Premium WordPress Themes

Saturday, 16 July 2011

ஆபாச பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அதிகாரவர்க்கம் மட்டுமே ஆட்கொண்டுள்ள நம் நாட்டில் நம் கருத்துக்களை அதிகாரமாக கூற கூட இங்கு வழியில்லை. அப்படியே நாம் கூறினாலும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் தான் நாம் பேசும் இடத்திலாவது உட்காரும் மனநிலமைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நம் கருத்துக்களை எந்த வித தங்கு தடையின்றி குறிப்பாக எந்த மூலதனமும் செய்யாமல் வெளியிட உதவும் மிகப்பெரிய சேவையை இந்த பிளாக்கர் தளம் நமக்கு வழங்கி உள்ளது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாமரன் கூட தன்னுடைய கருத்தை கூறினால் அதையும் படிக்க நான்கு பேர் இந்த இணையத்தில் உள்ளனர் என நினைப்பதில் சந்தோசமாகவே உள்ளது. ஆனால்  இந்த பிளாக்கர் வசதியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா.
நீங்களே நினைத்து பாருங்கள் இது போன்ற வசதிகள் நமக்கு இல்லையென்றால் தங்கள் கருத்தை எப்படி வெளிப்படுத்தி இருக்க முடியும்.யாராவது கேட்டிருப்பார்களா அனால் இந்த பதிவுலகத்தில் நீங்கள் இங்கு பதிவு போட்ட அடுத்த வினாடியே உலகம் முழுவதும் உங்கள் பதிவுகளை பார்க்கிறார்கள் நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் அனைவரிடமும் பரவுகிறது. இது போன்ற அற்புத வசதியை நாம் ஒழுங்காக பயன்படுத்துகிறோமா. இந்த பொன்னான வசதியை நாம் வீணடித்து கொண்டே இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். உண்மையும் அது தான். 

ஏதேதோ பதிவு எழுதுகிறார்கள் அதையெல்லாம் விட்டு இந்த ஆபாச பதிவர்களை மட்டுமே ஏன் எச்சரிக்கை செய்கின்றேன் என்றால் அடுத்த உலகை ஆளப்போகும் இளைஞர்களில் பாதிக்குமேல் வழிதவறி செல்ல முக்கிய காரணமாக உள்ளது இந்த ஆபாசம் தான். டிவிக்களிலும் செய்திதாள்களிலும் போடறாங்க அவங்களையெல்லாம் கேட்கல நம்பள மட்டும் கேட்க்க வந்துட்டாரு பெரிய பு..... மாதிரி அப்படின்னும் நம்ம நண்பர்கள் ஒரு எதிர்கேள்வி கேட்பாங்க அவுங்களுக்கு என்னுடைய ஒரு எதிர்கேள்வி.
டிவிக்காரன், பத்திரிக்கை காரர்களே திருந்தவே மாட்டிங்களே என்று நாம்மால ஒரு கேள்வி கேட்க முடியுமா அப்படியே கேட்டால் அவர்களின் ஒரே பதில் நீங்கள் என்ன யோக்கியமா உங்களில் எத்தனை பேர் இந்த ஆபாசத்தை எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று நம்மையே திருப்பி கேள்வி கேட்பார்கள். நம்மில் ஒருவர் தப்பு செய்தாலும் அந்த பழி மொத்த பதிவுலகத்தையே சாரும். எனக்குள் உள்ள ஒரு கேள்வி இந்த மீடியாக்கலாவது பெரிய முதலீடு பண்ணி இருப்பதால் அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள இது போன்ற செயல்களில் ஈடு படுகிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் நம் பதிவர்கள் ஏன் இது போன்று எழுதுகிறார்கள் ஹிட்ஸ் காகவா கேவலம் இந்த ஹிட்ஸ் வாங்குவதால் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆங்கிலத்தில் எழுதினாலும் கூகுள் அட்சென்ஸ் மூலமாவது ஒருதொகை கிடைத்திருக்கும் தமிழில் எழுதுவதால் கேவலம் இதுக்கு கூட தகுதி அற்றவர்களாக நம்மை ஒதுக்கி வைத்துள்ளார்கள் அப்படி இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் நம் சமூகம் கெட்டுபோக நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை  யோசிக்காமல் இது போன்ற பதிவுகளை எழுதுகிறார்களா என நினைக்க தோன்றுகிறது.

இவரு மட்டும் பெரிய பு........., பெரிய சமூக விழிப்புணர்வு பதிவா போடுறாரு கேவலம் ஆங்கில தளத்துல இருந்து காப்பி அடிச்சி செய்திய என்னவோ இவரே கண்டு புடிச்ச மாதிரி போட்டுக்கிட்டு நம்மள குறை சொல்ல வந்துட்டாரு. நம்மாளுங்க இப்படியல்ல இதுக்கு அதிகமாகவே அசிங்கமாகவும் என்னை திட்டலாம் காரணம் நமக்கு தான் ஏதாவது நம்ம பத்தி உண்மைய சொன்னாலே அப்படியே கால்ல இருந்து தலை வரை பத்திகிட்டு எரியுமே.  அவங்ககளுக்கான என் பதில் என்னால் என் நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும் என் எழுத்தால்  என் சமூகத்தில் ஒருவர் கூட பாதிப்படைய வில்லை, என்று உங்களால் கூற முடியுமா? 

நான் ஒருத்தன்  மட்டும் திருந்தினால் இந்த ஒட்டுமொத நாடும் திருந்தி விடுமா என்று என நீங்கள் நினைத்தால் முதலில் நம்மை திருத்தி கொண்டால் தான் மற்றவர்களை திருத்தும் தகுதி நமக்கு உண்டாகிறது. ஒரு இளைஞன் திருந்தினால் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் பயன் ஆனால் ஒரு பதிவர் திருந்தினால் குறைந்தது பத்து இளைஞர்களை திருத்தும் சக்தி அவரின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை யாரும் மறக்க வேண்டாம். 

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம் இவ்வளவு சொன்ன பிறகும்  பிளாக்குகளில் செக்ஸ் பற்றியோ ஆபாசமாகவோ எழுதக்கூடாதா. இயற்க்கை நமக்கு வழங்கி உள்ள அற்ப்புத உணர்வு செக்ஸ் அதை பற்றி எழுதக்கூடாதா என்று சில கேள்வி மனதில் தோன்றினால் என்னுடைய பதில் நீங்கள் உங்கள் விருப்பம் போல எழுதிகொள்ளுங்கள் என்பதாகும் (இவ்வளவு கூறிய பிறகும் இவனுங்க எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன என்று நீங்கள் கூறும் போது உங்களை ஒன்னும் பண்ண முடியாது) ஆனால் அப்படி எழுதும் போது  உங்கள் பிளாக்குகளுக்கு நீங்கள் Adult Content Warning என்ற வசதியை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அந்த வசதி இருப்பது எங்களுக்கு தெரியாது, வசதி இருப்பது தெரியும் ஆனால் எப்படி அதை வைப்பது என தெரியாது என்று ஏதாவது சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு உங்கள் பிளாக்கில் DASSBOARD - SETTINGS - ADULT CONDENT - YESகொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் மீறி நாங்களெலாம் தலைப்பிற்கு 18+ போடுகிறோமே அப்புறம் ஏன் அந்த பதிவை படிக்க வருகிறார்கள் என முட்டாள் தனமான கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் நீங்கள் போடும் பதிவு என் ஒருவனுக்கு மட்டும் பிரச்சினையல்ல என்னுடைய ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் பிரச்சினை என்பதை உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.(எத்தனையோ மொழிகளில் பதிவுகள் வெளிவந்தாலும் தலைப்பில் 18+ என்று ஒன்றை கண்டறிந்தது தமிழ் பதிவர்களாக தான் இருக்கும் என நினைக்கிறேன்)
நான் அப்படி தான் எழுதுவேன் உன்னால என்ன பண்ண முடியும்:

இவ்வளவு கத்திய பிறகும் நீங்கள் இவற்றில் எதையும் கடைபிடிக்க வில்லை என்றால் அவர்களுக்கான என் எச்சரிக்கை உங்கள் பிளாக்கை பற்றி திரட்டிகள், பிளாக்கர், கூகுள் தளங்களில் புகார் கூறினால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும். திரட்டிகளும், பிளாக்கர் மற்றும் கூகுள் தளங்கள் ஒரு போதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை. பிளாக்கர் தளத்தில் புகார் செய்தால் அது உங்கள் பிளாக்கை செயல் இழக்க வைக்கலாம். கூகுள் உங்கள் தளத்தை சாதாரணமாக தேடலின் போது உங்கள் தளத்தை தடை செய்யும். ஆபாச சம்பந்தமாக தேடும் போது மட்டுமே உங்கள் பிளாக் வர வாய்ப்பு இருக்கலாம். மற்றும் திரட்டிகளும் ஒருபோதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை என்று அவர்களின் விதிமுறைகளில் கூறி உள்ளனர்.


(நண்பர்களே மேலே உள்ள அனைத்தையும் விடுங்கள் உங்கள் வீடுகளில் உங்கள் தம்பியோ,தங்கைகளோ இது போன்று ஆபாச பதிவுகளை படிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா என்பதை மனச்சாட்சியோடு யோசித்து பாருங்கள், மற்றவர்களையும் நம் தம்பி, தங்கைகள் போல பாவித்து இது போன்ற பதிவுகளை இனி தயவு செய்து எழுத வேண்டாம் என்று உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்).

Thursday, 14 July 2011

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... போலீஸ் தடியடி! (காணொளி இணைப்பு)


சென்னை: சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலையத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள்.

குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மையைத் தெரிவித்தனர்.

இதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள். ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.



ஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது. காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர்.



இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

மேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்பட்டது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும்பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவியாளர்.

ஒரு தமிழ் இளைஞனின் உள்ள குமுறுல்(காணொளி இணைப்பு)


எமது தளத்தில் பலவிதமான விநோதங்களை கண்டு ரசித்திருப்பீர்கள். பிரமித்தும் இருப்பீர்கள் ஆனால் இன்றும் நாம் தரும் செய்தி ஒரு தமிழ் இளைஞனின் உண்மை நிலையினை நகைச்சுவையாக சொல்லுகிறார் பாருங்கள்.

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் சமூகத்திற்கு வெளிநாடு செல்வது என்பதே பெரும் கனவாகவும் அதுவே முக்கியமானதொன்றாகவும் உள்ளது.
வெளிநாடு ஒன்றில் கால் எடுத்து வைக்கும் வரை எத்தனை விதமான துன்பங்கள், கொடுமைகள் நிறைந்து இருக்கின்றது. புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் இளைஞர் ஒருவர் தனது மனைவியின் வரவை எண்ணி மொட்ட தலையாய் போன சோகத்தை பாருங்கள்.
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை" என்பது எம் தமிழ் சமூகத்திற்கு மிகவும் பொருத்தும் என்பதே இக் காணொளியின் வெளிப்பாடு.
வெளிநாட்டு கனவுடன் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு சிந்திக்க வைக்கவே பாரிஸ்தமிழ் இக்கொணியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றது.

Tuesday, 12 July 2011

புலம்பெயர் தமிழர்களை அடக்க கோத்தபாய போட்ட திட்டம்


 சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளை மடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார் போராளிகள் விவகாரத்தை, புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து, அவற்றின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தும் இந்த அமைப்புகள் சிறார் போராளிகள் விவகாரத்தைத் தட்டிக் கழிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் கூறியுள்ளன.

விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைவர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, வெளிநாடுகளில் நிதி சேகரித்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பிய வகையில் இந்த அமைப்புகள் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இதற்கு முன்னோடியாக கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சிடம் யுனிசெவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கையளித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணாமற்போன சிறார்கள் தொடர்பான அந்த அறிக்கையை அலரி மாளிகையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச லியம் பொக்சிடம் கைளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்தவார இறுதியில் அந்த அறிக்கை கோத்தாபய ராஜபக்சவின் கைக்குக் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துடன் இணைந்து யுனிசெப் நடத்திய விசாரணைகளின் போது, காணாமற்போன பெரும்பாலான சிறார்களை விடுதலைப் புலிகளே கட்டாயமாக படைகளில் சேர்த்துக் கொண்டதாக அவர்களின் பேற்றொர் கூறியுள்ளனர்.

காணாமற்போன சிறார்கள் குறித்த 676 முறைப்பாடுகளில் 64 வீதமானவை விடுதலைப் புலிகளால் சிறார் போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை வைத்துக் கொண்டு, பிரித்தானிய அரசாங்கத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் லியம் பொக்சுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வலுவாக ஆதரித்தவர் லியம் பொக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வந்த அவரைக் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணகளை வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக பிரித்தானியாவைத் திருப்பி விடும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயின் உடலத்தோடு பல நாட்களைக் கழித்த குழந்தை


Bordeaux நகரத்தில் அவசர முதலுதவிப்படையினர் 3 வயதுக் குழந்தையொன்றை அதன் தாயின் உடலத்துக்கருகிலிருந்து மீட்டுள்ளனர். குழந்தையின் தாய் இறந்து பல நாட்கள் ஆகியிருந்துள்ளது.
        இறந்தவரின் சகோதரி தன் சகோதரியிடமிருந்து சில நாட்களாக அழைப்பு எதுவும் வரவில்லையென்றும் தொலைபேசிக்கும் பதிலளிக்கவில்லையென்றும் கொடுத்த முறைப்பாட்டைஅடுத்து நான்காம்



மாடியிலிருந்தஇறந்தவரின் வீட்டைத் தீயணைப்புப் படையின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து உள் நுழைந்த போது சகேதரி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அருகே நலிந்த நிலையில் 3 வயதுக் குழந்தை இருந்தது.
வீடு முழுவதும் எஞ்சியிருந்த உணவுகள் சிதறிக்கிடந்தன. குழந்தை அவற்றை உண்டும் பிஸ்கட்களையும் கேக் போன்றவற்றையும் உண்டும் இருந்துள்ளது. மருத்துவர்களின் ஊகத்தின் படி இது இயற்கை மரணமென்றும் இறந்து நாட்கள் பல ஆகியுள்ளதெனவும் தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு பராமரிக்கப்படுகின்றது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லையென வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும் இந்தக் குழந்தையின் தந்தையும் சில மாங்கள் முன்னரே இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசியாவின் பந்த பாசக் கூட்டு வாழ்க்கையை விமர்சித்துக் கொண்டு பாசங்களையும் பந்தங்களையும் தூர வைத்துவிட்டுத் தனி வாழ்க்கை  வாழும் இவர்கள் வாழ்க்கை முறை இறந்தால் கூட அழுகி துர்நாற்றம் வந்தால் பிறகே அறியும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டு வருகின்றது.