Premium WordPress Themes

Saturday, 14 May 2011

உடம்பை இரண்டாகப் பிரிததுக் காட்டும் மாஜிக்(காணொளி இணைப்பு)

பொது இடமொன்றில் பெண்ணொருவரின் தனியோர் உடம்பை இரண்டாகப் பிரிததுக் காட்டும் மாஜிக்  

 

 

முதல்வராக ஜெயலலிதா நாளை காலை பதவி ஏற்பு : அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கிறது


மின் வெட்டு, ஊழல், கட்டப் பஞ்சாயத்து, கட்சியில் ஒரு குடும்ப ஆதிக்கத்தால் நடந்த குளறுபடிகள் என, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த சிக்கல்களுக்கு விடிவு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் 146 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெற்றதையடுத்து, இக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை காலை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் பதவியேற்பு விழாவில், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா முதல்வராவது இது மூன்றாவது முறை.தமிழக சட்டசபைக்கு, கடந்த ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு மாதத்திற்குப் பின், நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, 203 இடங்களில் வெற்றி பெற்று பெரும் சாதனை படைத்தது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்றது. தே.மு.தி.க., 29 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.மேலும், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களிலும், புதிய தமிழகம் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. தலா ஒரு இடங்களில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவையும் வெற்றி பெற்றன.

தி.மு.க., தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணி, வெறும் 31 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தி.மு.க., 23 தொகுதிகளிலும், 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மற்ற கட்சிகள், காணாமல் போயின.

தேர்தலில், தனிப் பெரும் கட்சியாக 146 தொகுதிகளில் அ.தி.மு.க., இமாலய வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 9:30 மணிக்கு, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. அதில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று சேர்ந்து ஏகமனதாக, சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதாவை தேர்வு செய்கின்றனர்.அதன் பின், எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்துடன், இன்று மாலை ராஜ்பவனில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, ஜெயலலிதா சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் விழாவில், ஜெயலலிதா மூன்றாவது முறை தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இவருக்கு, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் நேற்றே துவங்கி, மும்முரமாக நடந்து வருகின்றன. ஜெ., பதவியேற்பு விழாவில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பர் என தெரிகிறது

போர்குற்றம்: முதலாவதாக உருளப்போகும் தலை யாருடையது?


 மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald    உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார். 

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடம்.  அவ்வேளையில்,  தொலைபேசி ஊடாகவும் வேறுவழிமுறைகளிலும் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப்  ஒப்புக்கொண்ட புலிகள் போர் வலயத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான வழிகளை கோரியிருந்தனர்.

தற்போது இச்சம்பவம் நிகழ்ந்து இரு ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியப் குடியுரிமை பெற்றவரும்,  மூத்த சிறிலங்கா இராஜதந்திரியுயான பாலித ஹோகன்ன, சரணடைய வந்த தமிழர்களைக் கொலை செய்தமைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இரத்தம் தோய்ந்த முல்லைத்தீவுக் கடற்கரையில் முடிவுற்ற சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு Herald  [Sydney Morning Herald] ஊடகத்தின் விசாரணையானது ஒரு இறுதி முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் தனிநாடு கோரி சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கால் நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட போரானது மே 2009ல் முடிவுக்கு வந்தது.

 சிறிலங்காத் தீவின் மூன்றில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில்  கொண்டிருந்த பயங்கரவாத புலிகளின் இராணுவம் கடலால் சூழப்பட்ட, கடல்நீரேரியான, குறுகிய கரையோரப்பகுதிக்குள் தள்ளப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டது.

பெரும்பாலான புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதைவிட சாகும் வரை போராடவே விரும்பினார்கள். ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறுவழியின்றி சரணடைய முன்வந்தனர்.

மூர்க்கமான எறிகணைத்தாக்குதல்களின் மத்தியில் போதியளவு சார்ஜ் அற்ற பற்றறிகளைக் கொண்ட செல்லிடத்தொலைபேசிகளின் உதவியுடன் புலிகள் தம்மைக் காப்பாற்றக்கூடிய எல்லோருக்கும் தமது நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை அனுப்பினர். 

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் தமக்குத் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரின் உதவியையும் புலிகள் இறுதி நேரத்தில் நாடினர்.

அவர்கள் பல அழைப்புக்களை தொலைபேசிகளின் வழியே மேற்கொண்டனர். சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும், புலிகளிற்கெதிரான சிறிலங்காப் படைகளின் யுத்தத்தின் போது தமது தரப்புத் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாலித ஹோகன்ன விற்குப் புலிகள் ஐரோப்பிய இடைத்தரகர் ஒருவரின் ஊடாக தகவல் ஒன்றை வழங்கியிருந்தனர்.

சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித ஹோகன்ன வெளிநாட்டு வர்த்தக மற்றும் விவகாரங்கள் என்ற திணைக்களத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இராஜதந்திரியாகவும் வர்த்தகத் துறைக்கான சமரசவாளராகவும் செயற்பட்டிருந்தார். 

இவர் தற்போது சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவுஸ்திரேலியத் தூதராகவும் உள்ளார்.

புலிகளின் சமாதானச் செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த புலித்தேவனால் அனுப்பப்பட்ட தகவலைப் இவர் பெற்றிருந்தார். புலித்தேவன் ஒரு இராணுவ வீரர் அல்லர். ஆனால் இவர் புலிகளின் கொள்கை தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமான நபராவார். அவர் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான தகவலை வழங்கியிருந்தார்.

இவருடன் இணைந்து இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புலிகளின் அரசியற் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடேசன், புலிகளின் கேணல்களில் ஒருவரான ரமேஸ், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் முல்லைத்தீவுக்கரையிலிருந்து செல்ல விரும்பினர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வெள்ளைக்கொடியுடன் இவர்கள் பாதுகாப்பாக சரணடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 58வது இராணுவ நிலைக்கூடாக பாதுகாப்பான வழியில் இவர்கள் சரணடைவதற்குரிய ஒருவழியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. படைவீரர்களிடமும் இவர்களை எதிர்பார்க்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மே 17 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.46 மணிக்கு மூன்றாந்தரப்பின் உதவியுடன் புலித்தேவனுக்கு ஹோகன்னவிடமிருந்து எழுத்து மூலத்தகவல் ஒன்று தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டது.

"படையினர் நிலைகொண்டிருக்கும் இடத்திற்கூடாக மிக மெதுவாக நடந்து வரவும். அத்துடன் வெள்ளைக்கொடியைக் கையில் ஏந்தியவாறு தரப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இராணுவ வீரர்கள்  தற்கொலைக் குண்டுதாரிகள் தொடர்பாக அச்சமடைகிறார்கள்" என அந்ததகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு புலித்தேவன், நடேசன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உள்ளடங்கலாக வெள்ளைக் கொடிகளைத் தமது தலைக்கு மேலால் உயர்த்தியவாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக 58வது இராணுவ நிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

யுத்த வலயத்தில் இவர்கள் இராணுவத்திடம் சரணடையச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஒருவர் பின்வருமாறு தனது கருத்தை Herald இடம் கூறுகிறார். இவர் இச்சம்பவத்தின் பின்னர் சிறிலங்காவை விட்டு வெளியேறிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது பெயர் தெரியப்படுத்தப்படவில்லை.

"எனது இரு கண்களாலும் அவர்களை நான் கண்டேன். புலித்தேவன், நடேசன் முன்செல்ல ஏனையோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களின் கைகளில் ஆயதங்கள் இருக்கவில்லை. அவர்கள் நிராயுதபாணிகளாகவே இருந்தார்கள். இராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் நடந்து சென்றார்கள். அந்த வீரர்கள் truck வாகனங்களை வைத்திருந்தனர். அந்த வாகனங்களின் பின்னால் சரணடையச் சென்றவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் எங்களால் அவர்களைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் எமக்குத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அவர்கள்  முனகும் ஒலியும் கேட்டது. துப்பாக்கிப் பிரயோகம் இயந்திரத் துப்பாக்கிகள் போன்று மிகவேகமானதாக இருந்தது".

"அவர் சரணடைய முன்வருகிறார். ஆனால் நீங்கள் அவரை சுடுகிறீர்கள்" ஒரு சிங்களப் பெண்ணான புலித்தேவனின் மனைவி படைவீரர்களிடம் இவ்வாறு கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்தில் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களின்; வாயிலாக வெளிவந்தது. புலித்தேவனது மனையிவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய நாள் யுத்தமும் ஓய்வுக்கு வந்தது.

அதன் பின்னர் வந்த சில நாட்களில் சரணடையச் சென்றவர்கள் சிலரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் நிறையப் பேரின் உடலங்கள் கிடைக்கவில்லை. இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்கள் உயிருடனில்லை என நம்பப்படுகிறது.

புலிகளுடன் எவ்வித சமரச முயற்சிகளையும் மேற்கொள்ளும் நோக்குடன் தான் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என Herald இடம் ஹோகன்ன தெரித்தார். "நான் சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர். படையினருக்குக் கட்டளையிடும் அதிகாரமோ அல்லது பயங்கரவாதிகள் சரணடைதல் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்கான அதிகாரமோ எனக்கில்லை. இதனை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யமுடியாது" சரணடையச் சென்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தன்னால் நம்பமுடியாமல் உள்ளதாக ஹோகன்ன தெரிவித்தார்.

"தொலைபேசி வழிவந்த எழுத்த மூலத்தகவல் ஒரு விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் புலிகளுடன் தொடர்புடைய எவரும் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. சரணடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்ற ரீதியில் அந்தத்தகவல் அனுப்பப்படவில்லை. அதனைச் செய்வதற்குரிய அதிகாரமும் எனக்கிருக்கவில்லை" என்கிறார் ஹோகன்ன.

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald    உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரனான பாதுகாப்புச் செயலர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரதும் ஒப்புதலுடனும் புலிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட சரணடைவதற்கான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறிலங்கா விவகாரம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பசில் ராஜபக்சாவின் ஆலோசனைக்கமைவாக வெள்ளைக்கொடிகளை உயர்த்தியவாறு இராணுவ முன்னரங்கை நோக்கி மெதுவாக நடந்துவரும்படி புலிகளின் தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது"

புலிகள் சரணடைவதை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுத்த பசில் ராஜபக்ச மற்றும் அவரது மற்றுமொரு சகோதரனான கோத்தாபய ஆகிய இருவரிடமும், புலிகளின் தலைவர்களிடமும் நோர்வேத் தூதர் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பது அமெரிக்கத்தூதரக வட்டாரத் தகவல்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.

 சரணடையும் சகல புலிகளையும் வழமையான நியமங்களுக்கு உட்படுத்தாமல் உடனடியாக கொலைசெய்யுமாறு சண்டைக்களத்திலிருந்த இராணுவத்தளபதி ஒருவரால் படைவீரர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக மூத்த  இராணுவ அதிகாரி ஒருவரிடம் Herald மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நிராயுதபாணிகளாகச் சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்று ஏனைய தமிழ்மக்கள் சரணடைவதை உறுதிப்படுத்திக்கொண்டது.

மனிதாபிமான மீடபு நடவடிக்கையைத் தான் மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி அரசாங்கம் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" என இவ்வாரம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். 

புலித்தேவன் மற்றம் நடேசனின் மரணம் தொடர்பாக தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என Herald இடம் ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஏறறுக்கொள்ளமுடியாதது போல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தென்படுகிறது.

ஐ.நா அறிக்கையின் எதிரொலி : இலங்கையில் இடைக்கால அரசு ஏற்படக்கூடிய சாத்தியம்


சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து சிறீலங்கா அரசுக்குள் பாரிய விரிசல்கள் தோன்றியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் சிறீலங்கா அரசு சில மூத்த அமைச்சர்களை புறக்கணித்திருந்தது. தற்போது அவர்கள் மறைமுகமாக ஐ.நா அறிக்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஐ.நாவின் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரரித்துள்ளதையும் அவர்கள் மறைமுகமாக வரவேற்றுள்ளனர். வெளிப்படையான ஆதரவுகளை வழங்கினால் தாம் கொல்லப்படலாம் என அச்சமடைந்துள்ள அமைச்சர்கள், ஐ.நாவின் நடவடிக்கை தீவிரமாகும் வரை காத்திருக்கின்றனர்.

சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் இறுகும்போது அரசில் பாரிய விரிசல்கள் ஏற்படுவதுடன், பலர் அரசில் இருந்து வெளியேறி இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் சாத்தியங்கள் தென்படுவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

Friday, 13 May 2011

காதலில் தகாத உறவு வேண்டவே வேண்டாம்..!

 
செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது.

நண்டு நடை நடந்து சாதனை படைந்துள்ள பெண்மணி(காணொளி இணைப்பு)


அன்ன நடை பார்த்திருப்பீர்கள் ஆனால் நண்டு நடை பார்த்ததுண்டா?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Agnes Brun என்னும் பெண்மணி நண்டு நடை நடந்து சாதனை படைந்துள்ளார்.
அதாவது நண்டு நடை என அழைக்கப்படும் இப்போட்டியில் தலைகீழாக சுமார் 20 மீற்றர் தூரத்தினை 20.56 செக்கனில் நடந்து உலக சாதனை புத்தகத்தில் தன் பெயரை பொறித்துள்ளார் இப் பெண்மணி.


ஐனாதிபதி மஹிந்தவை போர்குற்ற நீதிமன்றில் நிறுத்தியே தீருவேன் : ஜெயலலி


போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கும் செல்வி ஜெயலலிதா ஜெயராம் சூளுரை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியடைந்து எதிர்வரும் 15 ம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு தீர்வுகளை முன்வைத்துள்ளார்.

போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இலங்கை மீதான பொருளாதார தடையினை விதிக்க இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜெயா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே தமிழக அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்பட முடியும். அதற்கு மேல் செயற்படுவதானால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செயற்பட முடியும்.

இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை முன்வைக்க விரும்புகின்றேன். போர்க்குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் கௌரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

அப்படிச் செய்தால், இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்´ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, 11 May 2011

ஐயோ காப்றாற்றுங்கள் - கதறத் தொடங்கியுள்ள மகிந்த


 இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை முடிந்த பின்னர், வடபகுதியில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டியுள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர்- விரைவில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,

“ தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இதுவரை பல சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இன்னும் சில நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்துவோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. எனவே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் கட்சி உட்பட சகல தமிழ்க்கட்சிகளுடனும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றிய பேச்சுக்களை அரசாங்கம் நடத்தும்.

பிரபாகரன் கோரியதை தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ முன்வைத்தால் அந்தக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பேன்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நான் அவதானமாக செவிமடுத்து அவற்றை அமுலாக்குவதற்கு முயற்சி செய்வேன்.

தருஸ்மன் அறிக்கை நாட்டில் ஒரு சர்ச்சையை கிளப்பாத வகையில், ஊடகங்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும்.

தருஸ்மன் குழுவின் அறிக்கை போன்று அல்லாமல் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகமானதாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளை அடுத்து அதன் பணிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

தருஸ்மன் அறிக்கை வெளிவந்தவுடன், அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி- கிளர்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களை அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவு ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

எதிர்க்கட்சி வலுவிழந்து மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தான், வெளிநாட்டு சக்திகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இத்தகைய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் போரின் போது எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.

நோர்வேயிலுள்ள அரசசார்பற்ற அமைப்பொன்று என் மீதும், பாதுகாப்புச் செயலர் மற்றும் சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

20 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் ஈழத்துச் சிதம்பரம் (பட இணைப்பு)

ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 6.32 மணி முதல் காலை 7.15 மணி வரையான சுப நேரத்தில் இடம்பெற உள்ளது. 

இதற்காக ஆலயம் 20 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றது.
















Tuesday, 10 May 2011

பின்லேடன் மீதான தாக்குதலில் உயிர் தப்பிய பட்டத்து இளவரசர்! அடுத்த தலைவர் யார்?

பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலின் போது அங்கிருந்த பின்லேடனின் மகன்மாரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பின்லேடனின் கடைசி மகனான 19 வயதான ஹம்ஸா என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் பயங்கரவாதத்தின் இளவரசர் என்று வர்ணிக்கப்படுபவர். 

அமெரிக்கத் தாக்குதலின் பின்லேடனின் மூன்று மனைவிமாரும் பல பிள்ளைகளும் தற்போது பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். 

ஆனால் அந்த வீட்டில் இருந்த பின்லேடன் குடும்பத்தின் முக்கிய நபரான ஹம்ஸா அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது. 

ஹம்ஸாவுக்கு 14 வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

நீங்கள் இங்கு காண்பதும் அதே படம் தான். பின்லேடனின் மனைவிமாரை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்த போது தான் ஹம்ஸா பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பின்லேடனின் 22 வயதான காலித் என்ற மகன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 



அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் யார்? 


பின்லேடன் மரணமடைந்த பிறகு அல்குவைதா இயக்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி இப்போது பரவலாக எழுந்துள்ளது. 

அடுத்த தலைமைத்துவத்துக்காக அய்மான் அல் சவாஹிரி, அபூயஹ்யா அல் லிபி, சைப் அல் ஆதல், அன்வர் அல் அவ்லாக்கி, காத் பின் லாதன், நாஸர் அல் வஹைஸி, இல்யாஸ் காஷ்மீரி, ஆகிய ஏழு பேருக்கிடையில் போட்டி நிலவுகின்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் வீரர் இல்யாஸ் காஷ்மீரியே இந்தப் போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் அல்குவைதா தகவல்கள் தெரிவிக்கின்றன. 



மும்பாய் பாணியிலான பல தாக்குதல்களை ஐரோப்பிய நகரங்கள் பலவற்றில் நடத்துவதற்கு இவர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால் இவரின் செல்வாக்கு அல்குவைதா அமைப்புக்குள் ஓங்கியுள்ளது. இதுவரை ஐரோப்பிய நகரங்களில் இடம்பெற்றுள்ள அல்குவைதா தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் இவரேயாவார். 

அல்குவைதா அமைப்புக்குள் பின் லாடனுக்கு அடுத்தபடியாக இருந்தவர் அய்மான் அல் சவாஹிரி. பின்லாடன் உயிருடன் இருந்தபோதே இவர் இரண்டாம் நிலையில் இருந்தாலும் அநேகமான அல்குவைதா உறுப்பினர்கள் மத்தியில் இவருக்குப் போதிய செல்வாக்கு இல்லையென்றே தெரியவந்துள்ளது. 



அமெரிக்காவின் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் பாகிஸ்தானில் பல தடவைகள் காஷ்மீரியை இலக்கு வைத்த போதிலும் அவர் தப்பியுள்ளார். பாகிஸ்தானில் அடுத்தவாரம் ஆரம்பமாகும் மிகப்பெரிய பயங்கரவாத வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடிய முஜாஹிதீன் கொரில்லாக்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பாகிஸ்தானின் விஷேட கமாண்டோ படையின் முன்னாள் வீரரே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ கோரிக்கையை கைவிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


 மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க மறுத்து வரும் சிறிலங்கா அரசு அதற்குப் பதிலாக 10ஆயிரம் தமிழ் காவலர்களை வேண்டுமானாலும் நியமிக்கத் தயார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூறியுள்ளது.

இந்தத் தகவலை சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசதரப்புக்கும் இடையிலான பேச்சுக்களுக்கான இணைப்புச் செயலராகவும் பணியாற்றுபவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரச ஊட்கங்களுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்தப் பேச்சுக்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுக்களிலும், ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்தே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை இரு தரப்பினருக்குமிடையில் கருத்து மோதல்களை தோற்றுவிக்கக் கூடிய எந்தப் பிரச்சினைகளும் எழவில்லை.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அடிப்படையாக வைத்தே, இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றன.

இதில் காவல்துறை மற்றும் காணி அதிகாரத்தைத் தவிர மற்றைய அதிகாரங்களை வழங்குவதற்கு அரசதரப்பு கொள்கையளவில் இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு தயங்கும் அரசதரப்பு, உடனடியாக 700 தமிழ் காவலர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

தேவைப்படின் 10,000 தமிழ் காவலர்களை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அரசதரப்பினரால் கூறப்பட்டுள்ளது.

13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரங்கள் மற்றும் அதிகாரப்பகிர்வு செயற்பாடுகளுக்கும் கூடியவரையில் இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.

அதிகாரப்பகிர்வின் ஒரு நகர்வாக மேலவை (செனட்சபை) ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கத் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பான ஆழமான கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

எனினும், மேலவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்குக் கூடுதலாக சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் வகிப்பார்கள்.

இந்திய அரசின் ஆதரவைப் பெற்றுள்ள 13வது திருத்தச்சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இப்போது இருப்பதைவிட மாகாணசபைகளுக்கு ஆகக் கூடிய அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அடுத்து சில நாட்களில் நடைபெறவுள்ள ஆறாவது சுற்றுப்பேச்சு வெற்றியளிக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத் தரப்பு நடத்தும் பேச்சுக்கள் முடிந்த பின்னர், ஏனைய சிறிய அரசியல் கட்சிகளுடன் இதுபற்றிய பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கும்.

முஸ்லிம் கட்சிகளுடனும் இது தொடர்பாக நாம் பேச்சுக்களை நடத்துவோம்.

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிக்கு வரும் போது, அவர்களும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை ஆதரிக்க ஆரம்பிப்பார்கள்.“ என்றும் சஜின் வாஸ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு சிக்கல்: பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள்.


ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவு பற்றி, ஒட்டுப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பான முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் உட்பட தேர்தல் நடந்த ஐந்து மாநில மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று மாலையுடன் கடைசிகட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது. மேற்கு வங்கம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில், ஒரு மாதத்திற்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்து இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு பின், கருத்துக் கணிப்புகள் நடத்திய பல மீடியாக்கள், அதன் முடிவை, மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தான் வெளியிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை முதல் பல மீடியாக்கள், தாங்கள் நடத்திய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டன. ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும், ஐந்து மாநிலங்களை பொறுத்தமட்டில் பெரும்பான்மையான மக்கள், ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்புகளில் 3,000 முதல் 6,000 பேர் வரை எல்லாத்தரப்பையும் கொண்ட சில தொகுதிகள் சாம்பிளாக எடுத்து, முடிவுகள் கூறப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்காளர்களிடம், முதல்வராக யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதியை காட்டிலும், ஜெயலலிதாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது என்கிறது சி.என்.என்., ஐ.பி.என்., சேனல். இந்த சேனல் நடத்திய கணிப்பில், அ.தி.மு.க., 120 முதல் 132 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது. மேலும், தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றபோதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை என்பதை ஏற்கவில்லை.நியூஸ் எக்ஸ் சேனல், அ.தி.மு.க., 125 முதல் 135 தொகுதிகளை பெற்று தனியாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு 22 முதல் 30 இடங்களும், தி.மு.க.,வுக்கு 54 முதல் 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், "ஹெட்லைன்ஸ் டுடே' கருத்துக் கணிப்பு முடிவை முன்கூட்டியே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தி.மு.க., கூட்டணி, ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி இடங்களை பெறும் என குறிப்பிட்டு இருந்தது. இதில், தி.மு.க., கூட்டணிக்கு 115 சீட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. ஸ்டார் நியூஸ் இந்தி சேனலில் தி.மு.க., கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கேரளாவில் மனோரமா நியூஸ், தி வீக், சி.என்.என்., ஆகிய நிறுவனங்களுக்காக, "சென்டர் பார் த ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ்' என்ற அமைப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியது. கேரளாவில் 55 தொகுதிகளில் 220 பகுதிகளில் சர்வே நடத்தியது. இதில் 3,133 வாக்காளர்களை நேரில் கண்டு கருத்துக்களை கேட்டறிந்தது. முதல்வர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பதில், வி.எஸ்.அச்சுதானந்தன் தான் தகுதியானவர் என்று 38 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டிக்கு 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இழுபறியாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு கருத்தாகும். அதே சமயம், கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், இரு மாநிலங்களில் ஆட்சி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஜெயலலிதா வரவேண்டும் என 43 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.

அதே போல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அசாமில் தற்போதைய முதல்வர் அருண் கோகாய் மீது வாக்களர்கள் திருப்தி தெரிவித்துள்ளதால், அவரே முதல்வராக வர வேண்டும் என்றும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மற்ற சேனல்களில் அசாம் குறித்த கருத்துக் கணிப்பில், தருண் கோகாய் வெற்றி பெறுவது இழுபறியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஏ.சி.நீல்சன் - ஸ்டார் ஆனந்தா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - காங்கிரஸ் கூட்டணி 221 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடதுசாரி கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலம், இங்கு போட்டியிடும் கட்சிகள் அதிகம். இங்கு பல்வேறு காரணிகள் உள்ளதால், யாருக்கு வெற்றி என்பது உறுதியாக சொல்லமுடியவில்லை. ரங்கசாமி புதுக்கட்சி துவக்கி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதால், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் சிக்கலில் உள்ளது.

ராஜபக்சக்களின் இனப்படுகொலையை நியாயப்படுத்த இந்தியா உதவுமாம்!


 சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது. பொருத்தமான நேரத்தில் அந்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

இன்று காலை அலரி மாளிகையில் உள்ளூர் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,

“பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஐ.நாவின் அறிக்கையையோ அதன் உள்ளடக்கத்தையோ சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

ஆனாலும் ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அவப்பழியை துடைக்க இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நாவுக்குப் பதில் ஒன்றை அனுப்பவுள்ளோம். 

இந்த அறிக்கையை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரமாகவே எடுத்துக் கொண்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்புவதற்கான பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதாக இருந்தபோதும், ஒரு அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. பொருத்தமான முறையில் அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கும்.

போரின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான எந்தவொரு புள்ளிவிபரத்தையும் வழங்கும் நிலையில் நான் இல்லை.

ஏனென்றால், போர் நடந்த போது அந்தப் பகுதியில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தார் என்ற சரியான புள்ளிவிபரம் ஏதும் கிடையாது.

அரசாங்கம் மேற்கொண்டது மனிதாபிமான நடவடிக்கையே. மக்களை மீட்கின்ற அந்த நடவடிக்கையின் போது பொதுமக்களைப் படையினர் இலக்கு வைக்கவில்லை.

இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவே நடத்தப்பட்டன.

எமது படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு மனிதஉரிமைகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் குறித்த அறிவு போதிக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் எப்போதும் கடைப்பிடிக்கிறார்கள்.

சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது.

இந்தியா எப்போதும் சிறிலங்காவுடன் ஒத்துழைத்து உதவி வருகிறது. எமது உறவுகள் எல்லா வேளைகளிலும் நன்றாகவே உள்ளன.

ஐ.நாவின் இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா பொருத்தமான வேளையில்,  பொருத்தமான பதிலை வழங்கும்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் உண்மைநிலையை பகிரங்கப்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தயாராகி வருகின்றது" என்று மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Monday, 9 May 2011

ஒசாமா பிரேதம் வீசி எறிய முதலே கடலில் தவறி விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது(காணொளிஇணைப்பு)


ஓசாமாவை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க ராணுவம் அவரின் உடலை கடலில் வீசியமை யாவரும் அறிந்த விடயமே. தற்போது அதன் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. இதில் இரு இராணுவவீரர்களுடன் ஒசாமாவை ஏற்றிச்சென்ற வானூர்தி கடலின் மேற்பரப்பில் வேகமாக பறந்துகொண்டிருக்கையில் சீற் பெல்ட் அணியாமல் இரத்தக்கறை படிந்த வெள்ளைத்துணியால் சுற்றிக்கட்டப்பட்ட ஒசாமா பிரேதம் வீசி எறிய முதலே கடலில் தவறி விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது.

பிளேக்கை சந்திக்க மறுத்த ஐனாதிபதி மகிந்த - விசனத்தில் மேற்குலக நாடுகள்


அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க முயற்சித்த போதிலும், இச்சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேட் ஓ பிளேக் கொழும்பில் தங்கியிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவ தாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தது. ஆனால் ரொபேர்ட் ஓ பிளேக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ சந்திக்க முடியாதுள்ளதாக கவலை தெரிவித்து ஜனாதிபதி செயலகம் அமெரிக்கத் தூதரகத்துக்கு கூறியிருந்ததாகவும் இவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அமெரிக்க பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்குடனான சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தவிர்த்தமை தொடர்பில் இலங்கையின் மூத்த அமைச்சர் ராஜித சேனாரத்னவும், மேற்கத்தைய ராஜதந்திரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸு டன் இணைந்து அமைச்சர் ராஜித சேனரத்னவும் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பார்கள் என அரசாங்கத்தரப்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், ரொபேர்ட் ஓ பிளேக் குடனான சந்திப்பில் அமைச்சர் ராஜித சே ரத்ன கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டமைக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் குடும்பமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இக் குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்­வுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதை அவர் விரும்பவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை நிபு ணர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படை யில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் கொழும்பு முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விடம் ரொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டதாலும், அதனை நேரடியாகச் சந்திப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாக ராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவின் சார்பில் இரு முக்கிய விடயங்களை வலியுறுத்தி கூறியுள்ளார். நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை கொழும்பு மேற்கொள்ளத்தவறும் பட்சத்தில், சர்வதேச பொறிமுறைகள் ஊடான விசாரணைகளை மேற்கொள்ளும்படி அமெரிக்கா வலியுறுத்தும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆரோக்கிய மான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு கொழும்பு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ரொபேர்ட் ஓ பிளேக் அமைச்சர் பீரிஷிடம் வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருவிழா குழம்பாமல் இருக்க சிறுவனைக் காப்பாற்ற மறுத்த ஆலய நிருவாகம்(படங்கள் /காணொளி இணைப்பு)

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் கேணியில் விழுந்து பத்து வயதேயான சிறுவன் எழிலரசன் மரணமான சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் அதிர்ச்சியாவையாகவே உள்ளன. 

ஊர்காவற்றுறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலய உற்சவம் கடந்த வாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஆலயகேணியில் பத்து வயது சிறுவன் விழுந்த மரணமாகியிருந்தான். அப்போது ஆலய உற்சவத்தி;ன் இறுதி நிகழ்வான கொடிக்கம்பம் இறக்கும் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்துள்ளது. 



இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 

உயிரிழந்த சிறுவனும் இரண்டு சிறுவர்களும் ஆலய கேணியில் விளையாடிக் கொண்டிருக்கையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த மற்றச் சிறுவர்கள் ஆலயத்தில் இருந்தவர்களிடம் அழுது கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

 

அப்போது ஆலய உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்ததால், இச்சம்பவம் உற்சவத்தைக் குழம்பும் என்பதால் அவ்விடத்திலிருந்த சில பழசுகள் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையை எடுக்காமல் சிறுவன் நீரில் துடிதுடிக்க பார்த்துக் கொண்டிருந்தனர் எனவும் அதனால் காப்பாற்றப்பட வேண்டிய பாலகன் பரிதாபமாக உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் பின்னர் சம்பவத்தினை அறிந்த இளைஞர்கள் சிலர் சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போதே சிறுவனி;ன் உயிர் பிரிந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் ஆலய நிருவாகசபையினருடன் முரண்பட்டதாகவும் தெரியவருகிறது. 



குறித்த சிறுவனின் தந்தை ஞானேந்திரன் கடந்த வன்னி யுத்தத்தின்போது காணாமல் போய்விட்டார். கணவனை இழந்த கவலையில் இருந்து மீளுவதற்கு முன்னரே தாய் சாருலதா தன் மூத்த மகன் எழிலரசனையும் இழந்து நிற்கும் நிலைமையை பார்க்கையில் உள்ளம் ஒரு கணம் உறைந்துவிடுகிறது. 

இவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இடம் பெயாந்த இவர்கள், மூன்று பிள்ளைகளும் தாயுமாக புளியங்கூடலில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்கள். 

படிப்பில் கெட்டிக்காரனான எழிலரசன் வேலனை மேற்கு நடரஜா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்றான். இவன் சம்பவ தினம் தனது பாடசாலை நண்பர்கள் இருவருடன் கேணியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளான். 



இச் சம்பவம் தொடர்பில் எழிலரசனுடன் விளையாடிய இரு சிறுவர்களிடமும் கேட்டபோது… 

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம் அப்போது எழிலரசன் நீரில் மூழ்கி கைகளை அடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் உடனடியாக ஆலயத்தில் இருந்த பெரியவர்களிடம் ஓடிப்போய் சொன்னோம். 

அவர்கள் அது பொய் என்று கூறிக்கொண்டு வந்து எழிலரசன் நீரில் கிடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களையும் கலைத்து விட்டார்கள். இவ்வாறு இருவரும் கூறினார்கள். 



குறித்த தீர்த்தக் கேணிக்கும் ஆலய வாசலுக்கும் உள்ள இடைவெளி சுமார் 50 மீற்றரே அத்துடன் தீர்த்தக்கேணியும் ஆக சுமார் ஆறடியே இப்படி இருக்கும் போது இச்சிறுவனை காப்பாற்றியிருக்க முடியும் என்பதே பலரின் கருத்தாகவுள்ளது. 

அத்துடன் இது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் எனவும் கூறுகின்றனர்.




"ராஜபக்சேவை கைது செய்" விஜய் ரசிகர்கள் உண்ணாவிரத போராட்டம்!


இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம், சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற போரில், அப்பாவி ஈழத் தமிழர்களை இரக்கமே இல்லாமல் சிங்கள இராணுவம் கொன்று குவித்தது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.நா.சபையின் விசாரணைக்குழு இலங்கை போரில் போர்விதிகளை கடைபிடிக்காமல் போர்க்குற்றம் புரியப்பட்டு உள்ளதாக அறிக்கை அளித்தது.
அதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடைபெற்றது.
சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திபன் இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தின் இடையிடையே மன்ற முக்கிய நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.

+2 தேர்வில் சாதனை படைத்த மாணவி!(பட இணைப்பு )

பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. 

தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 மாணவர்கள் தேர்ச்சி ஆனார்கள். இது 85.9 சதவீத தேர்ச்சி ஆகும். 

தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ- மாணவிகளில் மாநில அளவில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி கே.ரேகா முதல் இடத்தை பிடித்தார். 

அவர் 1200-க்கு 1190 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் 4 பாடங்களில் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளார்.