Premium WordPress Themes

Saturday, 21 May 2011

சிலந்திச் சகோதரிகள் (வீடியோ இணைப்பு)


சிலந்திச் சகோதரிகள் என அழைக்கப்படும் இவர்கள் இருவரும் இணைந்து பிறந்த இரட்டையர்கள். இவர்களின் பெயர் கங்கா, ஜமுனா இவர்கள் இந்தியா கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை சத்திரசிகிச்சை மூலம் பிரித்தால் 5 வீதமே உயிர் தப்புவதற்கு சத்தியம் என்பதால் சத்திரசிகிசசை செய்வதை பெற்றோh விரும்பவில்லை. இப்பொழு இவர்கக்கு 40 வயதாகிறது. இவர்களின் இரண்டு கால்களையும் நான்கு கைகளையும் வைத்து நடக்கும் வகையை வைத்து இவர்களை சிலந்திச் சகோதரிகள் என அழைக்கிறார்கள்.

பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.

தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது.
அதாவாது,
பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.
பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.
விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.
உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.
அதிக துணிச்சல் உடையவன்.
இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.
தாராள மனப்பான்மை உடையவன்.
அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.
ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.
ரகசியத்தை அறிந்தவன்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்.

Friday, 20 May 2011

கம்பி எண்ணும் கனிமொழி - நாளை நீதிமன்றில்(காணொளி இணைப்பு)

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் முன்னதாக வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பலத்த போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜெயில் எண் 6 ல் அடைக்கப்பட்டார். இவரை மீண்டு் நாளை காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியுள்ளார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி ரிமாண்ட் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.



ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் சிக்கிய மாஜி அமைச்சர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஆதாயம் அடைந்த டி.பி., ரியாலிட்டி குழுமத்தின் சினியுக் என்ற நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறியது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த 6 ம் தேதி சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் படி ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி மூலம் வாதாடினார். இந்த மனு மீதான உத்தரவை வரும் 14 ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார் ஆனால் அன்று உத்தரவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து 20 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இருப்பினும் கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மனு மீதான தீர்ப்பை அறிவித்தார். கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என கைவிரித்து விட்டார். இதனையடுத்து கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


நீதிபதி சொல்லியிருப்பது என்ன? : இன்றைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஓ.பி., சைனி கூறியிருப்பதாவது: கனிமொழிக்கு ஜாமின் கொடுக்க இயலாது, காரணம் இவர் புரிந்துள்ள குற்றம் மிக பெரிய அளவிலானது. இவர் மீதான குற்ற முக்கியத்துவம் அடிப்படையில் இவர் பெண் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என்பதை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள முடியாது. இத்துடன் இந்த வழக்சில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை. எனவே இந்த தருணத்தில் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. மேலும் இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நாளை காலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

“ ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கனி” : சி.பி.ஐ.,வக்கீல் வாதம் ; ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்று சி.பி.ஐ.,வக்கீல் யு.யு., லலித் வாதாடினார். மேலும் அவர் வாதாடுகையில் , கனிமொழி கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். நெருக்கமாக இருந்ததால் கலைஞர் டி.வி.,க்கு எவ்வித ஆவணமும் இல்லாமல் ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் பெற்ற டி.பி.,ரியாலிட்டி நிறுவனம் மூலம் எளிதாக ரூ. 214 கோடி கைமாறியது. இதில் இருவரது பங்கும் இருந்தது என்றும் இதனால் கனிமொழியை ஜாமினில் விடக்கூடாது நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் .


கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருக்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் . இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.,க்கு தொடர்பில்லை என்றும் பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பதும் நம்ப முடியாததாகவே உள்ளது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார்.

“ முழுச்சதிக்கும் ராஜாதான் காரணம் ”; கனிமொழி வக்கீல் சொன்னது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில்; இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு 20 சதவீத பங்குதாரர் மட்டுமே .கருணாநிதியின் மகளாக பிறந்ததும், எம்.பி.,யாக இருப்பதும்தான் இவரது துரதிருஷ்டம் நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.

பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டும் பயனில்லாமல் போனது.

Thursday, 19 May 2011

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்


அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி.....

பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி என்பது பல ஆண்களுக்கு இன்னும் புரியாத புதிர். 

இதன் விளைவாக மறு புறத்தில் பல பெண்கள் விரக்தியுடன் காணப்படுகின்றனர். 

மூளை பற்றிய ஒரு ஆய்வு விஞ்ஞானிகளுக்கு இந்த விடயத்தில் ஓரளவு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் தூண்டப்படும்போது அவர்களது மூளையின் எந்தப் பகுதி அதிகம் செயற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். 

இதன் முடிவு பெண்களை மகிழ்வுறச் செய்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு வழிமுறைகள் உள்ளன என்பதாகும். ஒரு பெண் தனது பங்காளியால் தூண்டப்படும் போது மூளையின் பல பகுதிகள் சுறுசுறுப்படைகின்றன. 

ஆனால் கற்பனைகளில் உலவி மகிழ்ச்சி காண்கின்ற போது பெண்களின் மூளை குறைந்த மட்டச் சுறுசுறுப்பையே அடைகின்றன. 

உடல் ரீதியாக தனது அன்புக்குரிய ஒருவரால் தூண்டப்படுகின்ற போதே பெண்களின் மூளையின் எல்லாப் பகுதிகளும் சுறுசுறுப்படைகின்றன. 

இரண்டு விதமான ஆய்வின் முடிவில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். 

உடல் இன்பத்தில் பெண்களின் மூளை இரண்டு வித்தியாசமான பாதைகளைக் கொண்டுள்ளது. 

ஒன்று அவர்களின் தனிமையான கற்பனை உல்லாசம் மற்றது பாரியல் ரீதியான பங்காளியுடன் காணப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

தவளையாய் போன மனிதன் (காணொளி இணைப்பு)


பலவிதமான மெய்சிலிர்க்கும் விநோத செய்திகளை எமது இணையதளமான பாரிஸ்தமிழ்.கொம்பில் பார்த்து ரசித்திருப்பீர்கள். அந்த வகையில் இன்றும் வித்தியாசமான செய்தியோடு நாம்.
பல விதமான நடனங்கள் பார்த்தாச்சு ஆனால் தவளை நடனம் பார்த்ததுண்டா?
பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த Danik Abishev என்னும் இளைஞர் தவளை நடனமாடி சிறுவர் முதல் பெரியவர் வரையான எல்லோரையும் வியப்பில் ஆழத்தியுள்ளார்.
நீங்கள் பாருங்கள் மெய்சிலிர்ந்து போவீர்கள்.

ரஜினிகாந்துக்கு செயற்கை சுவாசம்

சென்னை: நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி 'ராணா' பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இசபெல் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது. 

இதையடுத்து போரூரிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குள்ள 7வது மாடியில் தனி அறையில் அவருக்கு நுரையீரல், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று, ரஜினிக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளிட்ட அறிக்கையில், 'மூச்சு விடுவதை எளிதாக்கும் விதத்தில் ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது' என தெரிவிக்கப்பட்டது. நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பிரச்னை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அ
ளிக்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Wednesday, 18 May 2011

சங்கடத்தில் சன் பிக்சர்ஸ்..

ஒரு நாள் ஊரை ஏமாற்றலாம் பல நாள் ஏமாற்ற முடியாது என்ற படிப்பினையை தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

 
அரைவேக்காடு படங்களை அதீத விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை முதலில் உலகுக்கு நிரூபித்ததே சன் பிக்சர்ஸ்தான். இந்த அதீத விளம்பரங்கள் காதலில் விழுந்தேன் போன்ற மிகச் சுமாரான படங்களை வெற்றிப் படங்களாக்கின. இதன் காரணமாக, எங்களிடம் படத்தை விற்றால் அதை ஓட்டிக் காட்டுவோம் என வெளிப்படையாக இறுமாந்து நடந்து கொண்டது சன் பிக்சர்ஸ்.
 
ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாதில்லையா?
 
சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட மாப்பிள்ளை, எங்கேயும் காதல் இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியிருக்கின்றன. இதில் எங்கேயும் காதல் அட்டர் பிளாப். முன்பெல்லாம் சன் பிக்சர்ஸிடமிருந்து படத்தை வாங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தை வேறு வழியில்லாமல் தாங்கிக் கொண்டார்கள். ஆட்சி மாறியதால் அவர்களும் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது கோரிக்கையாகவும், எச்சரிக்கையாகவும் விரைவில் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, 17 May 2011

வெளிவரப் போகிறார் சரத்பொன்சேகா - தமிழர் இன அழிப்பை மறைப்பதற்காக கோத்தபாயவின் இரகசியத் திட்டம்


 சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளைக்கொடி வழக்கை கைவிடுவது பற்றி சிறிலங்கா அரசதரப்பு இரகசியமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை அலரி மாளிகைக்கு அழைத்து இதுபற்றி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.

அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்சவுடனும் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

இதன்போது சரத் பொன்சேகா சில நிபந்தனைகளுக்கு இணங்கினால், தாம் வெள்ளைக்கொடி வழக்கை கைவிடத் தயாராக உள்ளதாக கோத்தாபய ராஜபக்ச, கூறியுள்ளார்.

எனினும் பொன்சேகா தரப்பில் இதற்கு இன்னமும் சரியான பதில் அளிக்கப்படவில்லை என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை. சிறிலங்கா அதிபருக்கும், எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கும் இடையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் ,பொன்சேகா வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுபற்றிய விபரங்களை வெளியிட முடியாது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்து பரிசீலனை

ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பதிலளிக்கமுடியாதவிடத்து நியூசிலாந்து உட்பட சர்வதேச சமூகம் பொருத்தமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது பற்றி பரிசீலனை செய்யும் என்று நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்குலி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையை நியூசிலாந்து அரசாங்கம் ஆதரிக்குமா என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லொகி எழுத்து மூலமாக எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நிபுணர்குழுவின் அறிக்கையை நியூசிலாந்து  அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் பற்றியும் கவலை கொள்வதாகவும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரு தரப்பினராலும் சர்வதேச சட்டம் பாரதூரமாக மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக  ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவற்றை விசாரிக்க ஐ.நா செயலாளர் நாயகம் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இவை உட்பட நான்கு பயனுள்ள சிபாரிசுகளை ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை கொண்டுள்ளன. 

பதிலளிக்கும் கடப்பாடுகளுக்கான முட்டுக்கட்டைகள் பற்றியும் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது. ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு விசாரணைகளை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படுமிடத்து நியூசிலாந்து உட்பட சர்வதேச சமூகம் பொருத்தமான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்குவது குறித்து பரிசீலனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து சகல தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும் நியூசிலாந்து அரசாங்கம் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது என்றும் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தார்

பௌத்த மயமாக காட்சியளிக்கும் தமிழர் தேசம்(காணொளி இணைப்பு)

பெளத்த மக்களின் வெசாக் தினத்தையொட்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில்  என்றும் இல்லாதவாறு வெசாக் தோரணங்களை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் மிகவும் பிரமாண்டமாக இவ்ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றன. யாழ். குடாநாட்டில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் வருகைதந்துள்ளதை காணமுடிகிறது. 

முப்படையினரால் வெசாக் அலங்காரக் கூடுகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இம் முறை முன்னேப்போதும் இல்லாதவாறு பல தமிழர் பிரதேசங்களிலும் முப்படையினர் வெசாக் கூடுகளை அமைத்துள்ளனர். 

இதேவேளை திருமலைக்கு அண்மைக் காலமாக சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு திருமலை ஒரு பௌத்த பூமி என காட்டும் முகமாகவே என்றுமில்லாதவாறு இம்முறை வெசாக் பண்டிகையை முப்படையினருடன் சேர்ந்து சிங்கள மக்களும் வெகு விமர்சையாக தமிழர் பிரதேசங்களில் கொண்டாடுகின்றனர்.

 

 

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாக துக்கதினமான நாளை மே 18 ஆம் திகதி உறவுகளை இழந்த மக்கள் அந்த கவலையில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் முடிவெதுவுமில்லாது மீளமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் இராணுவத்தால் தமிழர் பகுதிகளில் நாளைய தினமே இவ்வாறு வெசாக்கொண்டாட்டத்தை மேற்கொண்டுள்ளமையானது இம்மக்களின் இழப்புக்களை மேலும்  உதாசினப்படுத்துவதாய் அமைந்துள்ளதாகவே பலர் கருதுகின்றனர்.

 




Monday, 16 May 2011

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்


வன்னி இறுதி யுத்தத்தின் போதும் முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைகழகத்தில் இன்றைய தினம் அஞ்சலி கூட்டமொன்று இடம் பெற்றது. 

முள்ளிவாய்காலிலும் யுத்தத்தின் போதும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான இரண்டாம் வருட நினைவு அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நிகழ்வு பல்கலைகழக வளாகத்தினுள்ளே இடம்பெற்றது. 

 



இதில் சகல பீடங்களைச்சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கு மெழுகு வர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். 



இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பல்கலைகழக நிர்வாகம் மண்டபம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் எவற்றையும் வழங்கவில்லையென்று மாணவர்கள் குற்றஞ் சாட்டினார்கள். 



அதே வேளை இன்று அதிகாலை முதல் பல்கலைகழக வளாகத்தை சுற்றி கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 



மேலும் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 



இதேவேளை இன்றைய தினம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. 

அவ்வறிக்கையின் முழுவடிவம் கீழே தரப்படுகின்றது. 







இந்நிகழ்வுகளில் முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.


கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி


பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

முதல்வராக ஜெயலலிதா நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய ஜெயலலிதா, ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.

* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.

* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.

* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.

* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு ராசி எண் 7: முதல்வர் ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா, நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். எந்த செயலிலும் தற்போது, 7ம் எண் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 7ம் எண் முதல்வருக்கு ராசியான எண்ணாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.

Sunday, 15 May 2011

மட்டக்களப்பில் வர்த்தகர் கொலை(பட இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பகுதியில் வர்த்தகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கராச் ஒன்றை நடாத்திவரும் மணிவண்ணன் (38வயது) என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். தரையில் உயிரிழந்த நிலையில் அவர் இருந்தாகவும் அவரது வீட்டு கூரையில் தூக்கு கயிறு தொங்கிய நிலையில் இருந்ததாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எப்படி முடிந்தது இவரால்? ஆச்சரியம் (காணொளி இணைப்பு)


சாதனைகள் என்பது சும்மா இலகுவில் கிடைத்து விடுவதில்லை. அதன் பின்னணியில் பல சோதனைகள் பல தியாகங்கள் இருக்கும். இங்கும் ஒரு சாதித்த இளைஞரை பற்றி பார்ப்போம்.
அன்றாட எமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான பொருட்களை காவிச் செல்கின்றோம். அதிலும் சற்று அதிகமாகிவிட்டால் கால்வலி, இடுப்பு வலி என சகித்துக் கொள்கின்றோம். ஆனால் இவரோ.
ஆபத்தோடு விளையாடும் நபர்களின் சாதனைகளை பாரிஸ்தமிழ்  தனது வாசகர்களுக்கு எற்கனவே பல செய்திகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தது. அந்தவகையில் இதுகும் ஒன்று. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Eduardo Armallo la Saga என்ற இளைஞர் அதிகப்படியான சுமையை தனது வயிற்றில் சுமத்து சாதித்துள்ளார். அதாவது 1399.8 கிலோ நிறையுடைய சுமையை 5 செக்கன்கள் தனது உடலில் சுமந்து உலக சாதனையாளராக தனது பெயரை பொறித்துள்ளார்.
சாதிக்க தயாரான நிலையில் தரையில் படுத்திருக்கிறார் Eduardo Armallo la Saga. படிப்படியாக சுமை அவர் உடம்பில் ஏற்றப்படுகின்றது. முடிவில் சாதனையாளராக எழும்புகின்றார். நீங்கள் பாருங்கள் அவரின் சாதனையை...

யாழ். கள்ளுக்குடியர்களின் வினோதமான கோரிக்கை! (காணொளி இணைப்பு)

இன்று மக்களின்  தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் அதனை கேட்பதற்கும்   யாருமில்லாது அனைத்தும் கோரிக்கைகளாக மட்டும் இருக்கும் போது யாழ்ப்பாணத்துப் கள்ளுக்குடியர்களும் அவர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். 

யாழில் மதுசாலைகள் திறக்கும் நேரத்துக்கே கள்ளுத்தவறணைகளும் திறக்கவேண்டும் இதுதான் அவர்களின் கோரிக்கை.

கேட்கும் போது நகைப்பாக இருந்தாலும். அதிலும் சில நியாயங்கள் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். 

பெருங்குடியர்கள்    ஒரு சாராரை நாம் கள்ளுத் தவறணையில் சந்திக்க நேர்ந்தது இவர்கள் பனங்கள்ளுக் குடியர்கள்.

 

சோம பானம், தேவ பானம் என்றெல்லாம் மது பானங்களுக்கு பழங் காலத்தில் பெயர்கள் இருந்தன. ஆனால் பனம் கள்ளை தாய்ப் பாலோடு ஒப்பிட்டுப் பேசுகின்றனர் இக்குடியர்கள்.

ஆரோக்கிய பானம் என்றும் இதை வர்ணிக்கின்றனர்.



இவர்கள் வித்தியாசமான மனிதர்கள்தான். இவர்களின் தேவைகளும் வித்தியாசமானவை. இவர்கள் கூறுவதில் சில நியாயங்கள் இருந்தாலும்  இதை விட இன்னும்  சிந்தித்து செயற்படவேண்டிய முக்கியமான விடயங்கள்  எவ்வளவோ இருக்கும்போது இக்குடியர்கள்  கள்ளுக்குடிக்காக சிந்திப்பது கவலையாகத்தான் இருக்கிறது.