Premium WordPress Themes

Wednesday, 8 June 2011

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ள ரஜினி.


இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.
ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.  அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.  படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!

0 comments:

Post a Comment