Premium WordPress Themes

Thursday, 26 May 2011

40 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் பாரிய கடற்படைத் தளம்


யாழ் மாவட்டத்தில் உள்ள மண்டைதீவுப் பகுதியில் சிறீலங்கா கடற்படையினர் அமைத்துவரும் பாரிய கடற்படைத்தளத்திற்கு தமிழ் மக்களின் 40 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

தீவுப் பகுதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலையத்தை அதிகாரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்து ஆலயங்கள், மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விளைநிலங்கள் என்பவற்றை பலவந்தமாக கையகப்படுத்த சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என அறிவித்துவரும் சிறீலங்கா அரசு திரைமறையில் உயர் பாதுகாப்பு வலையங்களை அதிகரித்து வருகின்றது. வலிகாமம் பகுதியிலும் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் 26 கிராமங்கள் உள்ளன.

மண்டைதீவு பகுதியில் சிறீலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் முட்கம்பி வேலிகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment