Premium WordPress Themes

Saturday, 26 March 2011

திருமலையில் கால்நடை வைத்திய பரிசோதனை நிலையம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானினால் திறந்து வைப்பு

தம்பலகாமம் பாரதிபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செல்வில் அமைக்கப்பட்ட கால்நடை வைத்திய பரிசோதனை நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. 

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கிழக்கு மாகாண விவசாய மீன்படி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவுடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச செலயாளர் பிரிவுகளில் இதுவரை 13 வைத்திய பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பெரிய பரிசேதனை நிலையமாக இது விளங்குகிறது. 

இதன் மூலம் தம்பலகாமம் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.



0 comments:

Post a Comment