Premium WordPress Themes

Thursday, 21 April 2011

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்த மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு(காணொளி இணைப்பு))

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. 

வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களையும் மற்றும் அமைச்சர்கள் சிலரையும் நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து மஹிந்த ராஜபக்ஷ இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார். 

இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் பேரணிகளை நடத்த ஒழுங்கு செய்யுமாறு பணித்துள்ளார். 

அத்துடன் மே முதலாம் திகதி நடத்தப்படவுள்ள பாரிய எதிர்ப்புப் பேரணிக்கு வடக்கு, கிழக்கில் இருந்து ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் குறிப்பிட்டளவான பொதுமக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசின் மீது போர்க்குற்றங்களை சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக மே முதலாம் திகதிக்குப் பின்னர் பேரணிகளை நடத்த வடபகுதி மக்கள் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் முரளிதரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்தித்த சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களே பேரணிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே முதலாம் திகதிக்குப் பின்னரே இந்தப் பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களை படையினர் கட்டாயமாக இழுத்துச் சென்று ஐ.நா. நிபுணர்குழு அமைக்கப்பட்டதிற்கு எதிராக பேரணிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

0 comments:

Post a Comment