Premium WordPress Themes

Thursday, 14 July 2011

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... போலீஸ் தடியடி! (காணொளி இணைப்பு)


சென்னை: சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலையத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள்.

குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மையைத் தெரிவித்தனர்.

இதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள். ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.



ஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது. காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர்.



இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

மேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்பட்டது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும்பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவியாளர்.

0 comments:

Post a Comment