Premium WordPress Themes

Sunday, 22 May 2011

சூரிய ஒளியால் உருவாகும் விட்டமின் D யால் ஆணின் விந்து சக்தி அதிகரிக்கும்!

வெற்றுடம்பில் சூரிய ஒளி படும்போது உருவாகின்ற விட்டமின் D யால் ஆண்களின் விந்து சக்தி அதிகரிக்கின்றது என்று ஆய்வொன்றின் முலம் தெரியவந்துள்ளது. 

340 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. 

வெற்றுடம்போடு உச்சி வெய்யிலில் படுத்திருப்பதன் மூலம் இந்த சூரிய ஒளி மூலமான விட்டமின் டி யைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 

இவ்வாறு சூரிய ஒளியைப் பெற்றுக் கொண்ட ஆண்களின் விந்து பெண் கரு முட்டையை நோக்கி விரைவாக நீந்திச் செல்கின்றது. அத்தோடு அது ஆழமாக ஊடுருவியும் செல்கின்றது. 



இதனால் இத்தகைய ஆண்களுக்கு தகப்பனாகும் வாய்ப்பு அதிகம். பொதுவாக சூரிய ஒளிக்கதிர்கள் ஆண்களின் உடம்பில் படுவதால் அவர்களின் விந்தின் தரம் அதிகரிக்கின்றது. 

கொப்பன்ஹேகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். 



செயற்கைச் சூரியக் குளியல்கள் மூலம் அல்லது இயற்கையான விதத்தில் சூரியக் கதிர்களைப் பெறாதவர்களின் குருதியில் விட்டமின் டி யின் அளவு போதுமானதாக இல்லை என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. 

விட்டமின் டி உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதன் மூலம் அது கல்சியம்,பொஸ்பரஸ் என்பனவற்றின் மட்டத்தையும் உடம்பில் அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் எலும்புகள் வலுவடைகின்றன. 

விட்டமின் டி விந்து சக்தியை அதிகரிக்கும் என்பது இதற்கு முன்னரும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment