அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க முயற்சித்த போதிலும், இச்சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேட் ஓ பிளேக் கொழும்பில் தங்கியிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவ தாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தது. ஆனால் ரொபேர்ட் ஓ பிளேக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் சந்திக்க முடியாதுள்ளதாக கவலை தெரிவித்து ஜனாதிபதி செயலகம் அமெரிக்கத் தூதரகத்துக்கு கூறியிருந்ததாகவும் இவ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்க பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்குடனான சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக் தவிர்த்தமை தொடர்பில் இலங்கையின் மூத்த அமைச்சர் ராஜித சேனாரத்னவும், மேற்கத்தைய ராஜதந்திரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸு டன் இணைந்து அமைச்சர் ராஜித சேனரத்னவும் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பார்கள் என அரசாங்கத்தரப்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், ரொபேர்ட் ஓ பிளேக் குடனான சந்திப்பில் அமைச்சர் ராஜித சே ரத்ன கலந்து கொள்ளவில்லை.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டமைக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் குடும்பமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் இக் குற்றச்சாட்டு மகிந்த ராஜபக்வுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதை அவர் விரும்பவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை நிபு ணர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படை யில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் கொழும்பு முழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்விடம் ரொபேர்ட் ஓ பிளேக் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டதாலும், அதனை நேரடியாகச் சந்திப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாக ராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவின் சார்பில் இரு முக்கிய விடயங்களை வலியுறுத்தி கூறியுள்ளார். நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை கொழும்பு மேற்கொள்ளத்தவறும் பட்சத்தில், சர்வதேச பொறிமுறைகள் ஊடான விசாரணைகளை மேற்கொள்ளும்படி அமெரிக்கா வலியுறுத்தும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆரோக்கிய மான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு கொழும்பு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் ரொபேர்ட் ஓ பிளேக் அமைச்சர் பீரிஷிடம் வலியுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.









0 comments:
Post a Comment