குக்கு வந்து படம் பார்த்து செல்கின்றனர். சீன மொழியில் இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.

மீண்டும்! போர்க் குற்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன! - அல்ஜசீரா மற்றும் சனல் 4(காணொளி இணைப்பு))

நேற்று அல்ஜசீரா மற்று சனல் 4 தொலைக்காட்சிகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருந்தது. இதன்போதே தமக்குப் புதிய ஆதராங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.


அவற்றில் இறுதி யுத்த காலத்தில் யுத்த பிரதேசத்தில் தங்கியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் பற்றிக் எதுவித தகவலும் இல்லை என குறித்துக் காட்டப்பட்டிருந்து. 

குறிப்பாக அல்ஜசீரா தொலைக்காட்சி மக்களும் சக்தியும் எனும் தலைப்பில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவாக 25 நிமிடங்கள் ஆராய்ந்திருந்தது. 

 

இதற்காக அல்ஜசீரா நிருபர் இலங்கை சென்றிருந்தார். அவர் யாரையும் சுயமாக சந்தித்து செய்தி சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் இலங்கை சென்றதும், அவரால் சுயமாக எவரையும் சந்திக்க முடியவில்லை. அவர் கூடவே இராணுவமும் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

அரச படைகளின் அனுமதியைப் பெற்ற, அவர்களால் அறிவுத்தப்பட்ட மக்களே நிருபரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என அதில் அந்நிருபர் குறிப்பிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது. 

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியிருந்தார் அல்ஜசீரா நிருபர். அதில் கோத்தபாய , போர்க் குற்றங்கள் தொடர்பில் புலிகள் மீதே குற்றஞசாட்டியிருந்தார்.

மேலும் அவர், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்கள் பற்றிப் பேசிய நிருபரிடம் போர்க் குற்றம் தொடர்பான காணொளி ஆதாரங்களை இப்போது உள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தார். 

இதேவேளை, வைத்தியசாலைகள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக நிருபர் வினாவிய போது, தாங்கள் எந்த வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அப்பட்டமாக பொய்யைச் சொன்னார் கோத்தபாய. 

ஆனால், அல்ஜசீரா அவரது அந்த கருத்தின் பின் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை ஒளிபரப்பியிருந்தது. 

நிருபருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் யாவரும் ஒருமித்த கருத்தாக தாங்கள் எந்தவொரு தமிழரையும் கொலை செய்யவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்திருந்தனர். 

இந்நிகழ்ச்சிக்காக தமிழர் ஒருவரை இரகசியமாகத் தொடர்பு கொண்டிருந்தது அல்ஜசீரா. அவர் அதில் இலங்கை தமது போரின் போதான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்திருந்தாகத் தெரிவித்திருந்தார். 

 

இதேவேளை நேற்று சனல் 4 தொலைக்காட்சியும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டிருந்தது. அதில், இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, வெளியுலகத் தொடர்புகளின் முகாம்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ளமை, அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை தமக்குக் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. 

இதேவேளை தமிழர் பிரச்சினையில் இந்த இரு தொலைக்காட்சி சேவைகளும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜநாவின் அறிக்கை வெளிவரவுள்ள இந்நிலையில் இத் தொலைக்காட்சிகள் இரண்டும் புதிய ஆதாரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்த மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு(காணொளி இணைப்பு))

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. 

வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களையும் மற்றும் அமைச்சர்கள் சிலரையும் நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து மஹிந்த ராஜபக்ஷ இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார். 

இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் பேரணிகளை நடத்த ஒழுங்கு செய்யுமாறு பணித்துள்ளார். 

அத்துடன் மே முதலாம் திகதி நடத்தப்படவுள்ள பாரிய எதிர்ப்புப் பேரணிக்கு வடக்கு, கிழக்கில் இருந்து ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் குறிப்பிட்டளவான பொதுமக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசின் மீது போர்க்குற்றங்களை சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக மே முதலாம் திகதிக்குப் பின்னர் பேரணிகளை நடத்த வடபகுதி மக்கள் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் முரளிதரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்தித்த சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களே பேரணிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே முதலாம் திகதிக்குப் பின்னரே இந்தப் பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களை படையினர் கட்டாயமாக இழுத்துச் சென்று ஐ.நா. நிபுணர்குழு அமைக்கப்பட்டதிற்கு எதிராக பேரணிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.