Premium WordPress Themes

Friday, 24 June 2011

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை : ஈழத்தமிழன் சாதனை

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு ஈழத்தமிழர். 

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைச சேர்ந்த Dr.சிதம்பரநாதன் சபேசன் என்பவரே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். 

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்க இத்தொழினுட்பம் பெரிதும் உதவி புரியும்.

ஏற்கனவே பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ள போதிலும், அவை மின்கலன் இருந்தால் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் அவற்றின் உற்பத்திச்செலவும் மிகவும் அதிகமாகும். 

ஆனால், டாக்டர்.சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்று கூறப்படுகிறது.  

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இந்த சாதனைத் தமிழர்.

0 comments:

Post a Comment