Premium WordPress Themes

Monday, 9 May 2011

திருவிழா குழம்பாமல் இருக்க சிறுவனைக் காப்பாற்ற மறுத்த ஆலய நிருவாகம்(படங்கள் /காணொளி இணைப்பு)

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் கேணியில் விழுந்து பத்து வயதேயான சிறுவன் எழிலரசன் மரணமான சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் அதிர்ச்சியாவையாகவே உள்ளன. 

ஊர்காவற்றுறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலய உற்சவம் கடந்த வாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஆலயகேணியில் பத்து வயது சிறுவன் விழுந்த மரணமாகியிருந்தான். அப்போது ஆலய உற்சவத்தி;ன் இறுதி நிகழ்வான கொடிக்கம்பம் இறக்கும் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்துள்ளது. 



இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 

உயிரிழந்த சிறுவனும் இரண்டு சிறுவர்களும் ஆலய கேணியில் விளையாடிக் கொண்டிருக்கையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த மற்றச் சிறுவர்கள் ஆலயத்தில் இருந்தவர்களிடம் அழுது கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

 

அப்போது ஆலய உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்ததால், இச்சம்பவம் உற்சவத்தைக் குழம்பும் என்பதால் அவ்விடத்திலிருந்த சில பழசுகள் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையை எடுக்காமல் சிறுவன் நீரில் துடிதுடிக்க பார்த்துக் கொண்டிருந்தனர் எனவும் அதனால் காப்பாற்றப்பட வேண்டிய பாலகன் பரிதாபமாக உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் பின்னர் சம்பவத்தினை அறிந்த இளைஞர்கள் சிலர் சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போதே சிறுவனி;ன் உயிர் பிரிந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் ஆலய நிருவாகசபையினருடன் முரண்பட்டதாகவும் தெரியவருகிறது. 



குறித்த சிறுவனின் தந்தை ஞானேந்திரன் கடந்த வன்னி யுத்தத்தின்போது காணாமல் போய்விட்டார். கணவனை இழந்த கவலையில் இருந்து மீளுவதற்கு முன்னரே தாய் சாருலதா தன் மூத்த மகன் எழிலரசனையும் இழந்து நிற்கும் நிலைமையை பார்க்கையில் உள்ளம் ஒரு கணம் உறைந்துவிடுகிறது. 

இவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இடம் பெயாந்த இவர்கள், மூன்று பிள்ளைகளும் தாயுமாக புளியங்கூடலில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்கள். 

படிப்பில் கெட்டிக்காரனான எழிலரசன் வேலனை மேற்கு நடரஜா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்றான். இவன் சம்பவ தினம் தனது பாடசாலை நண்பர்கள் இருவருடன் கேணியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளான். 



இச் சம்பவம் தொடர்பில் எழிலரசனுடன் விளையாடிய இரு சிறுவர்களிடமும் கேட்டபோது… 

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம் அப்போது எழிலரசன் நீரில் மூழ்கி கைகளை அடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் உடனடியாக ஆலயத்தில் இருந்த பெரியவர்களிடம் ஓடிப்போய் சொன்னோம். 

அவர்கள் அது பொய் என்று கூறிக்கொண்டு வந்து எழிலரசன் நீரில் கிடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களையும் கலைத்து விட்டார்கள். இவ்வாறு இருவரும் கூறினார்கள். 



குறித்த தீர்த்தக் கேணிக்கும் ஆலய வாசலுக்கும் உள்ள இடைவெளி சுமார் 50 மீற்றரே அத்துடன் தீர்த்தக்கேணியும் ஆக சுமார் ஆறடியே இப்படி இருக்கும் போது இச்சிறுவனை காப்பாற்றியிருக்க முடியும் என்பதே பலரின் கருத்தாகவுள்ளது. 

அத்துடன் இது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் எனவும் கூறுகின்றனர்.




0 comments:

Post a Comment