Premium WordPress Themes

Tuesday, 19 April 2011

விஜய்க்கு சொந்தமான வீட்டின் மீது கல்லெறித்தாக்குதல்..


நடிகர் விஜய்க்குச் சொந்தமான, இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வசிக்கும் சாலிகிராமம் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு ஒன்று சாலிகிராமத்தில் உள்ளது.
ஷோபா என பெயர் பொறிக்கப்பட்டுள்ள இந்த வீட்டில்தான் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்தனர்.
திருமணமான சில ஆண்டுகளில் விஜய் குடும்பத்துடன் நீலாங்கரை பகுதிக்குப் போய்விட்டார்.
அந்த வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் விஜய்.
இந்நிலையில் இந்த வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிமுக அனுதாபியாக விஜய் மாறியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான இந்த வீடு மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலைய பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment