Premium WordPress Themes

Thursday, 26 May 2011

காம பூசை அம்பலம், இந்திய (ஆ)சாமி இலங்கையில் கைது..

தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த இந்தியப் பூசரி ஒருவர் இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

இவருக்கு வயது 32. இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று இருந்தார். மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அறவிட்டு வந்துள்ளார். 

இவரைச் சந்திக்கின்றமைக்கு பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்து உள்ளார்கள். தோசம் இருக்கின்றது, கழிக்க வேண்டும் என பெண்களிடம் கூறுவார். தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். 

நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி தோஷம் கழிப்பார். பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்துவார். 

இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூவர் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டமையை அடுத்து கைது இடம்பெற்று உள்ளது.

0 comments:

Post a Comment