Premium WordPress Themes

Saturday, 28 May 2011

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

10 அணிகள் பங்கேற்ற 4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.


இறுதிகட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்து போய் விட்டது. அல்பி மோர்கல் (2 ரன்), சுரேஷ் ரெய்னா (8 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் வெய்ன் பிராவோ அடித்த சிக்சரின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களே எடுத்தது.


இதையடுத்து 20 ஓவர்களில் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணியே கோப்பையை வென்றிருந்தது.
 
 பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. அதே சமயம் பெங்களூர் அணி 2&வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து வெறுங்கையுடன் திரும்புகிறது. ஏற்கனவே 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் டெக்கானிடம் கோப்பையை பறிகொடுத்திருந்தது. 

ரஜனி தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லிய ஒலிப்பதிவு(காணொளி இணைப்பு)





Friday, 27 May 2011

நட்சத்திர கிரிக்கெட் போட்டி:முக்கிய வீரராக நடிகர் சூர்யா(பட இணைப்பு)


நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை அணியின் முக்கிய வீரராக நடிகர் சூர்யா
தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், முக்கிய நட்சத்திர வீரர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ்.
இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு சாந்தணு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிச்சயமாக சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெறும். அதற்கான பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று உரக்க சத்தம் போட்டு உற்சாகமாக சொன்னார்.
அடுத்து பேசிய சரத்குமார், ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்றார்.
மேலும் பேசிய சரத்குமார், திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.

மனிதப் பிறப்புக்களில் சில அபூர்வ பிறப்புகள்(பட இணைப்பு)


நவீன காலத்தில் மனிதப் பிறப்புக்களில் சில அபூர்வமானவையாக காணப்படுகின்றன.அப்படியான  சில அபூர்வமான பிறப்புக்களைக் கொண்ட மனிதர்கள் சிலரை நீங்கள் இங்கு பார்க்கலாம்.
















Thursday, 26 May 2011

காம பூசை அம்பலம், இந்திய (ஆ)சாமி இலங்கையில் கைது..

தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த இந்தியப் பூசரி ஒருவர் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

இவருக்கு வயது 32. இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று இருந்தார். மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அறவிட்டு வந்துள்ளார். 

இவரைச் சந்திக்கின்றமைக்கு பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்து உள்ளார்கள். தோசம் இருக்கின்றது, கழிக்க வேண்டும் என பெண்களிடம் கூறுவார். தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். 

நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி தோஷம் கழிப்பார். பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்துவார். 

இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூவர் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டமையை அடுத்து கைது இடம்பெற்று உள்ளது.

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! : பழ. நெடுமாறன்


ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.

இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

40 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் பாரிய கடற்படைத் தளம்


யாழ் மாவட்டத்தில் உள்ள மண்டைதீவுப் பகுதியில் சிறீலங்கா கடற்படையினர் அமைத்துவரும் பாரிய கடற்படைத்தளத்திற்கு தமிழ் மக்களின் 40 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

தீவுப் பகுதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலையத்தை அதிகாரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்து ஆலயங்கள், மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விளைநிலங்கள் என்பவற்றை பலவந்தமாக கையகப்படுத்த சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என அறிவித்துவரும் சிறீலங்கா அரசு திரைமறையில் உயர் பாதுகாப்பு வலையங்களை அதிகரித்து வருகின்றது. வலிகாமம் பகுதியிலும் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் 26 கிராமங்கள் உள்ளன.

மண்டைதீவு பகுதியில் சிறீலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் முட்கம்பி வேலிகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.
இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.
சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன

Wednesday, 25 May 2011

நிர்வாண விளையாட்டு(காணொளி இணைப்பு )

அமெரிக்காவில் பிரபலம் ஆகி வருகின்றது நிர்வாண விளையாட்டுக் கேளிக்கை. ஆண், பெண் இரு பாலரும் ஒளிவு மறைவு இன்றி பிறந்த மேனியாக காட்சி கொடுத்துக் கொண்டு கம்பியூட்டர் கேம்ஸ் விளையாடுகின்றார்கள். 

நியூயோர்க் நகரத்தில் இந்நிர்வாண விளையாட்டுக் கேளிக்கை நிகழ்வு ஒன்று சில நாட்களுக்கு முன் இடம்பெற்று இருந்தது. இக்கேளிக்கை நிகழ்வு தொடர்பான வீடியோ மிகுந்த பரபரப்பை இணைய உலகில் ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிக்க போகும் இளம் பெண்களுக்கு....

ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது.

பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.

ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.

92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.

ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.

செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.

உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.

உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

Monday, 23 May 2011

சிறையிலுள்ள கனிமொழியை நேரில் சென்று நலன் விசாரித்தார் கருணாநிதி


ஸ்பெக்ட்ரம்’ எனப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை டில்லி திகார் சிறையில் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
தனது மகள் கனிமொழியை பார்க்க திமுக தலைவர் கருணாநிதி நேற்று இந்தியத் தலைநகர் சென்றடைந்தார்.
ஏற்கனவே தமது மனைவிகளில் ஒருத்தரான ராசாத்தி அம்மாள் டெல்லி சென்று விட்ட வேளையில் தாமும் சென்று கனிமொழியைச் சந்தித்தால் அந்தப் பெண்ணுக்கு அது ஆறுதலாக இருக்கும் என்று கருணாநிதி முடிவெடுத்ததாக திமுக வட்டாரத்திலிருந்து தெரியவருகிறது.
நேற்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் டெல்லி செல்லவிருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ வேறு எந்தத் தலைவரையோ சந்திக்கும் எண்ணம் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.
கனிமொழியை பிணையில் விடுவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட உள்ள வேளையில் கருணாநிதி அங்கு செல்கிறார். மேல்முறையீட்டு மனுவுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. காரணம், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதாகி இருக்கும் பலரும் ஏற்கனவே மேல் முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகனாக மாறுகிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!

காமெடி நடிகர்களாக இருந்து கதாநாயகனாக நடிக்கும் பழக்கம் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே துவங்கி விட்டது. காமெடி நடிகர் தங்கவேலு ‘நான் கண்ட சொர்க்கம்’ படத்திலும், நாகேஷ் ‘சர்வர் சுந்தரம்’ உள்பட பல படங்களிலும், கவுண்டமணி, வடிவேலு என அவரவருக்கு தகுந்தபடி கதாநாயகனாக நடித்து விட்டனர்.

அந்த வரிசையில் தற்போது கஞ்சா கருப்புவும் இணைந்திருக்கிறார்.இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராப் பணிபுரிந்த தனசேகரன் என்பவரின் இயக்கத்தில் ‘மன்னார் வளைகுடா’ என்ற பெயரில் முழுக்க முழுக்க காமெடிப் படம் தயாராகிறது. இப்படத்தில்தான் கஞ்சா கருப்பு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பெங்களூர் மாடலான யோகா கதாநாயகியாக நடிக்கிறார்.

பாடல்களை சினேகன் எழுத, எஸ்.சிவப்பிரகாசம் இசையமைக்கிறார். சென்னையில் தொடங்கி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Sunday, 22 May 2011

ரஜினி நலமுடன் உள்ளார்- புகைப்படம் வெளியிட்டார் தனுஷ்(பட இணைப்பு)


ரஜினி நலமுடன் உள்ளார் என்று எத்தனையோ முறை செய்தியாக வெளியிட்டும் கூட ரசிகர்களுக்கு ஒரு சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. காரணம், அவரது திருமுகத்தை ஒருமுறையாவது புகைப்படமாக, வீடியோவாகப் பார்க்க வேண்டும் என்பதால்.
இந்த நிலையில் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ், அவரைச் சந்தித்தபோது தனது மொபைலில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, நான் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போல அவர் போஸ் கொடுத்துள்ளார்.
 
ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதால் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். இஸபெல் மருத்துவமனையில் இரண்டாம் முறை அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.

 
இருப்பினும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புதிய படங்களை விரைவில் தருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளியால் உருவாகும் விட்டமின் D யால் ஆணின் விந்து சக்தி அதிகரிக்கும்!

வெற்றுடம்பில் சூரிய ஒளி படும்போது உருவாகின்ற விட்டமின் D யால் ஆண்களின் விந்து சக்தி அதிகரிக்கின்றது என்று ஆய்வொன்றின் முலம் தெரியவந்துள்ளது. 

340 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. 

வெற்றுடம்போடு உச்சி வெய்யிலில் படுத்திருப்பதன் மூலம் இந்த சூரிய ஒளி மூலமான விட்டமின் டி யைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 

இவ்வாறு சூரிய ஒளியைப் பெற்றுக் கொண்ட ஆண்களின் விந்து பெண் கரு முட்டையை நோக்கி விரைவாக நீந்திச் செல்கின்றது. அத்தோடு அது ஆழமாக ஊடுருவியும் செல்கின்றது. 



இதனால் இத்தகைய ஆண்களுக்கு தகப்பனாகும் வாய்ப்பு அதிகம். பொதுவாக சூரிய ஒளிக்கதிர்கள் ஆண்களின் உடம்பில் படுவதால் அவர்களின் விந்தின் தரம் அதிகரிக்கின்றது. 

கொப்பன்ஹேகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். 



செயற்கைச் சூரியக் குளியல்கள் மூலம் அல்லது இயற்கையான விதத்தில் சூரியக் கதிர்களைப் பெறாதவர்களின் குருதியில் விட்டமின் டி யின் அளவு போதுமானதாக இல்லை என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. 

விட்டமின் டி உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதன் மூலம் அது கல்சியம்,பொஸ்பரஸ் என்பனவற்றின் மட்டத்தையும் உடம்பில் அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் எலும்புகள் வலுவடைகின்றன. 

விட்டமின் டி விந்து சக்தியை அதிகரிக்கும் என்பது இதற்கு முன்னரும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது

ஆடுகளம் தேசிய விருது அம்பலமாகும் உண்மைகள்..


எம்.ஜி.ஆருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தபோது அதை சிபாரிசு செய்தது தாமே என்று திமுக கூறியது. அதனால் கலையடைந்த எம்.ஜி.ஆர் அதன் பின்னர் அந்தப் பட்டத்தை பாவிக்காமலே விட்டார் என்பது அனைவரும் அறிந்த கதை. சன் பிக்சர்ஸ் ஆடுகளமும் அப்பட்டமான அரசியல் சிபாரிசு என்பதை மெல்ல மெல்ல போட்டுடைக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இன்று தமிழகத்தில் வெளியான தற்ஸ்தமிழ் செய்தி :

யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் – இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா

முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்!


ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் ‘ஹீரோயின்’ எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்

நீதிமன்றத்தில் கனிமொழி: ராஜாத்தி கண்ணீர்


திமுக எம்.பி. கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைப் பார்த்த அவரது தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியுமான ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி, விசாரணைக்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

 கனிமொழியுடன் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழி, தனது கணவர் அரவிந்தனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த திமுகவினருக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நீதிமன்றத்துக்கு காலை 10.15 மணிக்கு வந்தார். கனிமொழியைப் பார்த்தவுடன் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன்பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர். இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.

கைதான வெள்ளிக்கிழமையன்று இறுக்கமாகத் தோற்றமளித்த கனிமொழி, சனிக்கிழமை நீதிமன்றத்தில் லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார்.

 நீதிமன்ற அறைக்குள் அவசரமாக நுழைய முற்பட்டபோது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கனிமொழி பேசினார். "நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்' என்று தைரியமான தொனியில்  பதிலளித்தார்.

 தனது மகன் ஆதித்தியாவை மடியில் அமரவைத்து நீண்ட நேரம் சிரித்தபடி அவர் பேசிக்கொண்டிருந்தார்.

 மூக்குத்தி மட்டும்: சிறைச்சாலை விதிகளின்படி நகைகளை அணிய அனுமதி இல்லாததால், கனிமொழி மூக்குத்தியை மட்டுமே அணிந்திருந்தார். கழுத்து, கைகளில் தங்க நகைகள் எதுவும் காணப்படவில்லை.

 சரத்குமாரின் மனைவி அழுதுகொண்டே இருந்தார். அவரை டிபி ரியாலிட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் ஷாகித் பல்வாவின் உறவினர்கள் தேற்றினர்.

 விசாரணை முடிந்து சிறைக்குச் செல்வதற்காக நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்த கனிமொழியிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், "உங்களுக்காகவே மழை பெய்து, வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதுபோல இருக்கிறதே? எனக் கேட்டார். அதற்கு வானத்தைப் பார்த்து "நன்றி' எனக் கூறினார்.

மீண்டும் சிறைக்கு... மாலை 3.30 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் திகார் சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறும்போது தனது தாயாரின் கைகளைப் பிடித்தவாறு விடைபெற்றார் கனிமொழி. இதையடுத்து மாலை 3.45 மணி அளவில் ராஜாத்தி அம்மாளும் அரவிந்தனும் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

 ஜாமீன் மனு எப்போது? கனிமொழி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த சில நாள்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.