வன்னி இறுதி யுத்தத்தின் போதும் முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைகழகத்தில் இன்றைய தினம் அஞ்சலி கூட்டமொன்று இடம் பெற்றது. முள்ளிவாய்காலிலும் யுத்தத்தின் போதும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான இரண்டாம் வருட நினைவு அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நிகழ்வு பல்கலைகழக வளாகத்தினுள்ளே இடம்பெற்றது.

இதில் சகல பீடங்களைச்சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கு மெழுகு வர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பல்கலைகழக நிர்வாகம் மண்டபம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் எவற்றையும் வழங்கவில்லையென்று மாணவர்கள் குற்றஞ் சாட்டினார்கள்.

அதே வேளை இன்று அதிகாலை முதல் பல்கலைகழக வளாகத்தை சுற்றி கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை இன்றைய தினம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையின் முழுவடிவம் கீழே தரப்படுகின்றது.



இந்நிகழ்வுகளில் முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.










0 comments:
Post a Comment