சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து சிறீலங்கா அரசுக்குள் பாரிய விரிசல்கள் தோன்றியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் சிறீலங்கா அரசு சில மூத்த அமைச்சர்களை புறக்கணித்திருந்தது. தற்போது அவர்கள் மறைமுகமாக ஐ.நா அறிக்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஐ.நாவின் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரரித்துள்ளதையும் அவர்கள் மறைமுகமாக வரவேற்றுள்ளனர். வெளிப்படையான ஆதரவுகளை வழங்கினால் தாம் கொல்லப்படலாம் என அச்சமடைந்துள்ள அமைச்சர்கள், ஐ.நாவின் நடவடிக்கை தீவிரமாகும் வரை காத்திருக்கின்றனர்.
சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் இறுகும்போது அரசில் பாரிய விரிசல்கள் ஏற்படுவதுடன், பலர் அரசில் இருந்து வெளியேறி இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் சாத்தியங்கள் தென்படுவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.









0 comments:
Post a Comment