ரஜினி நடித்து ஹிட்டான ‘தில்லுமுல்லு’ படம் ‘தில்லு முல்லு 2′ என்ற பெயரில் தற்போது தயாராகியுள்ளது. இதில் ரஜினி கேரக்டரில் சிவா நடித்துள்ளார். வருகிற 14-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.
இதற்கிடையில் ‘தில்லு முல்லு 2′ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி டைரக்டர் விசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
‘தில்லுமுல்லு’ படம் ரஜினி நடித்து வெளிவந்தது. அப்படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுதினேன். தற்போது அப்படத்தை ‘தில்லு முல்லு 2′ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தை எடுப்பதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே ‘தில்லுமுல்லு2′ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.










0 comments:
Post a Comment