Premium WordPress Themes

Sunday, 17 April 2011

காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் அசிட் வீசித் தாக்குதல்

தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் அசிட் வீசித் தாக்குதல் நடத்திய காதலன் தலைமறைவான சம்பவம் ஒன்று யாழ் இளவாலைப் பகுதியில் நடைபெற்றுள்ளது. 

இளவாலை, அகஸ்தியர் வீதியைச் சேர்ந்த ஏ. லொறின் கொன்சென்ற் என்ற 25 வயது யுவதியே தாக்குதலுக்கு இலக்காகி யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது,

குறித்த பெண்ணை, தன்னைக் காதலிக்குமாறு தலைமறைவாகியுள்ள தாக்குதலை நடத்திய அந்த இளைஞன் வற்புறுத்தியுள்ளான். ஆனால் அப்பெண் அவனுடைய வற்புறுத்தலை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதனால் ஆத்திரமுற்ற இளைஞனும் அவனது சகாவும், குறித்த யுவதியின் வீட்டினுள் நேற்றிரவு 9 மணியளவில் புகுந்து குறித்த இளம் யுவதியின் முகத்தில் அசிட்டினை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான யுவதி உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உடம்பில் பல இடங்களில் எரிகாயங்கள் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து யுவதியின் பெற்றோரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தலைமறைவான அந்த இளைஞனையும் அவனது சகாவையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment