Premium WordPress Themes

Friday, 1 July 2011

ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்! தமிழ்நாட்டில் சம்பவம்

தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் 3 வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக   ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.