Premium WordPress Themes

Wednesday, 23 March 2011

பலர் முன்னிலையில் பேரூந்தில் காம விளையாட்டு! ஜோடிகள் இருவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினுள் பலரது முன்னிலையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பரந்தன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்பகுதி தனியார் பேருந்தில் சிங்களப் பெண்கள் இருவருடன் அனைவரதும் முன்னிலையில் ஆண்கள் இருவரும் தவறான விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். 

ஆண்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவராவார் என தெரிவிக்கப்படுகிறது. பேருந்தினுள் இரு ஜோடிகளும் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் 4 பேரையும் கைது செய்துள்ளனர். 

கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் இரு பெண்களையும் நீதிபதி எச்சரித்து விடுவித்துள்ளார். அதேவேளை ஆண்கள் இருவருக்கும் தலா ஒரு இலட்சம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment