Premium WordPress Themes

Wednesday, 20 April 2011

கிளிநொச்சியில் ஆவியாம்! பீதியில் மக்கள்.

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இறந்த ஒருவரின் ஆவி நடமாடுவதாக தெரிவிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகின்றது. 

கடந்த 12 ஆம் திகதி அப்பகுதியில் மெக்கானிக் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது ஆவி அப்பகுதியிலுள் வெதுப்பகத்திற்கு நள்ளிரவில் சென்று பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் பெயரை கூறி அழைத்ததாகவும் அவர்களிடம் பசிக்கின்றது எனக்கு பாண் தாருங்கள் என்று கேட்டதால் அங்கிருந்தவர்கள் கதவை அடைத்து விட்டு கூச்சலிட்டுள்ளனர். 

இதனால் கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்துள்ளனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியதும் இச்செய்தி காட்டுத் தீ போல் அப்பகுதியெங்கும் பரவிவிட்டது. 

இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் மக்கள் தமது நடமாட்டங்களை குறைத்துள்ளதாகவும் ஆவி நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மக்கள் கருதுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 comments:

Post a Comment