Premium WordPress Themes

Tuesday, 17 May 2011

பௌத்த மயமாக காட்சியளிக்கும் தமிழர் தேசம்(காணொளி இணைப்பு)

பெளத்த மக்களின் வெசாக் தினத்தையொட்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில்  என்றும் இல்லாதவாறு வெசாக் தோரணங்களை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் மிகவும் பிரமாண்டமாக இவ்ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றன. யாழ். குடாநாட்டில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் வருகைதந்துள்ளதை காணமுடிகிறது. 

முப்படையினரால் வெசாக் அலங்காரக் கூடுகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இம் முறை முன்னேப்போதும் இல்லாதவாறு பல தமிழர் பிரதேசங்களிலும் முப்படையினர் வெசாக் கூடுகளை அமைத்துள்ளனர். 

இதேவேளை திருமலைக்கு அண்மைக் காலமாக சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. அவர்களுக்கு திருமலை ஒரு பௌத்த பூமி என காட்டும் முகமாகவே என்றுமில்லாதவாறு இம்முறை வெசாக் பண்டிகையை முப்படையினருடன் சேர்ந்து சிங்கள மக்களும் வெகு விமர்சையாக தமிழர் பிரதேசங்களில் கொண்டாடுகின்றனர்.

 

 

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாக துக்கதினமான நாளை மே 18 ஆம் திகதி உறவுகளை இழந்த மக்கள் அந்த கவலையில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் முடிவெதுவுமில்லாது மீளமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் இராணுவத்தால் தமிழர் பகுதிகளில் நாளைய தினமே இவ்வாறு வெசாக்கொண்டாட்டத்தை மேற்கொண்டுள்ளமையானது இம்மக்களின் இழப்புக்களை மேலும்  உதாசினப்படுத்துவதாய் அமைந்துள்ளதாகவே பலர் கருதுகின்றனர்.

 




0 comments:

Post a Comment