இன்று மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் அதனை கேட்பதற்கும் யாருமில்லாது அனைத்தும் கோரிக்கைகளாக மட்டும் இருக்கும் போது யாழ்ப்பாணத்துப் கள்ளுக்குடியர்களும் அவர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். யாழில் மதுசாலைகள் திறக்கும் நேரத்துக்கே கள்ளுத்தவறணைகளும் திறக்கவேண்டும் இதுதான் அவர்களின் கோரிக்கை.
கேட்கும் போது நகைப்பாக இருந்தாலும். அதிலும் சில நியாயங்கள் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.
பெருங்குடியர்கள் ஒரு சாராரை நாம் கள்ளுத் தவறணையில் சந்திக்க நேர்ந்தது இவர்கள் பனங்கள்ளுக் குடியர்கள்.
சோம பானம், தேவ பானம் என்றெல்லாம் மது பானங்களுக்கு பழங் காலத்தில் பெயர்கள் இருந்தன. ஆனால் பனம் கள்ளை தாய்ப் பாலோடு ஒப்பிட்டுப் பேசுகின்றனர் இக்குடியர்கள்.
ஆரோக்கிய பானம் என்றும் இதை வர்ணிக்கின்றனர்.

இவர்கள் வித்தியாசமான மனிதர்கள்தான். இவர்களின் தேவைகளும் வித்தியாசமானவை. இவர்கள் கூறுவதில் சில நியாயங்கள் இருந்தாலும் இதை விட இன்னும் சிந்தித்து செயற்படவேண்டிய முக்கியமான விடயங்கள் எவ்வளவோ இருக்கும்போது இக்குடியர்கள் கள்ளுக்குடிக்காக சிந்திப்பது கவலையாகத்தான் இருக்கிறது.












0 comments:
Post a Comment