Premium WordPress Themes

Friday, 10 June 2011

புதியதொரு சிக்கலில் நயன்,பிரபுதேவா திருமணம்..

பிரபல நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பெயரெடுத்த பிரபு தேவா, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் ஜூலையில் நடப்பதாக இருந்தது. அது இப்போது ஆகஸ்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து சிக்கலில் இருந்து விடுபட்ட பிரபுதேவா புதியதொரு சிக்கலில் மாட்டியிருக்கிறாராம். இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். அதனால் பிரபுதேவா மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நயன்தாராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் வைத்துதான் நயனின் குடும்பத்தினர் திருமணத்தை ஆகஸ்டில் வைத்துக் கொள்ளலாம் என்று பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார்களாம்.

இப்படியெல்லாமா உங்க வீட்டில் சொல்வாங்க என்று நயனிடம் பிரபுதேவா புலம்பினாராம். இதனால் கோபமடைந்த நயன் தனது குடும்பத்தாரிடம் குமுறி வருகிறாராம்.

உறவினரை தீட்டித் தீர்ந்த ஐனாதிபதி மஹிந்த

தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் ஆத்திரமடைந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது உறவினரை திட்டித் தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணத்தை கொடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விலைக்கு வாங்கிவிட முடியும் எனவும், அவருடன் சிறீலங்கா அரச தலைவருக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்தித் தர முடியும் எனவும் மகிந்தாவின் உறவினரான திருக்குமார் நடராஜன் தெரிவித்த கருத்தை தான் நம்பியதாகவும், ஆனால் எதிர்மறையான நிகழ்வே நடந்துள்ளதாகவும் திருவை நேரில் அழைத்த சிறீலங்கா அரச தலைவர் உரத்த சத்தத்தில் திட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்போவது தொடர்பில் தனக்கு முன்னரே தெரியப்படுத்தவில்லை எனவும் மகிந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் தான் மகிந்தாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கு தவறான தகவல்களை கூறி  அமைச்சர்கள் தன்னை இருட்டில் வைத்துள்ளதாகவும் மகிந்தா தெரிவித்துள்ளதாக சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திரு என அழைக்கப்படும் திருக்குமார் நடராஜா மகிந்தாவின் உறவினரும், பிரதி அமைச்சருமான நிருபாமா ராஜபக்சாவின் கணவரும், பசில் ராஜபக்சாவின் வர்த்தக பங்குதாரருமாவார்.

Wednesday, 8 June 2011

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ள ரஜினி.


இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.
ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.  அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.  படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!

Tuesday, 7 June 2011

ஈழத்தமிழருக்கு சேவைகள் செய்யத் தயங்கமாட்டேன்” பா.விஜய்

“திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன் என கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் பெற்ற தேசிய விருதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்:
பதில்: தேசிய விருது என்பது இந்திய தேசத்தினுடைய பெருமிதமான ஒரு விருது. ஆட்டோகிரேப் திரைப்படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்காக இவ்விருது எனக்கு கிடைக்கப்பெற்றது.
தன்னம்பிக்கையை இளைய சமூகத்தினர் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே எனது பாரிய கனவு. அதை நான் இத்திரைப்படப் பாடலின் வாயிலாக நிறைய விதைத்தேன்.
மிகப்பெரிய இளைய சமூகம் இவ்வளவு கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் உள்ள ஒரு நாட்டில் பின்னோக்கி செல்கின்றார்கள் என்பது விசித்திரமானது.
இந்த இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் உணர்வு எனக்கு உள்ளதுடன் எனக்கு தன்னம்பிக்கை உணர்வுகள் பற்றிய கருத்துக்கள் மீது இருந்த அபரிதம் காரணமாகவும் இப் பாடல் இயற்றப்பட்டது.
 
கேள்வி: நீங்கள் நடித்த திரைப்படமான இளைஞன் திரைப்படத்தைப்பற்றி…
 
பதில்: கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இத்திரைப்படமானது சிறிய பட்ஜெட் உடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் பட்ஜெட் ரீதியிலும் கதையிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கதைக்களமாக மாறியது.
இத்திரைப்படத்தில் குஷ்பு, மீராஜெஸ்மின், நமீதா, வடிவேலு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கலைஞரின் வசனத்தில் உருவாகிய இத் திரைப்படத்தில் எனக்கு நடிக்கக் கிடைத்தது பெரிய பாக்கியம் என்றே கூற வேண்டும்.இவ்வாறு ஒரு பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படம் மீண்டும் உருவாகும் என்பது சந்தகம்
.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: நான் நிறைய தமிழர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவர் மத்தியிலும் நிறைய கருத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் ஒருமித்த கருத்துக்களாக மாற வேண்டும்.
இப்போது நிலவும் அமைதி எப்போதும் நிலவ வேண்டும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என யாரும் கிடையாது. ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு சகஜ வாழ்க்கையை முன்னெடுப்பது என்பது எல்லோர் மத்தியிலும் உள்ள ஒரு வினா.
வெளிநாடுகளில் உள்ள சொந்தங்கள் தமக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகளும் இவர்கள் மத்தியில் உண்டு.
 
இதற்கு எல்லோரும் சொல்வதைப்போல நானும் தமிழ் நாட்டில் இருந்து உதவி பெற்று தருகிறேன் என சொல்வதற்கு நான் ஒன்றும் பெரிய அரசியல்வாதியோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும் பெரிய சக்தியோ கிடையாது.
திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன்.
 
கேள்வி: நீங்கள் இலங்கைக்கு வந்ததன் காரணம் என்ன?
 
பதில்: நான் இலங்கைக்கு வந்தது இதுவே முதன் முறை என்பதுடன், கொழும்புப் பல்கலைகழகத்தின் மாணவர்கள் நடாத்தும் அழகிய கவியரங்கத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறேன். அத்துடன் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள எனது அடுத்த திரைப்படமான ‘சமர்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்வையிடவுள்ளேன்.
 
கேள்வி: வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: பத்திரிகைத்துறையென்றாலே பொதுவாக ஒரு பழைய பழமொழி உண்டு ஒரு பெரிய செல்வந்தன் தனது செல்வத்தை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று சினிமாத்துறையை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது பத்திரிகைத்துறையை தெரிவுசெய்ய வேண்டும்.
இப்படியான ஒரு நிலையிலிருந்து பத்திரிகைத்துறை முன்னேற்றம் கண்டுள்ளதன் காரணம் ஈழத்தமிழர்களின் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளமையே ஆகும்.
ஈழம் போன்ற பின்தங்கிய தேசத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலும் உரிமை மறுக்கப்படும் நிலையிலும் வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களைப்பிடித்து பல ஆவணங்களை மக்கள் மத்தியில் கொண்டுவருகின்றது.
 
நடப்பதை நிஜமாக வெளிப்படுத்தக்கூடிய தைரியமுள்ள அலுவலர்களை உள்ளடக்கிய வீரகேசரி நூற்றாண்டு விழாவை கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

ராணா கதையில் மாற்றம்..


ரஜினி சிங்கப்பூர் போனதிலிருந்து அவர் பற்றிய செய்திகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம்! எந்தளவுக்கு என்றால் செப்டம்பரில் ராணா ஷ§ட்டிங்கில் கலந்து கொள்வார் என்கிற அளவுக்கு. அவரது ரசிகர்களுக்கு அல்டிமேட்டான எனர்ஜி சூப் இதுதான் என்றாலும், சென்ட்டிமென்ட்டாகவே சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை மேலும் வலுவாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.

கதைப்படி மூன்று ரஜினிகளில் ஒருவர் இறந்து போவது இருக்கிறதாம் ஸ்கிரிப்ட். சினிமாவில் கூட அவருக்கு அந்த முடிவு வந்துவிடக் கூடாது என்று நினைத்த கே.எஸ்.ரவிகுமார் இப்போது ரஜினி பிழைத்துக் கொள்வது போல மாற்றிவிட்டாராம்.

இந்த ஸ்கிரிப்ட் மாற்றத்திற்கு பிறகு எல்லாமே நல்ல தொடக்கமாக இருப்பது ஆச்சர்யம்தான். ஏனென்றால் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வந்த டயலாசிஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வந்திருக்கிறது முதல் செய்தி.

இதற்கிடையில் இன்னொரு விஷயம். சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஃபுளோரில் ஒரு இந்தியர் கூட வேலைக்காரர்களாகவோ, மேல்மட்ட ஊழியர்களாகவோ இல்லையாம். யூகத்தின் அடிப்படையில் வரும் செய்திகள் குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Monday, 6 June 2011

18 வயசுக்காக சிம்பு பாடிய பாட்டு!


தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே நடிப்பு, கதை, டைரக்ஷன், பாடல்வரி அமைத்தல், பாட்டு பாடுதல், நடனம் என்று பல துறைகளில் அசத்தி வருபவர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., குறிப்பாக பாட்டு பாடுவதில் வல்லவர். மெலோடியஸ் சாங்ஸ் முதல் குத்துப்பாட்டு வரை தன்னுடைய ரம்மியமான குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.
இப்போது “18 வயசு” படத்தில், ஒரு பாட்டு ஒன்று பாடி அசத்தியிருக்கிறார். “ரேனிகுண்டா” படத்தை இயக்கிய அதே டீம், மீண்டும் “18 வயசு” என்ற படத்தை இயக்கியுள்ளது. இதில் ஹீரோவாக “ரேனிகுண்டா” ஜானி நடிக்கிறார், பன்னீர்செல்வம் இயக்குகிறார். புதுமுகம் சார்லஸ் என்பவர் இசையமைத்து இருக்கிறார். அடர்ந்த காட்டு பகுதியில் “18 வயசு” ப‌டத்தை இயக்கி உள்ளனர்.
“ரேனிகுண்டா” படத்தை காட்டிலும், “18 வயசு” படம் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ ரிலீசானது, வ‌ிரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிம்பு, “ரேனிகுண்டா” படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது.