Premium WordPress Themes

Friday, 24 June 2011

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை : ஈழத்தமிழன் சாதனை

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு ஈழத்தமிழர். 

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைச சேர்ந்த Dr.சிதம்பரநாதன் சபேசன் என்பவரே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். 

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்க இத்தொழினுட்பம் பெரிதும் உதவி புரியும்.

ஏற்கனவே பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ள போதிலும், அவை மின்கலன் இருந்தால் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் அவற்றின் உற்பத்திச்செலவும் மிகவும் அதிகமாகும். 

ஆனால், டாக்டர்.சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்று கூறப்படுகிறது.  

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இந்த சாதனைத் தமிழர்.

Thursday, 23 June 2011

திகாரில் மெழுகு வர்த்தி செய்யும் கனிமொழி


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.

கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.

அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந் நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம். கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார்.

தினமும் திமுக தலைவர்கள் பலர் கனிமொழியைச் சந்திக்க வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிம்மிற்கும் போக வேண்டாம். நிறைவான தாம்பத்யமே போதும்

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்

நிம்மதியான உறக்கம்


நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது.

உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும்.

வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைத் திறன்


தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும். படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

விஜய்யை முந்திய சூர்யா


ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.
விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மாற்றான் படத்துக்கு சூர்யாவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பதினைந்து கோடிகளாம். படம் அறுபது கோடிக்கு மேல் விலை போகும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
விஜய்யின் வேலாயுதமும், நண்பனும் வெற்றி பெற்றால் சூர்யாவை விஜய் எளிதாக முந்திவிடுவார் என்பதும் முக்கியமானது.

Wednesday, 22 June 2011

அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்


 முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.

Sunday, 19 June 2011

"அவன் இவன்"விமர்சனம்

பாலாவின் படம்! ஆனால் பலான, பலான படமோ...? எனும் சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கும் படம் தான் "அவன் இவன்". பின்ன என்னங்க? "பிதாமகன்" படத்தில் சிம்ரனையே ஒரு பாடல் காட்சியில் போர்த்தி கொண்டு ஆடவிட்ட பாலா, இதில் வயதான ஜமீன்தார் ஜி.எம்.குமாரை நிர்வாணமாய் ஓட செய்து, அவரை துரத்தி துரத்தி வில்லன் ஆர்.கே.வை விட்டு கொல்வதும், அம்மணமாய் தூக்கில் தொங்கவிட்டு ஊரையே வேடிக்கை பார்க்க வைப்பதும் "ஏ" ரகம் என்றால், ஹீரோக்கள் விஷாலும், ஆர்யாவும் கிராமத்து யதார்த்தம் எனும் பெயரில் பேசும் சில வசனங்களும், சில செய்கைகளும் அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் "பி" ரகம்!

கதைப்படி ஊர் பெரிய மனிதர், ஜமீன் தீர்த்தபதி, இத்யாதி... இத்யாதி எல்லாம் சேர்ந்தது தான். படத்தில் கேரக்டர் ஆர்‌ட்டிஸ்ட் ஜி.எம்.குமாரின் பாத்திரம்! ஓட்டு மீசையுடன் கொட்டமடிக்கும் அவருக்கு உற்ற துணையாக வாழும் பாத்திரங்கள், வால்டர் வணங்கா முடி விஷாலும், அவரது தம்பி கும்புடறேன் சாமி ஆர்யாவும். எலியும் பூனையுமாக திரியும் இந்த இருவருக்கும் திருடுவது தான் குலத்தொழில்! திருட போகவில்லையென்றால் சாமி குத்தம் என இவர்களை கொம்பு சீவிவிடும் சக்களத்தி தாய் குலங்கள் அம்பிகா -  பிரபா ரமேஷ் இருவரும்! இவர்களின் செட் பிராப்பர்ட்டி புருஷன் - அனந்த் வைத்தியநாதன்.

ஒன்றரை கண்ணும், பொம்பளை வேஷமுமாக திருட்டு தொழிலுடன் திரியும் விஷாலுக்கு, பெண் போலீஸ் ஜனனி அய்யர் மீது காதல்! ஜட்ஜ் வீட்டு லாக்கருக்கே கள்ளச்சாவி செய்து சபாஷ் வாங்கும் கும்புடறேன் சாமி (படத்தில் இதுதான் அவரது பாத்திரப்பெயர்...) ஆர்யாவுக்கு ஜமீன் ஜி.எம்.குமாரின் பரம்பரை விரோதி மகள் மதுஷாலினி மீது காதல். இவர்களையும், இவர்களது க‌ாதலையும் வைத்துக் கொண்டு படத்தை என்னமாய் காட்சி பண்ணி இருக்கிறார் பாலா!! சில பல அநாகரீக வசனங்களை தவிர்த்து பிரமாதமாய் காட்சிகள் பண்ணியிருக்கும் இயக்குநர் பாலா, கதையில் கோட்டை விட்டிருப்பதுதான் அவன் இவன் படத்தின் பலவீனம்!

வால்டர் வணங்காமுடியாக விஷால் ஒன்றரை கண் பாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதுவும் பொம்பளை வேஷத்தில் அவர், ஆரம்ப காட்சியில் ஜி.எம்.குமாருடன் சேர்த்து ரசிகர்களையும் வசியம் பண்ணும்படி போடும் ஆட்டம் பிரமாதம். நிச்சயம் விஷாலுக்கும் விருதுகள் பல காத்திருக்கின்றன.

விஷாலாவது ஒன்றரை கண்ணுடன் கஷ்டப்பட்டு ரசிகர்களை கவருகிறார். ஆனால் அவரது தம்பியாக ஆர்யா அடிக்கும் லூட்டிகள் செம பியூட்டி! அசால்டாக சட்டி கிராப்பும், சுட்டி தனமுமாக ஒரு சில இடங்களில் விஷாலையே தூக்கி சாப்பிடுட்டு விடுகிறார் ஆர்யா!

ஜனனி அய்யர், மது ஷாலினி இருவரும் புதுமுகங்கள் என்பதையும் தாண்டி பளிச்சிட்டிருக்கின்றனர். ஜி.எம்.குமார், ஜமீன் தீர்த்தபதியாக மனதில் பதிகிறார். க்ளைமாக்ஸ்க்கு இரண்டு ரீல்களுக்கு முன்பே எண்ட்ரியாகும் ஆர்.கே., தன் கொடூர வில்லத்தனத்தால் ரசிகர்கள் மனதில் வியாபித்து விடுகிறார். டி.எஸ்.பி., கனவுடன் சப்-இன்ஸ்பெக்டர் சின்னாண்டி கேரக்டரில் புதியவர் கே.ராமராஜ் பண்ணும் கள்வர்களுக்கு கறிவிருந்து உள்ளிட்ட கலாட்டாக்களிலும், ஆர்யாவின் நண்பன் பேத்தையாக மாஸ்டர் வி.விக்னேஷ் பண்ணும் சிரிப்பு சேட்டைகளிலும் கூட இயக்குநர் பாலா தெரிவது "அவன் இவன்" படத்தின் பலம்!

விஷால் - ஆர்யா மட்டுமல்ல... "அவன் இவன்", இசையமைப்பாளர் யுவனும் தான் எனச் சொல்லும் அளவிற்கு யுவனின் பின்னணி இசை தான், படத்தின் சில காட்சிகளை போரடிக்காமல் போக செய்கிறது. பேஷ்! பேஷ்!

இசையமைப்பாளர் யுவன் மாதிரியே, ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன், படத்தொகுப்பாளர் - சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் - டி.முத்துராஜ், வசனகர்த்தா - எஸ்.ராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட பிரம்மகர்த்தாக்கள், பிரமாண்டங்கள் இருந்தும் இயக்குநர் பாலா பல இடங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

எப்படிபார்த்தாலும் "அவன் இவன்" கொஞ்சகாலம் தியேட்டரில் போவான்! ரொம்ப காலம் தமிழ் சினிமாவில் பேசப்படுவான்!!