இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம், சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற போரில், அப்பாவி ஈழத் தமிழர்களை இரக்கமே இல்லாமல் சிங்கள இராணுவம் கொன்று குவித்தது. இதுபற்றி விசாரணை நடத்திய ஐ.நா.சபையின் விசாரணைக்குழு இலங்கை போரில் போர்விதிகளை கடைபிடிக்காமல் போர்க்குற்றம் புரியப்பட்டு உள்ளதாக அறிக்கை அளித்தது.
அதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடைபெற்றது.
சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திபன் இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தின் இடையிடையே மன்ற முக்கிய நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.









0 comments:
Post a Comment