Premium WordPress Themes

Friday, 3 June 2011

நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை


நடிகர் வடிவேலு, நித்யானந்தா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் இது போன்று நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் 25 கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். வேறு எந்த நடிகரும் இவ்வளவு கேரக்டர்களில் நடித்தது இல்லை. இந்த 25 வேடங்களில் ஒன்று தான் சுவாமி நித்யானந்தா வேடம்.
நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற படுக்கை வீடியோ படம் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அது போலியானது என்று இருவரும் மறுத்துள்ளனர். இது சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.
 
நித்யானந்தா வேடத்தில் வடிவேலு நடிக்கும் போது வீடியோ பட சர்ச்சைகள் காட்சியாக்கப்படலாம் என தெரிகிறது. ரஞ்சிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. தனது வேடத்தில் வடிவேலு நடிப்பதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
வடிவேலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எச்சரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உலகம் பட பூஜை நடந்தது.
 
ஆனாலும் படப்பிடிப்பு துவங்க வில்லை. நித்யானந்தா போல் வடிவேலு காவி உடை அணிந்து தோன்றும் காட்சிகள் போட்டோவில் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. நித்யானந்தா எதிர்ப்பால் அந்த கேரக்டர் படத்தில் இடம் பெறுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment