Premium WordPress Themes

Saturday, 26 March 2011

நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை! (பட இணைப்பு)

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது. 

பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34. 

வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். 

குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை. 

இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.

திருமலையில் கால்நடை வைத்திய பரிசோதனை நிலையம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானினால் திறந்து வைப்பு

தம்பலகாமம் பாரதிபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செல்வில் அமைக்கப்பட்ட கால்நடை வைத்திய பரிசோதனை நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. 

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கிழக்கு மாகாண விவசாய மீன்படி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவுடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச செலயாளர் பிரிவுகளில் இதுவரை 13 வைத்திய பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பெரிய பரிசேதனை நிலையமாக இது விளங்குகிறது. 

இதன் மூலம் தம்பலகாமம் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.



ரயிலில் மோதி உடல் சிதறிப் பலியான கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து உயிருடன் பிறந்த அதிசயக் குழந்தை!

அதிகாலையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, ரயில் மோதி, உடல் சிதறி இறந்தார். ஆனால், வயிறு கிழிந்து தண்டவாளத்தில் தொப்புள் கொடியுடன் விழுந்த ஆண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. 

தர்மபுரி மாவட்டம், மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன். இவரது மனைவி குப்பம்மாள்(32); இருவரும் கட்டடத் தொழிலாளிகள். சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்தவர்கள் சங்கனூர் ரோடு, பூந்தோட்டம் பகுதியில் குடியேறினர்.

இவர்களுக்கு ராஜதுரை(11),திருப்பதி(3) ஆகிய ஆண் குழந்தைகளும், நதியா(7), நந்தினி(5) மற்றும் ஒன்றரை வயதான தனலட்சுமி ஆகிய பெண் குழந்தைகளும் உள்ளனர். தற்போது குப்பம்மாள் நிறைமாதமாக இருந்தார். 

நேற்று அதிகாலை, 5.45 மணிக்கு, ரயில்வே தண்டவாளத்துக்கு அடுத்துள்ள புதர் பகுதியில் காலைக்கடன் கழிக்கச் சென்றவர், அங்கிருந்து திரும்பியபோது தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், கண் இமைக்கும் நேரத்தில் குப்பம்மாள் மீது மோதி, 200 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.இதில், குப்பம்மாள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதறியது. 

வயிற்றில் இருந்த குழந்தை மட்டும் கீழே தண்டவாளத்தின் நடுவே, உயிருடன் விழுந்தது. காலை 6.30 மணி அளவில், அப்பகுதிக்கு வந்த சிலர், தண்டவாளங்களுக்கு நடுவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டனர். 

ஓடிச் சென்று பார்த்தபோது, தொப்புள் கொடியுடன் அழகான ஆண் குழந்தை, ரத்த வெள்ளத்தில் அழுது கொண்டிருந்தது. 

சற்று தூரத்தில் இறந்த குப்பம்மாளின், சிதறிய உடல் பாகங்கள் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஆண் குழந்தையை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ரயிலில் அடிபட்டு உடல் சிதறிய கர்ப்பிணி யார் என அறிய போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர், கட்டடத் தொழிலாளி கோபாலின் மனைவி குப்பம்மாள் எனத் தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரிட்டனின் உல்லாசப்பிரயாணக் கடற்கரையில் ஆட்கொல்லி இராட்சத திமிங்கில நடமாட்டம்! கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கை

பிரிட்டனின் நோபோக் கரையோரப் பகுதியில் இராட்சத திமிங்கில நடமாட்டம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கரையோரப் பகுதியில் மிக மோசமான காயங்களுடன் இறந்த நிலையில் பேர்பெய்ஸ் எனப்படும் சிறிய வகைத் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

சமுத்திரவியல் நிபுணர்களின் ஆய்வின்படி இது ஒரு ஆட்கொல்லி இராட்சத திமிங்கிலத்தின் தாக்குதல் எனபது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வகை இராட்சத ஆட்கொல்லித் திமிங்கிலங்கள் போதிய உணவு கிடைக்காத பட்சத்தில் கடலில் உள்ள இது போன்ற சிறிய வகை உயிரினங்களை வேட்டையாடும் பண்பு கொண்டவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்தப் பகுதி உல்லாசப் பயணிகளின் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி, அதுமட்டுமன்றி மக்கள் கடல்சறுக்கு விளையாட்டுக்களிலும் இங்கு ஈடுபடுவதுண்டு. எனவே அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Friday, 25 March 2011

கருணா நிதி கொடுத்த காசுக்கு அதிகமாகவே பேசும் நம்ம வடிவேலு(காணொளி,பட இணைப்பு)


தேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம். வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது. 

சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக வளந்தது. 

விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் விஜயகாந்தைப் போட்டுத் தாக்கி பேசினார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

Thursday, 24 March 2011

அம்மாவுக்காக ஒரு பாடல்


Wednesday, 23 March 2011

பலர் முன்னிலையில் பேரூந்தில் காம விளையாட்டு! ஜோடிகள் இருவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினுள் பலரது முன்னிலையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பரந்தன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்பகுதி தனியார் பேருந்தில் சிங்களப் பெண்கள் இருவருடன் அனைவரதும் முன்னிலையில் ஆண்கள் இருவரும் தவறான விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். 

ஆண்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவராவார் என தெரிவிக்கப்படுகிறது. பேருந்தினுள் இரு ஜோடிகளும் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் 4 பேரையும் கைது செய்துள்ளனர். 

கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் இரு பெண்களையும் நீதிபதி எச்சரித்து விடுவித்துள்ளார். அதேவேளை ஆண்கள் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கை அகதிகளை பயன்படுத்தி கள்ள ஓட்டு போடத்தயாராகும் தமிழக கட்சிகள்!

தமிழகத்தில் உள்ள மண்டபம் முகாமில் இருக்கின்ற இலங்கை அகதிகளை பயன்படுத்தி தமிழக சட்டசபைத் தேர்தலில் கள்ள வாக்களிக்க சில கட்சிகள் இரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மாத்திரமே வாக்களிக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது. 

தற்போது அந்தமுறை தளர்த்தப்பட்டு சில ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் உள்ளனர். 

இதனால் இவர்களின் வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அகதிகளைக் கொண்டு கள்ள ஓட்டு போடுவதற்கு கட்சிகள் இரகசிய திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 

மண்டபம் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை தினமும் சரிபார்க்கப்படுவதுடன் யாரும் வெளியில் செல்லாதபடி கண்காணிக்கப்படுகிறது. 

தேர்தல் நடைபெறும் தினத்தில் இலங்கை அகதிகளுக்கு வெளியில் வேலைக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

பெண்களின் மேலாடைக்குள் (Bra) பூனைக் குட்டிகள்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

குஞ்சுகளை சிறகுகளுக்குள் வைத்து இருந்து அரவணைக்கின்றது, பாதுகாக்கின்றது கோழி. இது உண்மையான அன்பின் அடையாளங்களில் ஒன்றாகப் பேசப்படுகின்றது. 

இறைவன்கூட உயிரினங்களை இவ்வாறுதான் அரவணைக்கின்றார், கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றார் என்று புகழப்படுகின்றது. 

ஆனால் செல்லப் பிராணிகளை மிகவும் வித்தியாசமான முறையில் அரவணைத்து வைத்து இருக்கின்ற, பாதுகாக்கின்ற பெண்களும் இருக்கின்றார்கள். 

ஆம். இப்பெண்கள் செல்லப் பிராணிகளை மேலங்கிகளுக்குள் வைத்து இருந்து அரவணைக்கின்றனர், பாதுகாக்கின்றனர். 

குறிப்பாக பூனைக் குட்டிகள் மீது இத்தனிப் பிரியத்தைப் பெரிதும் காண்பிக்கின்றனர்.