Premium WordPress Themes

Saturday, 26 March 2011

பிரிட்டனின் உல்லாசப்பிரயாணக் கடற்கரையில் ஆட்கொல்லி இராட்சத திமிங்கில நடமாட்டம்! கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கை

பிரிட்டனின் நோபோக் கரையோரப் பகுதியில் இராட்சத திமிங்கில நடமாட்டம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கரையோரப் பகுதியில் மிக மோசமான காயங்களுடன் இறந்த நிலையில் பேர்பெய்ஸ் எனப்படும் சிறிய வகைத் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

சமுத்திரவியல் நிபுணர்களின் ஆய்வின்படி இது ஒரு ஆட்கொல்லி இராட்சத திமிங்கிலத்தின் தாக்குதல் எனபது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வகை இராட்சத ஆட்கொல்லித் திமிங்கிலங்கள் போதிய உணவு கிடைக்காத பட்சத்தில் கடலில் உள்ள இது போன்ற சிறிய வகை உயிரினங்களை வேட்டையாடும் பண்பு கொண்டவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்தப் பகுதி உல்லாசப் பயணிகளின் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி, அதுமட்டுமன்றி மக்கள் கடல்சறுக்கு விளையாட்டுக்களிலும் இங்கு ஈடுபடுவதுண்டு. எனவே அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment