சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளைக்கொடி வழக்கை கைவிடுவது பற்றி சிறிலங்கா அரசதரப்பு இரகசியமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை அலரி மாளிகைக்கு அழைத்து இதுபற்றி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்சவுடனும் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது சரத் பொன்சேகா சில நிபந்தனைகளுக்கு இணங்கினால், தாம் வெள்ளைக்கொடி வழக்கை கைவிடத் தயாராக உள்ளதாக கோத்தாபய ராஜபக்ச, கூறியுள்ளார்.
எனினும் பொன்சேகா தரப்பில் இதற்கு இன்னமும் சரியான பதில் அளிக்கப்படவில்லை என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை. சிறிலங்கா அதிபருக்கும், எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கும் இடையில் நடந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் ,பொன்சேகா வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுபற்றிய விபரங்களை வெளியிட முடியாது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.









0 comments:
Post a Comment