
நோய்வாய்ப்பட்ட கணவனையும் 4 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு வேறு ஒருவனுடன் ஓடிச்சென்ற தாயையும் கள்ளக் காதலனையும் குறித்த பெண்ணின் 17 வயது மகன் கத்தியால் வெட்டிய சம்பவமொன்று கிளிநொச்சி இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி முக்கொம்பன் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்திற்கு இலக்கான குறித்த ஆண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதுடன் குறித்த பெண் உயிர்தப்பிய நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று கொலைசெய்யப்பட்டவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். தாயின் நடத்தைப் பிறழ்வால் 17 வயது மகனை கொலை காரணாகவும்இ தந்தை வேறு ஒருத்தியுடன் ஓடிப்போனதால் 15 வயது சிறுமியை அநாதையாக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
கத்திக்குத்திற்கு இலக்கான குறித்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயாவார். பிள்ளைகளையும்இ நோய்வாய்ப்பட்ட கணவரையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்னுமொரு ஆணுடன் புதுமணத் தம்பதியாகச் சென்றுவிட்டார் இந்த ஆணுக்கும் நான்கு பிள்ளைகள்.

குறித்த ஆணின் மூத்த மகன்கள் இருவர் கடந்த வன்னி மண்ணின் கோரயுத்தத்தில் இறந்துவிட்டார்கள்.
மூத்த மகளும் தடுப்பு முகாமில் வாடுகிறார். இந்நிலையில் இவரின் மனைவியும் பிள்ளைகளின் கவலையால் நோய்வாய்ப்பட்டு கடந்த வருடம் இறந்துவிட்டார். வீட்டில் 10 ஆம் ஆண்டில் கல்விபயிலும் 15 வயது சிறுமி மட்டுமே.

48 வயதில் புதுப்பெண்ணுடன் புது மாப்பிள்ளையாக தன் வீட்டுக்கு தகப்பன் வர இச்சிறுமியும் அவளது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தாயையும் சகோதரர்களையும் இழந்த இந்தச் சிறுமி கவலைகளுடன் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
அதேவேளை தாய்க்குலத்துக்கே பங்கம் விளைவித்த இந்த பெண்ணின் மூத்த மகன் ஈ. ஐங்கரன் ( 17 வயது) நோய்வாய்ப்பட்ட தந்தையையும் தனது மூன்று சகோதரர்களையும் பராமரிக்காது கைவிட்டுச் சென்று ஒரு மாதம் கடந்தநிலையில் அவமானம் பொறுக்கமுடியாத இந்தச் சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை வேலை தனது தாய் இருந்த இடத்துக்குச் சென்ற தாயையும்இ குறித்த ஆணையும் கத்தியால் சரமாறியாக குத்தியுள்ளான்.

கடுமையான கத்திக்குத்தில் குறித்த ஆண் இறந்துள்ளார். ஆனால் குறித்த பெண் படுகாயங்களுடன் உயிர்தப்பிவிட்டார். வாழும் வளரும் வயதில் அதுவும் பாடசாலைப்பருவத்தில் தாயின் மிகக்கீழ்த்தரமான செயலால் கொலைகாரணாக கூண்டுக்குள் மகன் இருக்கிறான்.
இவ்வாறே தாயையும் சகோதரர்களையும் இப்போது தந்தையையும் இழந்து 14 வயதுச் சிறுமி அநாதரவாகவும் இருக்க மறுபக்கம். நோய்வாய்ப்பட்ட தந்தை ஏனைய பிஞ்சுப்பிள்ளைகள் மூவருடன் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்று வன்னி மண்ணில் இடம் பெறும் கொடுமைகளைப் பார்த்தீர்களா? பண்பாக கலாச்சாரத்தைப் பேணி வந்த வன்னி மண்ணில் யுத்தம் முடிந்ததன் பின்னர் நாளுக்கு நாள் எத்தனை எத்தனை சமூகச்சீர்கேட்டுச் சம்பவங்கள் அரங்கேருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதை கட்டுப்படுத்த அதற்கான சரியான வழிகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டியது கட்டாயத்தேவையாகும்.
இல்லையேல் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்டக்கூடிய சாதனைகள் பல புரிந்த வன்னி மண்ணுக்கே கறைகளாக அமைந்துவிடும்.









0 comments:
Post a Comment