தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் ஆத்திரமடைந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது உறவினரை திட்டித் தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தை கொடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விலைக்கு வாங்கிவிட முடியும் எனவும், அவருடன் சிறீலங்கா அரச தலைவருக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்தித் தர முடியும் எனவும் மகிந்தாவின் உறவினரான திருக்குமார் நடராஜன் தெரிவித்த கருத்தை தான் நம்பியதாகவும், ஆனால் எதிர்மறையான நிகழ்வே நடந்துள்ளதாகவும் திருவை நேரில் அழைத்த சிறீலங்கா அரச தலைவர் உரத்த சத்தத்தில் திட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்போவது தொடர்பில் தனக்கு முன்னரே தெரியப்படுத்தவில்லை எனவும் மகிந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் தான் மகிந்தாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தனக்கு தவறான தகவல்களை கூறி அமைச்சர்கள் தன்னை இருட்டில் வைத்துள்ளதாகவும் மகிந்தா தெரிவித்துள்ளதாக சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திரு என அழைக்கப்படும் திருக்குமார் நடராஜா மகிந்தாவின் உறவினரும், பிரதி அமைச்சருமான நிருபாமா ராஜபக்சாவின் கணவரும், பசில் ராஜபக்சாவின் வர்த்தக பங்குதாரருமாவார்.

0 comments:
Post a Comment