Premium WordPress Themes

Wednesday, 23 March 2011

இலங்கை அகதிகளை பயன்படுத்தி கள்ள ஓட்டு போடத்தயாராகும் தமிழக கட்சிகள்!

தமிழகத்தில் உள்ள மண்டபம் முகாமில் இருக்கின்ற இலங்கை அகதிகளை பயன்படுத்தி தமிழக சட்டசபைத் தேர்தலில் கள்ள வாக்களிக்க சில கட்சிகள் இரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மாத்திரமே வாக்களிக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது. 

தற்போது அந்தமுறை தளர்த்தப்பட்டு சில ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் உள்ளனர். 

இதனால் இவர்களின் வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அகதிகளைக் கொண்டு கள்ள ஓட்டு போடுவதற்கு கட்சிகள் இரகசிய திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 

மண்டபம் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை தினமும் சரிபார்க்கப்படுவதுடன் யாரும் வெளியில் செல்லாதபடி கண்காணிக்கப்படுகிறது. 

தேர்தல் நடைபெறும் தினத்தில் இலங்கை அகதிகளுக்கு வெளியில் வேலைக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment