Premium WordPress Themes

Saturday, 4 June 2011

சனல் 4 இன் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் :பார்த்தவர்களின் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் (காணொளி இணைப்பு )

ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4,

இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.



இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது காணக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியின் கருத்துக்கள்..



சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.



அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.



SriLanka 's Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, 3 June 2011

நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை


நடிகர் வடிவேலு, நித்யானந்தா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் இது போன்று நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் 25 கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். வேறு எந்த நடிகரும் இவ்வளவு கேரக்டர்களில் நடித்தது இல்லை. இந்த 25 வேடங்களில் ஒன்று தான் சுவாமி நித்யானந்தா வேடம்.
நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற படுக்கை வீடியோ படம் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அது போலியானது என்று இருவரும் மறுத்துள்ளனர். இது சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.
 
நித்யானந்தா வேடத்தில் வடிவேலு நடிக்கும் போது வீடியோ பட சர்ச்சைகள் காட்சியாக்கப்படலாம் என தெரிகிறது. ரஞ்சிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. தனது வேடத்தில் வடிவேலு நடிப்பதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
வடிவேலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எச்சரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உலகம் பட பூஜை நடந்தது.
 
ஆனாலும் படப்பிடிப்பு துவங்க வில்லை. நித்யானந்தா போல் வடிவேலு காவி உடை அணிந்து தோன்றும் காட்சிகள் போட்டோவில் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. நித்யானந்தா எதிர்ப்பால் அந்த கேரக்டர் படத்தில் இடம் பெறுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

Thursday, 2 June 2011

சென்னை சில்க்கில் ரஜினிகாந்!(காணொளி இணைப்பு)

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலால் மிகவும் கவரப்பட்ட இரசிகர்களில் ஒருவர் இந்தியாவின் சென்னை சில்க் ஆடையகத்தில் வேலை பார்க்கின்றார்.

வாடிக்கையாளர்கள் வாங்குகின்ற ஆடைகளை பைகளுக்குள் வைத்து பத்திரமாக கொடுக்கின்றமை இவரின் அன்றாட வேலை. இவரது நாளாந்த வேலையில் ரஜினிகாந்தின் செல்வாக்கு தெரிகின்றது.

Wednesday, 1 June 2011

வெளியானது வேலாயுதம் கதை:அதிர்ச்சியில் விஜய்

விஜய் - ஜெயம் ராஜா இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆரம்பிக்கும்போதே இக்கதையின் கரு தெலுங்கு படமான 'ஆசாத்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா' படத்தின் இயக்குனரான திருப்பதிசாமி தெலுங்கில் எழுதி இயக்கிய படம் 'ஆசாத்'.  இந்நிலையில் ஆசாத் படத்தின் கதை கரு தான் வேலாயுதம் என்றால் அப்படத்தின் கதை என்ன?

 'வேலாயுதம்' படத்தின் கதை :
பேனா முனையால் எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை கொண்ட பெண் பத்திரிக்கையாளர் ஜெனிலியா. கிராமத்தில் பால் வியாபாரம் செய்யும் இளைஞர்  விஜய். கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் அமைதியாக வாழ்கிறார் விஜய்,

 தங்கையின் திருமணம் நெருங்கி வர, கஷ்டப்பட்டு சிட்பண்டில் சேர்த்த சேமிப்பை எடுத்துச் செல்ல நகரத்துக்கு  வருகிறார்.
விஜய் வந்த நேரத்தில் நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல்  திணறுகிறது காவல்துறை. இந்நேரத்தில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, குண்டு வைத்த சதிகாரனைக் தண்டிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் அடித்து பரப்பி, டிவி செய்திகள் மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார் விஜய்.

பால்கார விஜய் நகரத்தில் பிரபலமான கோயிலில் வந்து அர்ச்சனை செய்கிறார். அப்போது பெயர் சொல்லுங்கள்  என்று அய்யர் கேட்க,  வேலாயுதம் என்று கூறுகிறார் விஜய். அய்யர் உட்பட வழிபாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான வேலாயுதம் இவன் தான் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.

 சதிகாரன் வைத்த வெடிகுண்டு வெடிக்காமல் போகும் போதெல்லாம் அங்கே தற்செயலாக  வேலாயுதம் நிற்கிறார். வேலாயுதம் பெயரும், முகமும் ஒரே இரவில் பிரபலம் ஆகிவிடுகிறது.

நாம் உருவாக்கிய கற்பனை பாத்திரம் நிஜமாகவே வந்துவிட்டதோ என்று குழம்பி அவஸ்தைப்படுகிறார் ஜெனிலியா.  விஜய்யை நேரில் சந்தித்து பேட்டி கேட்க விஜய்யோ 'உன்னால் தான் எல்லாம் என்னை ஆள விடு' என்று  நழுவுகிறார். ஜெனிலியாவிடமிருந்து தப்பித்து ஊருக்குச் செல்லத் தயாராகும் விஜய், அதற்குமுன் தங்கையின் கல்யாண செலவுக்கு பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார்.   பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்ற, சிட்பண்டை துவம்சம் செய்கிறார் விஜய்.  இதனால் சதிகார வில்லன், பால்கார  விஜய்யை பழிவாங்க துடிக்கிறார்.

இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமண ஏற்பாடுகள் களை கட்டுகிறது.  தக்க தருணம் பார்த்து வேலாயுதத்தை பழிவாங்கத் துடிக்கும் வில்லன்,   திருமண பந்தலில் குண்டு வைத்து விட, அந்தத் தாக்குதலில் விஜயின் தங்கை இறந்துவிட, பால்கார விஜய், மக்கள் நம்பும் சூப்பர்பவர் வேலாயுதமாக மாறுகிறார்.

கதைப்படி ஜெனிலியா தான் முக்கியமான நாயகி. ஹன்சிகா கிராமத்தில் பால்கார விஜய்யை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம்.

Tuesday, 31 May 2011

அஜீத் விஜய் இணையும் மங்காத்தா


கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார்.  ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா...? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது. 
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான். 
 
தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

10 நாட்களில் சென்னை திரும்புகிறார் ரஜினி


10 நாட்களில் சென்னை திரும்புகிறார் ரஜினி: நடிகர் தனுஷ் பேட்டி
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்புகிறார் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரஜினி தற்போது விரைவாக குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அவர் சென்னை திரும்புகிறார்.
மருத்துவமனையில் குடும்பத்தினருடன் அவர் வழக்கமான நாட்களைப் போல நேரத்தை செலவிட்டு வருகிறார்.
 
ரஜினியின் உடல்நலம் குறித்து இணையதளம் மற்றும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்

Sunday, 29 May 2011

13 வயது மகளின் கன்னித் தன்மையை விற்ற தாய்


தன் 13 வயது மகளின் கன்னித் தன்மையை, நாலரை லட்ச ரூபாய்க்கு விலை பேசிய தாய், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், சால்ட் லேக் நகரில் வசித்து வந்தவர் பெலிசியா மெக்ளூர், 32. இவருக்கு, 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.பெலிசியா தனது மகளின் கன்னித் தன்மையை விற்று, அதன் மூலம் பணம் சம்பாதிக்க எண்ணினார். அதனால் அவர், டான் என்ற ஒரு நபரிடம் தொடர்பு கொண்டார். அவரும் அதற்குச் சம்மதித்து, விலை பேசினார்.பேரத்தின் இறுதியில், பெலிசியா, தனது மகளின் கன்னித் தன்மைக்கு, நாலரை லட்ச ரூபாய் பெற்றுக் கொள்ள, ஒப்புக் கொண்டார். இந்நிலையில், சிறுமியை ஆபாசமாகப் படம் எடுத்த பெலிசியா, அந்தப் புகைப்படங்களை, வில் என்ற நபரிடம் கொடுத்தார். அவரிடமும் தன் மகளை விற்க, சம்மதம் தெரிவித்திருந்தார்.

இதையறிந்த டான், இரு அடியாட்களை விட்டு, அந்தச் சிறுமியைத் தூக்கி வரச் செய்தார். ரகசிய வீட்டில் சிறுமியை அடைத்த அவர், தோலால் செய்யப்பட்ட உள்ளாடைகளை சிறுமிக்கு அணிவித்து, போட்டோ எடுத்தார்.பெலிசியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த அவரது காதலன், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். பெலிசியாவைக் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டனர். நடந்ததை பெலிசியா ஒப்புக் கொண்டார். கோர்ட்டில், நீதிபதி சிறுமியிடம் விசாரித்த போது, தாய்க்குப் பயந்து, அவரது நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், உண்மையில் தனக்கு சம்மதம் இல்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து, குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெலிசியா, சால்ட்லேக் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்றே கால் கோடி ரூபாய் கொடுத்தால் தான், அவருக்கு ஜாமின் கிடைக்கும் என, கோர்ட் கூறிவிட்டது.