தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததினை தொடர்ந்து வன்னி பெரு நிலபரப்பை கைப்பற்றிய இலங்கை அரசு 4500 மில்லியன் பெறுமதியான தமிழ் மக்களின் நிலையான சொத்துகள் மற்றும் பயன்தரு நிலங்களை அரசுடமையாக்கி உள்ளது. இவை புலிகளால் கைவிடபட்டு இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட சொத்துகள். இவற்றில் ஒரு பகுதியை மாத்திரமே நாம் தற்போது இங்கு பகிரங்கபடுத்துகிறோம்.
தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களின் செழிப்பான வளங்கள் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டதிற்கு இன்றும் வன்னி மக்கள் அரசிடம் இருந்து எதனையும் பிரதிபலனாக பெறவில்லை.
வன்னி மக்களின் கோடிக்கணக்கான சொத்துகளை அரசுடமையாக்கி மக்களை பொருளாதார மற்றும் மனோவியல் ரீதியாக ஒரு நொந்துபோன இனமாக்கி உள்ளது இலங்கை அரசு.
கொடிய போரினால் பாதிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீண்டு எழ முடியாத இந்நேரத்தில் அரசால் இவை அரசுடமையாக்கபடுவதுதானது மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இவற்றை கண்டும் காணதவர் போல தமது மாத சம்பளத்தை மட்டும் குறியாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து வருகிறது.
மில்லியன் கணக்கான ரூபாய்களுக்காக கிளிநொச்சி மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே பல்வேறு பகுதிகளும் புலிகள் பயன்படுத்தியவை என்று கூறிக் கொண்டு இலங்கை அரசு சுவீகரித்தவற்றை பாருங்கள்.
தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவின் புலனாய்வுச் செய்தியாளர்களினால் சேகரிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல்களைக் காணலாம்.
01. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா
இப்பிரதேசத்தில் 991 ஏக்கர் பரப்புடைய நிலம் மர முந்திரிச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டது.
முன்னர் பற்றைக் காடுகளாகக் காணப்பட்ட அப்பிரதேசத்தில் தற்சமயம் 5 தொடக்கம் 7 மாதங்கள் வயதுடைய மரமுந்திரிகை மரங்கள், பலா மரங்கள், தற்காலிக முகாம்கள் மற்றும் அரை ஏக்கர் நிலப்பரப்பில் நாச்சிக்குடா பொலிஸ் நிலையமும் காணப்படுகிறது.
இந்த நிலப்பரப்பின் பெறுமதி 500 மில்லியன் ரூபாயாம். குறித்த நிலப்பரப்பை அரச நிறுவனங்கள் அரசுடமையாக்குவதன் மூலம் 500 மில்லியன் பெறுமதியான மரமுந்திரிகை பயிர் செய்கையை வருவாய் ஈட்டக்கூடிய துறையாக பயன்படுத்தலாம் என அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேச வரைபடம்

அரசுடமையாக்கபட்ட சொத்துகளை பாருங்கள்.



02. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெல்லன்குளம்
இப்பிரதேசத்தில் 520 ஏக்கர் நிலப்பரப்பு மா, பலா, தோடை மற்றும் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
மா, பலா, தோடை, மர முந்திரி பயிர் செய்கைகள் செய்யப்பட்டு 90 சதவீதம் பழங்கள் காய்த்துள்ளது. ஆயிரம் மில்லியன் ரூபாயாம் இந்நிலப்பரப்பினதும் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர் செய்கைகளின் பெறுமதி. உடனடியாக இலங்கை அரசு இதனை அரசுடமையாக்கி உள்ளது.
அப்பிரதேச வரைபடம்

அரசுடமையாக்கபட்ட சொத்தகளை பாருங்கள்.



03. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள அறிவியல் நகர்
இப்பிரதேசத்தின் 375 ஏக்கர் நிலப்பரப்பு முன்னர் பல்கலைக்கழக வளாகத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.
இதன் தற்போதைய நிலை: 8 கட்டிடத் தொகுதிகள் மற்றும் 3 களஞ்சியக் கட்டிடங்கள், நீர்ப்பாசன வசதி காணப்படுகிறது.
2 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க நிலப்பரப்பாகக் காணப்படுகின்றது.
சுமார் 2000 மில்லியன் செலவு செய்யப்பட்டு கட்டபட்டுள்ளது. இந்த தமிழர்களின் சொத்து அரசுடமையாக்கபட்டுள்ளது.
அரசுடமையாக்கபட்ட சொத்துக்களை பாருங்கள்.









04. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவெளி பிரதேச செயலகம்
இப்பிரதேசத்தில் 142 ஏக்கர் பரப்பு கொண்ட கல்மடு முன்னர் சகல வசதிகளையும் கொண்ட நவீன அரிசி ஆலை.
ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிடத்தக்க நிலப்பரப்பும் முதலீடும் உள்ளது. இந்த 1000 மில்லியன் பெறுமதியான அரசி ஆலை அரசுடமையாக்கபட்டுள்ளது.
அரசுடமையாக்கபட்ட சொத்துக்களை பாருங்கள்.




இப்பொழுது பார்த்தீர்களா தமிழர் பகுதிகளை அழித்து மக்களையும் அழித்து பின்னர் அந்தப் பிரதேசத்தை ஏலத்தில் விற்று அதன் மூலம் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாய்களைக் கொண்டு தென்பகுதியை அபிவிருத்தி செய்வதில் குறியாக உள்ளது அரசு.
தமிழர் தாயகப் பிரதேசம் என்ற ஒன்றை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இயங்கி வரும் அரசு ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற தமிழர் பிரதேசங்கள் துண்டாடியுள்ளது.
அதே போல் வன்னியிலும் இன்று தனது தமிழர்களின் சொத்தகளை அரசுடமையாக்கும் திட்டத்தை எந்தவித சத்தமும் இன்றி ஆரம்பித்து விட்டது.
இனியும் தமிழர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசம் காணாமல் போய்விடும் என்பது உறுதி.
இது தொடர்பாக எமக்குக் கிடைத்த ஆவணம்









0 comments:
Post a Comment