10 நாட்களில் சென்னை திரும்புகிறார் ரஜினி: நடிகர் தனுஷ் பேட்டிசிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்புகிறார் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரஜினி தற்போது விரைவாக குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அவர் சென்னை திரும்புகிறார்.
மருத்துவமனையில் குடும்பத்தினருடன் அவர் வழக்கமான நாட்களைப் போல நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ரஜினியின் உடல்நலம் குறித்து இணையதளம் மற்றும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்









0 comments:
Post a Comment