யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை அண்மித்த புன்னாலைக்கட்டுவன் ஈவினை தோட்டப்பகுதியிலிருந்து எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை சுன்னாகம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இடத்துக்குச் சென்று இன்று காலை சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வயாவிளான் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட 58 வயதான வைத்திலிங்கம் செல்வக்கணேஷ் என்று தெரியவருகின்றது.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு இன்று காலை வருதை தந்த மல்லாம் நீதவான் எஸ்.கஜநிதிபாலன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தவிட்டார்.

இவர் திருமணமாகமல் தனிமையில் வசித்து வந்தவரென்றும் இவரது மனநிலை கடந்த சில வருடங்களாக நல்ல நிலையில் இல்லையென்றும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இவர் வெளிநாட்டிலிருந்து அண்மையில் தான் நாடு திரும்பினார் என்ற தகவல்கள் வெறும் கட்டுக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment