பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி என்பது பல ஆண்களுக்கு இன்னும் புரியாத புதிர். இதன் விளைவாக மறு புறத்தில் பல பெண்கள் விரக்தியுடன் காணப்படுகின்றனர்.
மூளை பற்றிய ஒரு ஆய்வு விஞ்ஞானிகளுக்கு இந்த விடயத்தில் ஓரளவு தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தூண்டப்படும்போது அவர்களது மூளையின் எந்தப் பகுதி அதிகம் செயற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
இதன் முடிவு பெண்களை மகிழ்வுறச் செய்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு வழிமுறைகள் உள்ளன என்பதாகும். ஒரு பெண் தனது பங்காளியால் தூண்டப்படும் போது மூளையின் பல பகுதிகள் சுறுசுறுப்படைகின்றன.
ஆனால் கற்பனைகளில் உலவி மகிழ்ச்சி காண்கின்ற போது பெண்களின் மூளை குறைந்த மட்டச் சுறுசுறுப்பையே அடைகின்றன.
உடல் ரீதியாக தனது அன்புக்குரிய ஒருவரால் தூண்டப்படுகின்ற போதே பெண்களின் மூளையின் எல்லாப் பகுதிகளும் சுறுசுறுப்படைகின்றன.
இரண்டு விதமான ஆய்வின் முடிவில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடல் இன்பத்தில் பெண்களின் மூளை இரண்டு வித்தியாசமான பாதைகளைக் கொண்டுள்ளது.
ஒன்று அவர்களின் தனிமையான கற்பனை உல்லாசம் மற்றது பாரியல் ரீதியான பங்காளியுடன் காணப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.









0 comments:
Post a Comment