சென்னை: நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி 'ராணா' பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இசபெல் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது.
இதையடுத்து போரூரிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குள்ள 7வது மாடியில் தனி அறையில் அவருக்கு நுரையீரல், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று, ரஜினிக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளிட்ட அறிக்கையில், 'மூச்சு விடுவதை எளிதாக்கும் விதத்தில் ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது' என தெரிவிக்கப்பட்டது. நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பிரச்னை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments:
Post a Comment