Bordeaux நகரத்தில் அவசர முதலுதவிப்படையினர் 3 வயதுக் குழந்தையொன்றை அதன் தாயின் உடலத்துக்கருகிலிருந்து மீட்டுள்ளனர். குழந்தையின் தாய் இறந்து பல நாட்கள் ஆகியிருந்துள்ளது.
இறந்தவரின் சகோதரி தன் சகோதரியிடமிருந்து சில நாட்களாக அழைப்பு எதுவும் வரவில்லையென்றும் தொலைபேசிக்கும் பதிலளிக்கவில்லையென்றும் கொடுத்த முறைப்பாட்டைஅடுத்து நான்காம்மாடியிலிருந்தஇறந்தவரின் வீட்டைத் தீயணைப்புப் படையின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து உள் நுழைந்த போது சகேதரி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அருகே நலிந்த நிலையில் 3 வயதுக் குழந்தை இருந்தது.
வீடு முழுவதும் எஞ்சியிருந்த உணவுகள் சிதறிக்கிடந்தன. குழந்தை அவற்றை உண்டும் பிஸ்கட்களையும் கேக் போன்றவற்றையும் உண்டும் இருந்துள்ளது. மருத்துவர்களின் ஊகத்தின் படி இது இயற்கை மரணமென்றும் இறந்து நாட்கள் பல ஆகியுள்ளதெனவும் தெரிவித்தனர்.உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு பராமரிக்கப்படுகின்றது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லையென வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும் இந்தக் குழந்தையின் தந்தையும் சில மாங்கள் முன்னரே இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசியாவின் பந்த பாசக் கூட்டு வாழ்க்கையை விமர்சித்துக் கொண்டு பாசங்களையும் பந்தங்களையும் தூர வைத்துவிட்டுத் தனி வாழ்க்கை வாழும் இவர்கள் வாழ்க்கை முறை இறந்தால் கூட அழுகி துர்நாற்றம் வந்தால் பிறகே அறியும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டு வருகின்றது.










0 comments:
Post a Comment