Premium WordPress Themes

Monday, 23 May 2011

கதாநாயகனாக மாறுகிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!

காமெடி நடிகர்களாக இருந்து கதாநாயகனாக நடிக்கும் பழக்கம் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே துவங்கி விட்டது. காமெடி நடிகர் தங்கவேலு ‘நான் கண்ட சொர்க்கம்’ படத்திலும், நாகேஷ் ‘சர்வர் சுந்தரம்’ உள்பட பல படங்களிலும், கவுண்டமணி, வடிவேலு என அவரவருக்கு தகுந்தபடி கதாநாயகனாக நடித்து விட்டனர்.

அந்த வரிசையில் தற்போது கஞ்சா கருப்புவும் இணைந்திருக்கிறார்.இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராப் பணிபுரிந்த தனசேகரன் என்பவரின் இயக்கத்தில் ‘மன்னார் வளைகுடா’ என்ற பெயரில் முழுக்க முழுக்க காமெடிப் படம் தயாராகிறது. இப்படத்தில்தான் கஞ்சா கருப்பு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பெங்களூர் மாடலான யோகா கதாநாயகியாக நடிக்கிறார்.

பாடல்களை சினேகன் எழுத, எஸ்.சிவப்பிரகாசம் இசையமைக்கிறார். சென்னையில் தொடங்கி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

0 comments:

Post a Comment