Premium WordPress Themes

Monday, 23 May 2011

சிறையிலுள்ள கனிமொழியை நேரில் சென்று நலன் விசாரித்தார் கருணாநிதி


ஸ்பெக்ட்ரம்’ எனப்படும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை டில்லி திகார் சிறையில் நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.
தனது மகள் கனிமொழியை பார்க்க திமுக தலைவர் கருணாநிதி நேற்று இந்தியத் தலைநகர் சென்றடைந்தார்.
ஏற்கனவே தமது மனைவிகளில் ஒருத்தரான ராசாத்தி அம்மாள் டெல்லி சென்று விட்ட வேளையில் தாமும் சென்று கனிமொழியைச் சந்தித்தால் அந்தப் பெண்ணுக்கு அது ஆறுதலாக இருக்கும் என்று கருணாநிதி முடிவெடுத்ததாக திமுக வட்டாரத்திலிருந்து தெரியவருகிறது.
நேற்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் டெல்லி செல்லவிருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ வேறு எந்தத் தலைவரையோ சந்திக்கும் எண்ணம் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.
கனிமொழியை பிணையில் விடுவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட உள்ள வேளையில் கருணாநிதி அங்கு செல்கிறார். மேல்முறையீட்டு மனுவுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. காரணம், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதாகி இருக்கும் பலரும் ஏற்கனவே மேல் முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment