Premium WordPress Themes

Sunday, 17 April 2011

காணாமல் போன உரும்பிராய் மாணவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் கேரதீவு பிரதேசத்தின் சங்குப்பிட்டி கடலில் குளித்துக்கொண்டிருந்தவேளையில் நீரில் மூழ்கி காணாமற்போன மாணவன் நேற்று மாலை மீனவர்களினால் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். 

தரம் 9 இல் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதான ஸ்ரீகாந் நிமலன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார். 

குறித்த மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். 

ரியூசன் (பிரத்தியேக) வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவருடன் கல்விச் சுற்றுலாவுக்கு சென்றிருந்த மேற்படி மாணவன், கேரதீவு – சங்குப்பிட்டிக் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment