மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணி பகுதியில் வர்த்தகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கராச் ஒன்றை நடாத்திவரும் மணிவண்ணன் (38வயது) என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். தரையில் உயிரிழந்த நிலையில் அவர் இருந்தாகவும் அவரது வீட்டு கூரையில் தூக்கு கயிறு தொங்கிய நிலையில் இருந்ததாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










0 comments:
Post a Comment